"மேடம் நில்லுங்க, பதில் சொல்லிட்டு போங்க" .. திண்டுக்கல்லில் இளைஞர் வழிமறித்ததால் ஆவேசமடைந்த ஜோதிமணி
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் தேர்தல் பிரச்சாரத்தின் போது கரூர் லோக்சபா தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியிடம் இளைஞர் ஒருவர், "உங்களுக்குத்தானே ஓட்டு போட்டேன்" என கேள்வி கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்காக அனைத்து கட்சி தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதன் ஒரு பகுதியாக திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டசபை தொகுதிக்குள்பட்ட நாகம்பட்டி, ஒட்டநாகம்பட்டி, கருக்காம்பட்டி, குட்டம், காசிபாளையம் உள்ளிட்ட இடங்களில் கரூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது நாகம்பட்டியில் தேர்தல் பிரச்சாரத்தின் போது விநாயகர், காளியம்மன் கோயில்களில் ஜோதிமணி வழிபாடு நடத்தினார். அவரை ஆதரித்து வேடசந்தூர் சட்டசபை தொகுதி உறுப்பினர் காந்திராஜன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
நாகம்பட்டியில் தேர்தல் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு ஜோதிமணி பிரச்சார வாகனத்தில் இருந்து இறங்கி புறப்பட சென்றார். அப்போது ஜோதிமணியை அந்த பகுதி இளைஞர் ஒருவர் இடைமறித்து தேர்தல் வாக்குறுதியில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தருவதாக கூறினீர்களே, நான் உங்களுக்குத்தான் ஓட்டு போட்டேன்.
ஆனால் எனக்கு வேலை கிடைக்கவில்லை என கூறி வாக்குவாதம் செய்தார். இதற்கு பதில் சொல்லாமல் ஜோதிமணி விர்ரென காரில் ஏறினார். ஆனாலும் அந்த இளைஞர் தொடர்ந்து வாக்குவாதம் செய்துக் கொண்டே இருந்தார். அப்போது திடீரென அவர் காரை விட்டு இறங்கி வந்தார். அங்கிருந்த செய்தியாளர்களை ஜோதிமணி அழைத்தார்.
அப்போது அவர்களிடம் இது போன்று இளைஞர்கள் வேலைவாய்ப்பு வேண்டும் என கேட்கிறார்கள். கடந்த 42 ஆண்டுகளாக இல்லாத வேலைவாய்ப்பின்மை தற்போது மோடியின் அரசாங்கத்தில் நிலவுகிறது. இது போல் வேலை கேட்கும் ஒவ்வொரு இளைஞர்களுக்கும் வேலை வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்றால் நரேந்திர மோடியின் ஆட்சி அகற்றப்பட வேண்டும்.
ராகுல் காந்தி தலைமை தாங்கும் இந்தியா கூட்டணி ஆட்சியில் அமர வேண்டும். நாங்கள் ஆட்சி செய்த போது வேலைவாய்ப்பு இல்லை என ஒருவர் கூட கேட்டிருக்க மாட்டார்கள். அதனால் வேலைவாய்ப்புகளை நாம் உருவாக்க வேண்டும். அந்த வேலை வாய்ப்புகள் உருவாக்குவதற்கு மீண்டும் ராகுல் காந்தி பிரதமராக வர வேண்டும் என கூறிவிட்டு மீண்டும் காரில் ஏறி சென்றார். ஜோதிமணியின் ஆவேசமான பேச்சு அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. எனினும் அந்த இளைஞர் விடாமல் மேடம் நில்லுங்க, எனக்கு பதில் சொல்லுங்கள் என்றபடியே கூறிக் கொண்டிருந்தார்.
கரூரில் ஜோதிமணி தனது சொந்த கிராமத்தில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவருக்கு அம்மாவின் நினைவு வந்துவிட்டதால் கண் கலங்கினார். அப்போது ஒரு வயதான பெண் ஒருவர், அழாதீங்க, நாங்களும் உங்களுக்கு அம்மா மாதிரிதான் என தெரிவித்தனர். இதனால் அந்த பகுதியில் நெகிழ்ச்சியான சூழல் நிலவியது.
இதைத் தொடர்ந்து ஜோதிமணி கூறுகையில் நான் 5 ஆண்டுகளாக எம்பியாக இருந்துள்ளேன். என்னால் முடிந்தவரை சிறப்பாக பணியாற்றியுள்ளேன். பல ஊர்களில் திட்டங்களைக் கவனிக்க வேண்டி இருந்ததால் நமது ஊருக்கு வரவே இரவாகிவிடும். அந்தளவுக்கு பணிச்சுமை இருந்தது. அம்மா இருந்திருந்தால் என சொன்ன போது பேச முடியாமல் கண்ணீர் விட்டார்.
-
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications