ரத்தம் சொட்ட சொட்ட நின்ற ரபீக்.. கையில் ஊசியுடன் வந்த முனியாண்டி.. பீதியை கிளப்பும் வீடியோ!
பிணவறை ஊழியர் சிகிச்சை அளிக்கும் வீடியோ வைரலாகிறது
Recommended Video
கொடைக்கானல்: ரத்தம் சொட்ட சொட்ட வந்த நோயாளிக்கு, பிணவறை ஊழியர் முனியாண்டி ஊசி போட்டு, தையல் போடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி பீதியை கிளப்பி வருகிறது.
கொடைக்கானல் அருகே உள்ள மூஞ்சிக்கல் பகுதியைச் சேர்ந்தவர் ரபீக். 36 வயதாகிறது. இவருக்கு வலது கையில் பலமாக அடிபட்டு விட்டது. அதனால் சிகிச்சை பெற கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார்.

ஆனால் அப்போது ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் யாரும் இல்லை. 3 நர்ஸ்கள்தான் இருந்தனர். கையில் ரத்தம் சொட்ட சொட்ட வந்த ரபீக்கை ஒரு பெஞ்சில் படுக்க வைத்தனர். டாக்டர் தான் வரப்போகிறார் என்று ரபீக் நினைத்திருந்த வேளையில் முனியாண்டி கையில் ஊசியுடன் வந்தார். அவர் அந்த ஆஸ்பத்திரியின் பிணவறை ஊழியர்.
ஸ்டூலை இழுத்து போட்டுக் கொண்டு, முனியாண்டி ரபீக்குக்கு தையல் போட்டார். வலியால் துடித்த ரபீக் அரை மயக்கத்தில் இதை பார்த்து அலறியே விட்டார். இந்த காட்சியை அங்கிருந்த சிலர் செல்போனில் படம் பிடித்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.
வீடியோ வைரலாகி, கொடைக்கானல் மருத்துவ அதிகாரி பாலாஜியிடமும், மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குனருக்கும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரை பார்த்து அதிகாரி பாலாஜி அரண்டு போய்விட்டார். ஏனென்றால், முனியாண்டி வேலையை விட்டு நின்று பல வருஷம் ஆயிடுச்சாம்.
இவர் எப்படி சிகிச்சை அளித்தார், தற்காலிக ஊழியரா என்ற விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதை தவிர அங்கிருந்த 3 நர்ஸ்களிடமும் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. மனித உயிரோடு விளையாடும் இந்த அக்கிரமத்துக்கு என்றுதான் முடிவோ என்று மக்கள் புலம்புகின்றனர்.












Click it and Unblock the Notifications