இதோ வர்றேன்.. இருங்கடி.. உங்களுக்கு எல்லாம் இதுதான் கடைசி தேர்தல்.. மாத்தறேன்.. மன்சூர் கோபாவேசம்
திண்டுக்கல் பிரச்சார கூட்டத்தில் தமிழக அமைச்சர்களை மன்சூர்அலிகான் சரமாரி விமர்சித்தார்.
Recommended Video

திண்டுக்கல்: எம்பி பொறுப்பை எனக்கு தாங்க.. இந்த கேடு கெட்ட அரசியல்வாதிகளின் பருப்பை எடுக்கிறேன்.. என்று மன்சூர் அலிகான் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சி சார்பில் திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் நடிகர் மன்சூன் அலிகான் போட்டியிடுகிறார். கிட்டத்தட்ட அந்த தொகுதியில் மன்சூரலிகானே தனக்கான பிரச்சாரத்தை செய்து கணிசமான வாக்கு வங்கியில் உள்ளதாக சொல்கிறார்கள்.
ஆனால் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று மன்சூர் அலிகானுக்கு பிரச்சாரம் செய்தார். சீமான் வந்ததாலோ என்னவோ, புது புது கெட்டப்களில் இருந்த மன்சூர், நேற்று அவர்கள் கட்சி சின்னமான கரும்பு விவசாயி போல வந்திருந்தார். பனியன், லுங்கி, தலையில் ஒரு பச்சை துண்டு கட்டி பார்ப்பதற்கு விவசாயி போலவே இருந்தார். அப்போது மன்சூரலிகான் பேசியதாவது:

கோவணம்
கரும்பு விவசாயி போல டிரஸ் பண்ணிக்கிட்டு வரணும்னு நினைச்சு வந்தேன். அப்படின்னா நான் கோவணம் கட்டிக்கிட்டு தான் வரணும். அதுதான் நம்ம உடை. சொல்ல முடியாது.. நாளைக்கு நான் கோவணம் கட்டிக்கிட்டு பாராளுமன்றம் போனாலும் போவேன். பாக்கத்தான் போறீங்க. ஏற்கனவே இங்க என்னை பார்த்து என்ன சொல்றாங்கன்னா.. நான் விளம்பரத்துக்குதான் இப்படியெல்லாம் செய்றேன்னு சொல்றாங்க.

வெங்காய சட்னி
அப்படி இல்லீங்க.. மனசாரதான் மக்கள்கிட்ட நெருங்கி போறேன். ஒரு வீட்டில் 48-வது நாள் காரியம் நடக்குது. வெயில்ல உட்கார்ந்து அரை மூட்டை தக்காளி அரிஞ்சி குடுத்துட்டு வந்தேன். இது ஒரு பாக்கியம். அதேபோல ஒரு அம்மா மகன் ஸ்கூலுக்கு கிளம்பிட்டான்னு அவசர அவசரமா வெங்காய சட்னி ஆட்டிட்டு இருந்துச்சு. நானும் அரைச்சு குடுத்துட்டேன். எங்க அம்மாவுக்கு நான் இப்படித்தான் ஆட்டாங்கல்ல ஆட்டி தருவேன். ஒரு சந்து பொந்து விடறது இல்லை. எல்லாரையும் நேர்ல பாக்க வேண்டி இருக்கு. இல்லாட்டி கோச்சுப்பாங்க இல்லையா?

கார்ப்பரேட் கூலிகள்
நான் இந்த தொகுதியை கவனிச்சிட்டு வர்றேன்.. அடப்பாவிகளா.. வெறும் 50 மீட்டர்தான் தூரம்.. இங்க குவாரி இருக்கு.. அங்க வீடு இருக்கு.. எப்படிங்க ஒரு கலெக்டர் இதுக்கு உத்தரவு தரலாம்? அதே மாதிரி மலைகள் மேல எப்படிங்க கை வைக்கலாம். நாம் தமிழர் விடாது.. கார்ப்பரேட் கூலிகளை கால் பிடறியில் இடர்பட ஓட ஓட விரட்டுவோம். இது ஒங்கப்பாரானை சத்தியமா சொல்றேன். நான் விட மாட்டேன்.

ராவு காலம்
பாராளுமன்றத்துக்கு போவேன்,. குரல் வளையை பிடிப்பேன். இந்தியில, மராட்டியில், உருதுல எதுல தேவையோ அதுல பேசுவேன். நான் திராவிட வம்சம் இல்லையா.. அதனால ராவு காலத்திலதான் மனுவே தாக்கல் பண்ணேன்.

டார்ச் அடிக்கிறான்
50 வருஷம் ஆண்ட இந்த கட்சிகள் மீட்டிங்குக்கு ஆளை கூட்டிட்டு வந்துட்டு இருக்காங்க. 100 பெண்களை கூனிக்குறுகி திணிச்சு ஒரு வண்டியில அடைச்சு கூட்டிட்டு வர்றாங்க. 50 வண்டிங்க போகுது.. 16 ரோடுகள்ல இப்படி கூட்டிட்டு போறாங்க. அவங்கள போலீஸ்காரங்க எதுவுமே கேட்கறது இல்லை. நான் போனா மட்டும், என்னை டார்ச் அடிச்சு பார்க்கறான். சார் கொஞ்சம் எந்திரிங்க, பையை காட்டுங்க-ன்னு சொல்றான்.

எம்பி பொறுப்பு
திண்டுக்கல் பகுதியில் இயற்கை வளம் கொட்டிக்கிடக்க. மலைகள், அரியவகை காய்கறிகள், கனிகள், பூக்கள் அவ்வளவும் இருக்கு. ஆனா இந்த களவாணிகள் அரசியல்வாதிகள், மலைகளை குடைஞ்சு, நீராதாரமே போய்டுச்சு. இதோ வர்றேன்.. இருங்கடி உங்களுக்கு எல்லாம் இதுதான் கடைசி தேர்தல்.. எல்லாத்தையும் மாத்தறேன். எம்பி என்ற பொறுப்பை எனக்கு தாருங்கள்.. இந்த கேடு கெட்ட அரசியல்வாதிகளின் பருப்பை நான் எடுக்கிறேன்" என்று பேசினார்.
-
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications