Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எங்க பார்த்தாலும் கஞ்சா, சரக்கு! திண்டுக்கல்லை திருத்தாம விட மாட்டேன்! பால் காய்ச்சிய பாமக வேட்பாளர்

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் திண்டுக்கல்லில் பாமக சார்பில் போட்டியிட்ட திலகபாமா தற்போது திண்டுக்கல்லுக்கே குடி வந்திருப்பதாக தெரிவித்துள்ளார். திண்டுக்கல்லில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருக்கும் நிலையில் இங்கேயே இருந்து மக்களுக்காக போராட போவதாக பேசி பரபரப்பை கிளப்பி இருக்கிறார்.

மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக இந்தியாவில் நடைபெற்று வரும் நிலையில் முதற்கட்டமாக தமிழகத்தில் மே 19ஆம் தேதி நடைபெற்றது. தமிழகத்தைப் பொறுத்தவரை நான்கு முனை போட்டி நிலவியது.

Lok sabha election 2024 PMK candidate Thilagabama settled in a new house in Dindigul

அதிமுக, திமுக, பாஜக கூட்டணி அமைத்தும் நாம் தமிழர் கட்சி தனித்தும் போட்டியிட்டது. வாக்குப் பதிவு முடிவடைந்திருக்கும் நிலையில் வாக்கு எண்ணிக்கை வரும் 4ஆம் தேதி நடைபெற இருக்கிறது. அப்போது தமிழகத்திலிருந்து நாடாளுமன்றம் செல்லப் போவது யார் என தெரிந்து விடும்.

திலகபாமா: இந்த தேர்தலில் பாஜக கூட்டணியில் இடம் பெற்றிருந்த பாட்டாளி மக்கள் கட்சி 10 தொகுதிகளில் போட்டியிட்டது. திண்டுக்கல் தொகுதியில் கட்சியின் பொருளாளரும் கவிஞருமான திலகபாமா போட்டியிட்டார். தேர்தல் பிரச்சாரத்தின் போது தாரை தப்பட்டை அடிப்பது, கரும்பு ஜூஸ் போட்டு கொடுப்பது, வடை சுடுவது என சமூக வலைதளங்களில் அவர் பெயர் எப்போதும் இருக்கும்படி பார்த்துக் கொண்டார்.

தேர்தல் நிறைவு: அதே நேரத்தில் திமுக அதிமுக கூட்டணிக்கு அவர் சவால் அளிப்பது மிகவும் சிரமமான காரியம் தான் என்கின்றனர் திண்டுக்கல் பாமகவினர். காரணம் பாமகவில் உட்கட்சி அரசியலால் நிறைய நிர்வாகிகள் பிரச்சாரத்திற்கே வரவில்லை. பல பிரச்சினைகளுக்கு நடுவே தான் அவர் பிரச்சாரம் மேற்கொண்டார். ஒரு வழியாக வாக்குப் பதிவு நிறைவடைந்திருக்கும் நிலையில் வேட்பாளர்கள் வாக்கு எண்ணிக்கைக்காக காத்திருக்கின்றனர். வெளியூரிலிருந்து போட்டியிட்ட வேட்பாளர்கள் தங்கள் சொந்த ஊரில் தங்கி இருக்கின்றனர்.

திண்டுக்கல்லில் வீடு: இந்த நிலையில் திண்டுக்கல்லில் சட்டம் ஒழுங்கு சரியில்லை எங்கு பார்த்தாலும் கஞ்சா விற்பனை மது விற்பனை நடைபெறுகிறது. எனவே திண்டுக்கல்லிலேயே தங்கி இருந்து மக்களுக்காக சேவை செய்யப் போவதாக அதிரடியாக அறிவித்து பால் காய்ச்சி புது வீட்டுக்கு குடி வந்திருக்கிறார் பாமக வேட்பாளரான திலகபாமா. திலகபாமாவின் சொந்த ஊர் திண்டுக்கல் அருகே இருக்கும் பட்டிவீரன்பட்டி. திருமணம் செய்தது சிவகாசியில்..

வாக்கு எண்ணிக்கை: தற்போது சிவகாசியிலும் சென்னையிலும் வசித்து வரும் அவர் கடந்த சட்டமன்றத் தேர்தலில் திண்டுக்கல்லில் அமைச்சர் ஐ.பெரியசாமியை எதிர்த்து ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டார். அந்த தொகுதியில் டெபாசிட் இழந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மீண்டும் அவரை நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளராக களம் இறக்கியது பாமக. பிரச்சாரத்தின் போது வாக்காளர்களை கவர்வதற்காக பல்வேறு வியூகங்களை அவர் வகுத்திருந்தாலும் அவை வாக்குகளாக மாறியதா என்பது வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு தான் தெரியவரும்.

மக்களுக்கு சேவை: இந்த நிலையில் தான் தோற்றாலும் ஜெயித்தாலும் பரவாயில்லை திண்டுக்கல் மக்களுக்கு நான் சேவை செய்வேன் எனக்கூறி தற்போது திண்டுக்கல்லில் புது வீட்டில் குடியேறி இருக்கிறார் திலகபாமா. இதுதொடர்பாக பேசிய அவர்,"திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் தற்போது போட்டியிட்டு உள்ளேன். பிரசாரத்திற்கு சென்ற போது மக்கள் என்னிடம் அவர்கள் பிரச்சனை குறித்து பல்வேறு பகுதிகளில் புகார் மனுக்கள் அளித்தனர்.

Lok sabha election 2024 PMK candidate Thilagabama settled in a new house in Dindigul

மக்கள் பிரச்சினை: இதன் காரணமாக திண்டுக்கல்லிலேயே வீடு பிடித்து இன்று பால் காய்ச்சி இன்றிலிருந்து தங்க உள்ளேன். திண்டுக்கல் மாவட்டத்தில் எந்த பிரச்சனைகள் இருந்தாலும் பொதுமக்கள் என்னை நேரடியாக சந்தித்து புகார் மனுக்களை கொடுக்கலாம். திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் கஞ்சா ,போதைப் பொருள் விற்பனை தாராளமாக விற்பனையாகிறது. சந்து சந்துக்கு மது விற்பனை நடைபெறுகிறது. தற்போது சில்லிங் என்ற பெயரில் அனைத்து பகுதிகளிலும் மதுபானம் விற்பனையானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

நடவடிக்கை இல்ல: மேலும் அனுமதி இல்லா மதுபான பார்கள் இயங்கி வருகின்றன. அதேபோல மனமகில் மன்றம் என்ற பெயரில் சீட்டு விளையாட்டு கிளப் ஒவ்வொரு பகுதிகளிலும் பெருகிவிட்டது. தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது யாரிடம் புகார் அளித்தாலும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுப்பது கிடையாது. எனவே மக்களுக்காக போராட நானே வந்துள்ளேன்" என கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+