தாய்மொழி எல்லோருக்கும் அவசியம்.. ஆனா, நாங்க தேசிய கட்சியாச்சே! பட்டும் படாமல் நயினார் நாகேந்திரன்
திண்டுக்கல்: திமுக ஆட்சியில் பாலியல் வழக்கு பல உள்ளது, அந்த அனைத்து வழக்குகளும் என்ன ஆனது? என ஸ்டாலினிடம் கேட்க வேண்டும் எனவும், நாங்கள் அகில இந்திய கட்சி எல்லா மாநிலங்களும் ஒன்றாக இருக்க வேண்டும். எல்லா மொழிகளும் ஒன்றாக இருக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
பாஜக முருக பக்தர் மாநாடு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் திண்டுக்கல் நத்தம் சாலையில் அமைந்துள்ள பாஜக அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்.
பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்," ஆளுநர் பயந்து போல் சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் கொடுத்துள்ளார் என ஸ்டாலின் கூறியது தவறான கருத்து. மக்களின் புரிதலை மாற்றுகிறது. ஏனென்றால் முன்பு சட்டமன்றத்தில் கொண்டு வந்த தீர்மானத்திற்கு ஆளுநர் ஏன் மறுப்பு தெரிவித்தார்.

அதற்கு நீட் தேர்வுக்கு உதாரணமாக ஒன்றை கூறுகிறேன். நீட் தேர்வு குறித்த அதிமுக காலத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்டு ஆளுநர் ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்யப்பட்டு நிராகரிப்பு செய்யப்பட்டது. நடக்காத விஷயத்தை, நடைபெற முடியாத விஷயத்தை திரும்பவும் அரசியல் ஆதாயத்திற்காக முதலமைச்சர் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவோம் என தேர்தலில் கூறினார். திமுக கொண்டு வந்ததுதான் நீட் தேர்வு.
காங்கிரஸ் ஆட்சியில் திமுக அங்கம் வகிக்கும் பொழுது நீட் தேர்வு கொண்டுவரப்பட்டது. இப்போது வேண்டாம் என்று தீர்மானம் கொண்டு வந்து போகாத ஊருக்கு முதலமைச்சர் வழி சொல்கிறார். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆளுநருக்கு தான் அதிகாரம் வேண்டும் என சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தார். ஆனால் தற்போது உள்ள முதலமைச்சர் ஆளுநருக்கு அதிகாரம் வேண்டாம் தங்களுக்கு தான் அதிகாரம் வேண்டும் என கூறுகிறார். முன்னாள் முதலமைச்சருக்கும் இன்னாள் முதலமைச்சருக்கும் உள்ள பல்வேறு முரண்பாடுகள் உள்ளது. தமிழக மக்களுக்கு நன்மை செய்யக்கூடிய வகையில் எதுவுமில்லை.
மத்திய அரசிடம் நிதி வாங்கி நன்மை செய்ய வேண்டும். ஒவ்வொரு காரியத்திலும் முதலமைச்சர் ஈடுபடுகிறாரா என்றால் இல்லை. மொழியை வைத்து அரசியல் செய்கிறார் இதற்கெல்லாம் ஒரு விடிவு காலம் வர வேண்டும் மக்களை ஏமாற்றுகின்ற அரசியல்வாதிகளை அரசியலில் இருந்து அகற்ற வேண்டும். நல்லவர்கள் ஆட்சிக்கு வர வேண்டும்.
அவரவர்களுக்கு அவரது தாய்மொழி முக்கியம். இதில் அவர்கள் பேசியது தவறு. இவர்கள் பேசியது என நான் கருத்து சொல்ல முடியாது. என்னைப் பொறுத்தவரையில் எனது தாய் மொழி பெரியது. தமிழிசை சௌந்தரராஜன் மன்னிப்பு தானே அதைக் கேட்க வேண்டியது தான் அரசியல் பேசுபவர்கள் நிதானமாக பேச வேண்டும் அதனை கமல்ஹாசன் தவறி உள்ளார் என்று கூறியுள்ளார்.
மாநிலங்களுக்கு இடையே ஒற்றுமை வேண்டும் என்பது நூற்றுக்கு நூறு சதவீதம். ஏனென்றால் நாங்கள் அகில இந்திய கட்சி எல்லா மாநிலங்களும் ஒன்றாக இருக்க வேண்டும். எல்லா மொழிகளும் ஒன்றாக இருக்க வேண்டும். நமது நாடு, நமது மொழி, நமது தேசியம் என எல்லோருக்கும் வேண்டும்.
அண்ணாமலை ஆதாரப்பூர்வமாக சில விஷயங்களை கூறியுள்ளார். அவர்களும் ஆதாரப்பூர்வமாக பதில் கூறினால் நன்றாக இருக்கும். என்னை பொருத்தவரை அதே பிரச்சனை தான். அதே கேள்வியை தான் நானும் கேட்கிறேன். நீதிமன்ற கருத்துக்கள் நான் செல்லவில்லை. அதே நேரத்தில் காவல் துறை குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யும்பொழுது சரியான முறையில் தாக்கல் செய்திருந்தால் அந்த சாருக்கும் விடை தெரிந்திருக்கும்.
இப்போது அவசரம் அவசரமாக திமுக ஆட்சிகள் வந்து நான்கு ஆண்டுகள் ஆகியிருக்கிறது. எத்தனையோ பாலியல் வழக்கு 2024 இல் துணை முதல்வர் ரசிகர் மன்றத்தை சேர்ந்த கவிதாஸ் பாலியல் பலாத்காரம் செய்தார். அந்த வழக்கு என்ன ஆனது? அண்ணா நகர் மனநலம் குன்றிய பெண்ணை ஒரு வருடமாக பத்து பேர் பாலியல் துன்புறுத்தல் செய்து இருந்தனர். அந்த வழக்கு என்ன ஆனது? 10 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்த மனு கொடுக்க போன பெற்றோர் மீது புகார் சொன்ன வழக்கு என்ன ஆனது? என்ன ஆனது என்ன ஆனது என அண்ணாச்சியிடம் கேட்க வேண்டும். இதற்கு மட்டும் ஏன் இந்த அவசரம் மனசாட்சியுடன் சிந்தித்து பார்க்க வேண்டும். இந்த வழக்கில் யாரை காப்பாற்றுவதற்காக என்று தெரியவில்லை" என்றார்.
-
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள்












Click it and Unblock the Notifications