விண்ணை முட்டிய கரகோஷம்.. இசைஞானி இளையராஜாவிற்கு கவுரவ டாக்டர் பட்டம்.. வழங்கினார் பிரதமர் மோடி!
திண்டுக்கல்: சின்னாளபட்டி காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், மிருதங்க வித்வான் உமையாள்புரம் சிவராமன், இசையமைப்பாளா் இளையராஜா ஆகியோருக்கு கெளரவ டாக்டா் பட்டத்தை பிரதமா் நரேந்திர மோடி வழங்கினார்.
திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைகழகத்தின் 36ஆவது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, தமிழக ஆளுநா் ஆர்என் ரவி, முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்றனர்.
தங்கப்பதக்கம் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பிரதமர் மோடி பட்டங்களையும் பதக்கங்களையும் வழங்கினார்.
இசையமைப்பாளர் இளையராஜாவிற்கு இன்று கவுரவ டாக்டர் பட்டத்தினை பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார்.

இளையராஜா
தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான இளையராஜா மூன்று தலைமுறையுடன் இணைந்து இசையமைத்துள்ளார். இதுவரை ஆயிரத்திற்கு மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்த இளையராஜா தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு என பல மொழி படங்களுகளுக்கு இசையமைத்துள்ளார். மேலும், இவர் மாநிலங்களவை எம்.பி.யும் ஆவார்.

இளையராஜாவிற்கு பாராட்டு
திருவாசகத்தை சிம்பொனி இசை மூலம் உலகறியச் செய்வதவர் என்றும் விக்ரம் படத்திற்கு புதிய வடிவத்தில் இசையை அளித்தவர் என்று காந்தி கிராம பல்கலைக்கழகத்தில் பாராட்டு உரை வாசித்தனர். கடந்த ஜூலை மாதம் இளையராஜாவுக்கு மாநிலங்களவை நியமன எம்பி பதவி வழங்கப்பட்டது. இதன் பின்னர் பிரதமர் மோடியை இசையமைப்பாளர் இளையராஜா சந்திக்காத நிலையில், இந்த நிகழ்ச்சியில் முதல்முறையாக சந்திக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

உமையாள்புரம் சிவராமன்
இளையராஜாவை அடுத்து மிருதங்க வித்வான் உமையாள்புரம் சிவராமன் அவர்களுக்கும் கவுரவ டாக்டர் பட்டத்தை பிரதமர் மோடி வழங்கினார். 1935ல் பிறந்த சிவராமன் இசை மீது தீராத பற்று கொண்டிருந்தார். இந்த பற்றுதான் அவரை 10 வயதில் அரங்கேற்றத்தை நோக்கி அழைத்து சென்றுள்ளது. இவருடைய தனிச்சிறப்பே, பாடகரின் குரலுக்கேற்ப சங்கீதத்தை வளைத்து கொடுக்கும் தன்மைதான். தமிழக அரசின் ஆஸ்தான வித்வானாக ஏழு ஆண்டுகள் இருந்துள்ளார். மிக உயரிய விருதான பத்ம விபூசன் பட்டம் பெற்றுள்ளார். மிருதங்க சக்கரவர்த்தி திரைப்படத்தில் சிவாஜிக்காக மிருதங்கத்தை வாசித்துள்ளார்.

5வது பிரதமர்
காந்திகிராம பல்கலைக்கழகத்தில் ஜவகர்லால்நேரு, இந்திராகாந்தி, முராஜிதேசாய், ராஜீவ்காந்தி என 4 பிரதமர்கள் வந்துள்ளனர். அந்த வகையில் காந்திகிராம பல்கலைக்கழகத்திற்கு வருகை தந்துள்ளது 5-வது பிரதமர் மோடி ஆவார். பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு மதுரை மற்றும் திண்டுக்கல் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அங்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையினரும், போலீசாரும் குவிக்கப்பட்டு உள்ளனர்.
-
"மும்மொழி கொள்கை வைத்து பிரச்சாரம் செய்யும் தைரியம் இருக்கா.?" பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் சவால் -
சிபிஎஸ்இ-யில் அறிமுகமாகும் மும்மொழி கொள்கை.. ஸ்டாலின் எதிர்ப்புக்கு மத்திய கல்வி அமைச்சர் கொடுத்த பதில் -
“வீட்டுச் சிறையில் கருணாநிதி? அதிமுக ஆட்சி அமைந்ததும் விசாரித்து தண்டனை கொடுப்போம்”- எடப்பாடி பேச்சு -
மத்திய அரசின் முடிவு.. கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது.. தமிழச்சி தங்கப்பாண்டியன் பதிவு -
“தனது பெயர்ப் பலகையை காப்பாற்றிக் கொள்ள டெல்லிக்கு ‘காவடி’ தூக்குகிறார் எடப்பாடி” - ஸ்டாலின் தாக்கு! -
6ஆம் வகுப்பு முதல் மும்மொழி கொள்கை! இந்தி திணிப்பை கண்டித்து சிபிஎஸ்இக்கு ஸ்டாலின் கண்டனம் -
கடைசிக் காலத்தில் கலைஞர் சிறைப்படுத்தப்பட்டிருந்தாரா? உண்மைக்கு மாறானது.. வைரமுத்து -
புதுவையில் ஏப்.6-ல் ராகுல் பிரச்சாரம்! ஸ்டாலினும் மாலையில் பரப்புரை! -
கருணாநிதியை வீட்டுச் சிறையில் வைத்திருந்தேனா? நாக்கில் நரம்பிருக்கா பழனிசாமி? ஸ்டாலின் ஆவேசம் -
செல்வமகள் சேமிப்பு திட்டம்.. நீங்க கணக்கு வச்சு இருக்கீங்களா?.. ஒரு இன்ச் கூட நகராது.. ஷாக் தகவல் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம்












Click it and Unblock the Notifications