திண்டுக்கல் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

என்னோட ராசி நல்ல ராசி..எல்லாமே உங்களோட ஆசி.. சுபிட்சமா இருக்கோம்..முதல்வர் ஸ்டாலின்

Google Oneindia Tamil News

திண்டுக்கல்: என்னோட ராசி நல்லா இருக்கு.. நிறைய மழை பெய்கிறது.. நாடே சுபிட்சமாக இருக்கிறது எல்லாம் உங்களுடைய ராசியும்தான்.. நீங்கள்தான் எனக்கு வாக்களித்து தேர்ந்தெடுத்தீர்கள் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழகத்தில் கடந்த ஓராண்டு காலமாகவே நல்ல மழை பெய்து வருகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழைகள் அபரிமிதமாக பெய்தன. அணைகள் நிரம்பி வழிந்தன. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

மேட்டூர் அணையில் தண்ணீர் 100 அடிக்கு மேல் நீடித்ததால் மே மாதமே குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த ஆண்டு வழக்கமான அளவை விட தென்மேற்கு பருவமழை கொட்டித்தீர்த்தது. வடகிழக்கு பருவமழையும் நல்ல முறையில் பெய்து வருகிறது. எங்கு பார்த்தாலும் தண்ணீர் நிரம்பி வழிகிறது.

சூப்பர்.. 50,000 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு.. கரூரில் இன்று ஆணைகள் வழங்கும் முதல்வர் ஸ்டாலின் சூப்பர்.. 50,000 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு.. கரூரில் இன்று ஆணைகள் வழங்கும் முதல்வர் ஸ்டாலின்

விவசாயிகள் மகிழ்ச்சி

விவசாயிகள் மகிழ்ச்சி

கடந்த பத்து ஆண்டு காலமாகவே பருவமழை சரியான அளவு பெய்வதால் உபரி நீர் காவிரியில் வெளியேற்றப்படுவதால். தமிழகம் கர்நாடகா இடையே காவிரி நதிநீர் பங்கீடு பிரச்சினை ஏற்படவில்லை.
இந்த ஆண்டு மே மாதமே மேட்டூர் அணை திறக்கப்பட்டதால் காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் மூன்று போக சாகுபடி செய்யும் நிலை உருவாகியுள்ளது.

மழை பெய்தாலும் பெய்யாவிட்டாலும்

மழை பெய்தாலும் பெய்யாவிட்டாலும்

மழை பெய்து அணைகள் நிரம்பினால் ஆட்சியாளர்கள் மகிழ்ச்சியடைவார்கள். காரணம்.. இவரது ஆட்சி காலத்தில் நன்றாக மழை பெய்து நாடு செழிப்பாக இருந்தது. தண்ணீர் பஞ்சமே ஏற்படாது என்று மக்கள் பேசிக்கொள்வார்கள். அதனால்தான் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கூட ஒரு கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின். மழை பெய்தாலும் வெள்ளம் வந்தாலும் என்னைத்தான் குற்றம் சொல்வார்கள். மழை பெய்யாவிட்டாலும் என்னைத்தான் குற்றம் சொல்வார்கள் என்று கூறி ஆதங்கப்பட்டார்.

மகிழ்ச்சியாக பேசிய முதல்வர்

மகிழ்ச்சியாக பேசிய முதல்வர்

ஈரோட்டில் திமுக நிர்வாகியின் இல்லத்திருமண வரவேற்பு விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடியின் வருகை காரணமாக முதல்நாளே வரவேற்பு விழாவில் பங்கேற்றதாக கூறினார். இந்த நிகழ்வில் பங்கேற்றதன் மூலம் கட்சிக்கு நிதியாக ரூ. 5 லட்சம் நன்கொடை கிடைத்ததாகவும் தெரிவித்தார்.

ராசி எப்படி என்று பார்க்கலாம்

ராசி எப்படி என்று பார்க்கலாம்

2024ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்காக முதன் முறையாக நிதி அளித்துள்ளார் நிர்வாகி. இவரது கை ராசி எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம். பணம் கொட்டுமா என்று தெரிந்து விடும் என்று ராசி பற்றி பேசி கலகலப்பூட்டினார். எத்தனையோ சோதனைகளை சந்தித்து மீண்டிருக்கிறோம் என்று பேசினார்.

தொடர் மழையால் சேதம்

தொடர் மழையால் சேதம்

தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டு பருவமழை கொட்டியது. 1996ஆம் ஆண்டு சென்னையில் நான் மேயராக இருந்த போது பெருமழை பெய்தது. அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி, சென்னை மேயராக ஸ்டாலின் எப்போது வந்தாரோ அன்று முதலே மழை விடாமல் பெய்கிறது என்று சொன்னது என்னுடைய காதில் ஒலிக்கிறது. அதுபோல இப்போதும் மழை கொட்டி வருகிறது.

என்னோட ராசி நல்ல ராசி

என்னோட ராசி நல்ல ராசி

நம்ம அதிர்ஷ்டம் பாருங்க தண்ணீர் கஷ்டமே நாட்ல இனி கிடையாது. அது நம்ம ராசி..என்னோட ராசி மட்டுமல்ல..உங்களோட ராசியும்தான். நீங்கள்தானே எனக்கு வாக்களித்து தேர்வு செய்திருக்கிறீர்கள் என்று கூறினார் ஸ்டாலின். அந்த ராசியினால்தான் இன்றைக்கு பருவமழை பெய்து கொண்டிருக்கிறது.

English summary
Chief Minister Stalin said that my rasi is good It is raining a lot The country is healthy and everything is your rasi You are the one who voted for me.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X