கொடைக்கானல் போறீங்களா? சுற்றுலா பயணிகளே உஷார்! இதை செஞ்சா கடுமையான தண்டனை கன்பார்ம்!
திண்டுக்கல்: கொடைக்கானல் அஞ்சு வீடு அருவி உள்ளிட்ட அனுமதிக்கப்படாத அருவிகளுக்குச் சென்று பார்வையிட மற்றும் குளிக்க முற்படும் சுற்றுலாப்பயணிகளின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்திருக்கும் நிலையில் தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல மாவட்டங்களில் நீர் நிலைகள் வேகமாக நிரம்பியுள்ளன. சென்னை, திருவள்ளூர் தொடங்கி கன்னியாகுமரி வரை உள்ள குளம், குட்டைகள் ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. குறிப்பாக வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூர் என மேற்கு மாவட்டங்களிலும் கனமழை வெளுத்து வாங்கியுள்ளது. இதனால் புதிய அருவிகள் உருவாகியிருக்கின்றன.

மேற்கு மாவட்டங்களிலேயே இப்படி எனில், கொடைக்கானலில் சொல்லவே வேண்டாம். கனமழை காரணமாக புதிய அருவிகள் உருவாகியிருப்பதால் அதில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்துள்ளனர். குறிப்பாக அஞ்சு வீடு அருவி உள்ளிட்ட இடங்களுக்கு போக சுற்றுலா பயணிகள் முயற்சிக்கின்றனர். ஆனால் இந்த அருவி ஆபத்தானது என்று வனத்துறையினர் எச்சரித்துள்ளனர். இதுவரை இந்த அருவியில் 15 பேர் உயிரிழந்திருக்கின்றனர். எனவே புதிய அருவிகளுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் சுமார் அஞ்சு அருவியில், பொள்ளாச்சியை சேர்ந்த சுமார் 11 பேர் குளிக்க சென்றனர். இதில் நந்தக்குமார் எனும் மருத்துவக்கல்லூரி மாணவர் எதிர்பாராத விதமாக அருவிக்கு அடியில் சிக்கிக்கொண்டார். அவரை இரண்டு நாட்களுக்கு பிறகு சடலமாக தீயணைப்பு துறையினர் மீட்டுள்ளனர். தொடர் உயிரிழப்புகள் காரணமாக இந்த அருவி, சுற்றால தளம் பட்டியலிலிருந்து நீக்கப்படுவதாக வருவாய் துறையினர் அறிவித்திருக்கின்றனர்.
இந்நிலையில், கொடைக்கானல் அஞ்சு வீடு அருவி உள்ளிட்ட அனுமதிக்கப்படாத அருவிகளுக்குச் சென்று பார்வையிட மற்றும் குளிக்க முற்படும் சுற்றுலாப்பயணிகளின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும், அத்தகைய அருவிகளுக்கு அழைத்துச் செல்லும் சுற்றுலா வழிகாட்டிகள் மீது காவல்துறை மூலம் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவம் மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார். எனவே கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் செல்லும்போது கவனமாக இருக்க வேண்டும்.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்?












Click it and Unblock the Notifications