எல்லாம் எங்க முருகனுக்கே! கட்டுக் கட்டாய் பணம்.. கொட்டி கிடந்த தங்கம்! மெய்சிலிர்க்க வைத்த பக்தர்கள்
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் அருள்மிகு பழநி தண்டாயுதபாணி சுவாமி மலை கோயிலில் இன்று நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் 3 கோடியே 81 லட்சத்து 86 ஆயிரத்து 614 ரூபாய் பணத்தை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். மேலும், வெளிநாட்டு கரன்சிகள் 729 நோட்டுகள், தங்கம் 1,893 கிராம், வெள்ளி 11,979 கிராமும் கிடைத்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அமைந்துள்ள அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருகை தருவர்.

ஒரு நாளைக்கு 50 ஆயிரம்
முதல் பக்தர்கள் வரும் நிலையில் திருவிழா காலங்களில் லட்சக்கணக்கில் பக்தர்கள் திரண்டு முருகப்பெருமானை தரிசிக்க வருவது வழக்கம். இந்த நிலையில் தற்போது வைகாசி மாதம் மற்றும் முகூர்த்த தினங்கள் காரணமாக பக்தர்கள் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகரித்துக் காணப்படுகிறது.

இந்த பணமானது மாதம் ஒருநாள் எண்ணப்படுவது வழக்கம். திருக்கோயில் வளாகத்தில் கல்லூரி மாணவர்கள் தன்னார்வலர்கள் வங்கி ஊழியர்கள் பணத்தை எண்ணும் பணியில் ஈடுபடுவது வழக்கம். இந்த நிலையில் இந்த மாதம் பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை எண்ணும் பணி மலை மீது நடைபெற்றது. உண்டியல் எண்ணிக்கையில் வங்கி ஊழியர்கள், கோயில் ஊழியர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள், கல்லூரி பேராசியர்கள் கலந்து கொண்டனர்.

இந்த பணமானது மாதம் ஒருமுறை இரண்டு முதல் 3 நாட்களுக்கு எண்ணப்படுவது வழக்கம். திருக்கோயில் வளாகத்தில் கல்லூரி மாணவர்கள் தன்னார்வலர்கள் வங்கி ஊழியர்கள் பணத்தை எண்ணும் பணியில் ஈடுபடுவது வழக்கம். இந்த நிலையில் இந்த மாதம் பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை எண்ணும் பணி மலை மீது நடைபெற்றது. உண்டியல் எண்ணிக்கையில் வங்கி ஊழியர்கள், கோயில் ஊழியர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள், கல்லூரி பேராசியர்கள் கலந்து கொண்டனர்.

அந்த வகையில் பழனிக்கோயிலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கைகள் இரண்டு நாட்களாக உண்டியல்கள் திறக்கப்பட்டு மலைக்கோயில் கார்த்திகை மண்டபத்தில் வைத்து எண்ணப்பட்டது. இதில் இரண்டு நாளில் பக்தர்களின் காணிக்கை வரவு மொத்தம் 3கோடியே 81 இலட்சத்து 86 ஆயிரத்து 614 ரூபாய் கிடைத்துள்ளது. வெளிநாட்டு கரன்சிகள் 729 நோட்டுகள் கிடைத்துள்ளது. உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக தங்கம் 1,893 கிராமும், வெள்ளி 11979 கிராமும் கிடைத்தது. உண்டியல் எண்ணும் பணியில் திருக்கோயில் பணியாளர்கள், வங்கி ஊழியர்கள், கல்லூரி மாணவிகள் என சுமார் ஐநூறுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

-
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
கடவுள் முன் அனைவரும் சமம் எனும்போது விஐபி தரிசனம் ஏன்? தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications