டாக்டர் கனவு.. மகளுக்காக பெற்றோர் பார்த்த வேலை! நேஷனல் லெவல் ஃப்ராடு கும்பலுடன் லிங்க்! பரபர தகவல்
திண்டுக்கல்: திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் நீட் தேர்வு மதிப்பெண்ணில் முறைகேடு செய்து சேர முயன்ற மாணவி மற்றும் அவரது பெற்றோரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில், அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் போலி சான்றிதழ் காருண்யா ஸ்ரீவர்ஷினி மற்றும் தாயார் விஜய முருகேஸ்வரி மேற்குவங்கத்தை சேர்ந்த கும்பலுக்கு ரூ.25ஆயிரம் கொடுத்து போலி சான்றிதழை பெற்றுள்ளார் என தெரிய வந்துள்ளது. இதையடுத்து போலி சான்றிதழை உருவாக்கி கொடுத்தவர்களின் விவரங்களை சேகரிக்கும் பணியில் குற்றப்பிரிவு போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழநியை சேர்ந்தவர் சொக்கநாதர். 55 வயதான இவர் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நில அளவையராக உள்ளார். இவரின் மனைவி விஜய முருகேஸ்வரி. இவர்களது மகள் காருண்யா ஸ்ரீவர்ஷினி. பிளஸ் 2 படித்து முடித்த இவர், மருத்துவம் படிக்க வேண்டும் என ஆசைப்பட்டார்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடந்த நீட் தேர்வை எழுதிய காருண்யா ஸ்ரீவர்ஷினி 228 மதிப்பெண்கள் பெற்றார். இதையடுத்து நடந்த முதற்கட்ட மருத்துவ கவுன்சிலிங்கில் இவருக்கு சீட் கிடைக்கவில்லை.

திண்டுக்கல் நீட் மோசடி
ஆனாலும், மருத்துவம் படிக்க வேண்டுமென பிடிவாதமாக இருந்துள்ளார் காருண்யா ஸ்ரீவர்ஷினி. இதனால், பெற்றோர் மற்றும் நீட் முறைகேடு கும்பலுடன் இணைந்து 456 மதிப்பெண் பெற்றதாக நீட் போலி மதிப்பெண் சான்றிதழ், திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இடஒதுக்கீடு கிடைத்ததற்கான போலியான சான்றிதழ் ஆகியவற்றை தயார் செய்துள்ளார். தொடர்ந்து திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லுரியில், சான்றிதழ் சரிபார்ப்புக்கு பிறகு அவருக்கு அட்மிசன் வழங்கப்பட்டது.
திண்டுக்கல் மருத்துவக் கல்லூரி
தொடர்ந்து, மருத்துவ மாணவர்களுக்கான முதலாம் ஆண்டு வகுப்பு தொடங்கப்பட்ட நிலையில், மாணவர் சேர்க்கை விவரங்கள் சென்னை மருத்துவக் கல்வி இயக்குனரகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு நடந்த சரிபார்ப்பு பணியில் காருண்யா ஸ்ரீவர்ஷினி, நீட் தேர்ச்சி மற்றும் கவுன்சிலிங் இட ஒதுக்கீட்டுக்கான சான்றிதழ்களை போலியாக தயாரித்துக் கொடுத்து மருத்துவப்படிப்பில் நுழைந்திருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டது.
போலி மார்க் சீட்
இது குறித்து திண்டுக்கல் மருத்துவக்கல்லுாரி பொறுப்பு முதல்வர் வீரமணி கொடுத்த புகார் படி குற்றப்பிரிவு டி.எஸ்.பி., குமரேசன், விசாரணை நடத்தி காருண்யா ஸ்ரீவர்ஷினி, அவருக்கு உடந்தையாக செயல்பட்ட தந்தை சொக்கநாதர், தாய் விஜய முருகேஸ்வரி 3 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி கடந்த 7ஆம் தேதி சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்று காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் இந்த வழக்கின் முக்கிய திருப்பம் ஏற்பட்டிருக்கிறது.
மேற்கு வங்க கும்பல்
காருண்யா ஸ்ரீ வர்ஷினியும், அவரது தாயான விஜய முருகேஸ்வரியும் எங்கிருந்து போலி சான்றிதழை பெற்றுள்ளார்கள் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். அதில் முருகேஸ்வரியும் காருண்யா வர்ஷினியும் மேற்கு வங்கத்தை சேர்ந்த கும்பல் மூலம் போலி சான்றிதழை பெற்றது தெரியவந்தது. புரோக்கர் ஒருவர் மூலம் மேற்கு வங்கத்தை சேர்ந்த போலி சான்றிதழ் கும்பலை தொடர்பு கொண்டு அவர்கள் 25 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்து இந்த போலிச் சான்றிதழை பெற்றுள்ளது தெரியவந்துள்ளதாக கூறியுள்ளனர் போலீசார். தொடர்ந்து போலிச் சான்றிதழை உருவாக்கிக் கொடுத்தவர்களின் விவரங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இதே போல வேறு யாரேனும் போலிச் சான்றிதழ்கள் கொடுத்து மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளார்களா என்ற விசாரணையும் தனியே நடைபெற்று வருகிறது.
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications