பழனி நில மோசடி வழக்கு.. வெள்ளத்துரைக்கு நோ ஜாமீன்! சிபிசிஐடியின் அடுத்த ப்ளான்! பரபர விசாரணை

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: பழனி நில மோசடி வழக்கில் வெள்ளத்துரை ஜாமீன் மனு தள்ளுபடி செய்துள்ளது திண்டுக்கல் குற்றவியல் நீதிமன்றம். மேலும், சேதுபதி ஜாமீன் மனு ஆகஸ்ட் 3 ஆம் தேதி திண்டுக்கல் குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் நிலையில், பழநி நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுக்க சிபிசிஐடி போலீசார் திண்டுக்கல் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள நிலையில், ஆகஸ்ட் 5ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.

திண்டுக்கல் மாவட்டம் பழநி பூங்கா ரோட்டில் தண்டபாணி சுவாமி மடத்துக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பு நிலம் மோசடியாக பத்திரப்பதிவு செய்த வழக்கில் சி.பி.சி.ஐ.டி.,போலீஸ் 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Palani land scam Government Land CBCID

இந்த வழக்கில் இதுவரை நடந்த விசாரணையின் அடிப்படையில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த அறக்கட்டளை நிர்வாகி முருகதாஸ், மோசடியாக நிலம் வாங்கிய திருப்பூர் மாவட்டம் பாப்பன்குளம் வெள்ளத்துரை, பழநி புதுார் சேதுபதி, பத்திரம் தயாரித்து கொடுத்த வழக்கறிஞர் அன்வர்தீன் ஆகிய நால்வரை சிபிசிஐடிபோலீசார் கைது செய்தனர்.

இதுதொடர்பாக நுாற்றுக்கும் மேற்பட்ட நபர்களிடம் விசாரணை நடத்தி அவர்களின் சாட்சியங்கள், ஆதாரங்கள் ஆவணங்களாக சேகரிக்கப்பட்டுள்ளது. மோசடியில் தொடர்புடைய பத்திர எழுத்தர் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த ஜெயபிரகாஷ் தலைமறைவாக உள்ளார். விசாரணையில், ஜூலை 29ல் மதுரை விமான நிலையத்திலிருந்து அவர் வெளி மாநிலத்திற்கு தப்பிச்சென்றது சென்றது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகதாஸ், வெள்ளைத்துரை, சேதுபதி, அன்வர்தீன் ஆகிய நால்வரையும் சி.பி.சி.ஐ.டி., 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடிவுசெய்துள்ளது. இதற்காக திண்டுக்கல் முதலாவது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு ஆக.,5ல் விசாரணைக்கு வருகிறது.

இதற்கிடையில் ஜாமீன் கேட்டு வெள்ளத்துரை, சேதுபதி தரப்பில் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி வெள்ளைத்துரை ஜாமீன் மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு இருதரப்பு வாதங்கள் கேட்கப்பட்டன. தொடர்ந்து அவரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி பாக்கியராஜ் உத்தரவிட்டார். இந்நிலையில் விசாரணைக்கு வந்த சேதுபதியின் ஜாமீன் மனு, ஆக.3 விசாரணைக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+