கொடைக்கானல் போறீங்களா? கிறிஸ்துமஸ்க்கு "சிலுவை பூக்கள்" பூத்துருச்சாமே.. குலுங்குது சிலுவைப்பூக்கள்
திண்டுக்கல்: மலைகளின் இளவரசியான கொடைக்கானலில், கிறிஸ்துமஸ் பண்டிகையை வரவேற்கும் விதத்தில், சிலுவைப்பூக்கள் பூத்து குலுங்குகின்றன.. இது சுற்றுலா பயணிகளை ஈர்த்து வருகிறது.
வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது.. அந்தவகையில், கொடைக்கானலிலும், கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது.. இதன்காரணமாக, கடுமையான குளிர் நிலவி கொண்டிருக்கிறது. இந்த குளிர் காரணமாகவும், தற்போது, அரையாண்டு தேர்வுகள் நடைபெற்று வருவதாலும், சுற்றுலா பயணிகள் வருகை குறைவாகவே உள்ளது.

புத்தாண்டு: எனினும், கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகை வரப்போவதால், அதற்காக மலர் தயாரிப்பு பணிகள் ஏற்பாடாகி வருகின்றன.. பிரையண்ட் பூங்காவில் பூச்செடி நாற்றுகளை நடவும் பணிகளும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. பூச்செடிகள் கண்ணாடி மாளிகையில் வைக்கப்பட்டிருக்கின்றன..
அந்தவகையில், சிலுவை பூக்களும் பூக்க துவங்கி உள்ளன.. ஆங்கிலேய ஆட்சி காலத்தில், இந்த தாவரங்களை கொடைக்கானலுக்கு வெளிநாட்டினர் இறக்குமதி செய்தார்களாம்.. வழக்கமாக டிசம்பர் மாதத்தில் இந்த சிலுவை பூக்கள் பூக்கும்.. இந்த சிலுவை பூக்களின் தாவரவியல் பெயர் எபிடன்ரோபியம், சீசஸ்கிராஸ் ஆகும்..
சிலுவை பூக்கள்: கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவிலும், எம்.எம்.தெரு, குறிஞ்சி நகர் உள்பட நகரின் பபல்வேறு இடங்களிலும் சிலுவை பூக்கள் பூத்துகுலுங்குவது வழக்கமாகும்..
இந்த மலர்களின் மகரந்த இதழ்கள், சிலுவை வடிவில் இருப்பதால், சிலுவை பூக்கள் என்று அழைக்கிறார்கள். மஞ்சள், சிகப்பு, இளஞ்சிவப்பு, கருஞ்சிவப்பு, போன்ற கலர்களில் இந்த சிலுவை பூக்கள் காட்சி தரும்.. சிலுவை மலர்கள், குளிர்பிரதேசங்களில் மட்டும் பூக்கக்கூடியதாகும்.. அதேபோல நிழலில் மட்டுமே வளரும் தன்மை கொண்டது.
டிசம்பர் மாதம்: தற்போது டிசம்பர் மாதம் என்பதால், இந்த சிலுவை பூக்கள் பூத்து குலுங்குகின்றன.. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர். எப்படியும் இந்த வார இறுதியில், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும்.. இதைத்தொடர்ந்து கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை கொண்டாட ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications