ரெண்டு நாள்ல அழுகிப் போற தக்காளியே இப்படின்னா.. நாங்க என்ன சும்மாவா! வெலவெலக்க வைக்கும் வெங்காயம்!
திண்டுக்கல்: வடமாநிலங்களில் பெய்த கனமழையால் திண்டுக்கல் வெங்காய மார்க்கெட்டிற்கு சின்ன வெங்காயம் வரத்து குறைந்ததால் தற்போது விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தற்போது 1 கிலோ சின்ன வெங்காயம் 80க்கும், பெரிய வெங்காயம் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும் விற்பனையாகும் நிலையில், வெளி மார்க்கெட்டில் 100 ரூபாய் வரை விற்கப்படுவதால் இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தென் மாவட்டங்களிலேயே வெங்காயத்திற்கென தனி சந்தை இரு இடங்களில் பிரம்மாண்டமாக உள்ளது. திண்டுக்கல் வெங்காயத்திற்கு என்று தனி சந்தையானது திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று தினங்களில் நடைபெறும்.

இந்தச் சந்தைக்கு திண்டுக்கல், வேடசந்தூர், ஒட்டன்சத்திரம், தேனி, கம்பம் ,தாராபுரம், உடுமலைப்பேட்டை, திருப்பூர் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் வெள்ளாமை ஆகக்கூடிய வெங்காயங்களை இந்தச் சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம்.
இங்கு வரக்கூடிய வெங்காயங்களை சென்னை, திருச்சி, தஞ்சை, கோவை,மதுரை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் கேரளா, ஆந்திரா போன்ற வெளிமாநிலங்களுக்கும் சிங்கப்பூர், மலேசியா, இலங்கை போன்ற வெளிநாடுகளுக்கும் வியாபாரிகள் விற்பனைக்கு வாங்கி செல்வர். சென்ற மாதம் 350 டன் சின்ன வெங்காயங்கள் வரக்கூடிய இடத்தில் வரத்து அதிகரித்து நாள் ஒன்றுக்கு 500 டன் சின்ன வெங்காயங்கள் வருகை தந்ததால் ஒரு கிலோ சின்ன வெங்காயம் 40 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை விற்பனையானது.
இந்நிலையில் மகாராஷ்டிராவில் இருந்து வெங்காயம் திண்டுக்கல் மார்க்கெட்டிற்கு கொண்டுவரப்பட்டு இங்கிருந்து பல பகுதிகளுக்கு அனுப்பிவைக்கப்படுகிறது. மார்க்கெட் செயல்படும் 3 நாட்களில் ஒரு நாளைக்கு 25 லாரிகளில் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து வெங்காயம் வந்திறங்கும். தற்பொழுது திண்டுக்கல், தேனி, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், திருப்பூர் போன்ற மாவட்டங்களில் சின்ன வெங்காயம் நடவு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.
நடவு செய்யப்பட்ட புது வெங்காயம் 2 மாதம் கழித்து விற்பனைக்கு வரும் அதுவரை ஏற்கனவே இருப்பு வைக்கப்பட்டிருந்த சின்ன வெங்காயத்தை விவசாயிகள் விற்பனைக்காக வெங்காய மார்க்கெட்டிற்கு கொண்டு வருகின்றனர். இதனால் வெங்காயத்தின் வரத்து குறைவாக உள்ளது இன்று (06.12.2024) மட்டும் 50 கிலோ எடை கொண்ட சின்ன வெங்காயம் 2,500 மூட்டைகள் விற்பனைக்கு வந்துள்ளது. இதன் காரணமாக சின்ன வெங்காயத்தின் விலை சற்று உயர்ந்துள்ளது.
கடந்த வாரம் வெங்காய மார்க்கெட்டில் மொத்த விலையில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் அதன் தரத்தை பொறுத்து கிலோ 30 முதல் 50 வரை விற்பனையானது. ஆனால் தற்பொழுது விற்பனைக்கு வரக்கூடிய சின்ன வெங்காயம் விளைச்சல் குறைந்து வரத்து குறைவாக உள்ளதால் அதன் தரத்தை பொறுத்து 80 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சில்லறையில் 5 முதல் 10 வரை கூடுதலாக வைத்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஏற்கனவே கனமழை காரணமாக தக்காளி, பீன்ஸ், கேரட், கத்தரிக்காய் உள்ளிட்ட காய்கறிகள் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. வெங்காயத்தின் விலை ஏற்ற இறக்கமாக இருக்கும் நிலையில் தற்போது மழை உச்சம் அடைந்திருக்கும் நிலையில் விலை அதிகரித்து வருவது இல்லத்தரசிகளை கவலை கொள்ள வைத்துள்ளது. மேலும் வரும் நாட்களில் இன்னும் வெங்காயத்தின் விலை உயர்வதற்கே வாய்ப்பு இருப்பதாக கூறி அதிர வைக்கின்றனர் வியாபாரிகள்.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications