ஜஸ்ட் மிஸ்! ஒரே ஒரு மார்க்கால் 600 போச்சு! பிளஸ் 2 தேர்வில் பழனி ஓவியாஞ்சலி 599 மார்க்! யார் இவர்?
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த மாணவி ஓவியாஞ்சலி என்பவர் தற்போது வெளியான பிளஸ் 2 தேர்வில் 600-க்கு 599 மதிப்பெண்களை பெற்று சாதனை படைத்துள்ளார்.
இவர் ஆங்கிலத்தில் மட்டும் 99 மதிப்பெண்களும் ஏனைய பாடங்களில் 100-க்கு 100 மதிப்பெண்களையும் பெற்றுள்ளார்.

தமிழகத்தில் 2024-2025 ஆம் கல்வியாண்டில் பிளஸ் 2, எஸ்எஸ்எல்சி தேர்வுகள் கடந்த மார்ச் 3 முதல் மார்ச் 25 ஆம் தேதி வரை நடைபெற்றன. பிளஸ் 2 தேர்வை 8.21 லட்சம் மாணவர்கள், 3316 தேர்வு மையங்களில் எழுதியிருந்தனர்.
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நாளை வெளியாகும் என சொல்லப்பட்ட நிலையில் ஒரு நாள் முன்கூட்டியே இன்றே வெளியாகியுள்ளன. தமிழகத்தில் இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் 91.94 சதவீதமும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 95.71 சதவீதமும் தனியார் பள்ளிகளில் 98.88 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகளே அதிக தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த மாணவி ஓவியாஞ்சலி 600-க்கு 599 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். இவர் ஆங்கிலத்தில் 99 மதிப்பெண்களையும் மற்ற பாடப்பிரிவுகளில் 100-க்கு 100 மதிப்பெண்களையும் பெற்றுள்ளார்.
அது போல் பல்லடத்தை சேர்ந்த ராகுலும் 599 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ளார். இதையடுத்து இவர்களுக்கு வாழ்த்துகள் குவிகின்றன. அவர் பழனியில் உள்ள பாரத் வித்யாபவன் பள்ளியில் படித்தார். அது போல் திருப்பூரைச் சேர்ந்த அறிவியல் பாடப்பிரிவை எடுத்து படித்த எஸ்.ருத்ரமூர்த்தி என்பவர் 598 மதிப்பெண்களை பெற்றுள்ளார்.
சென்னையைச் சேர்ந்த அறிவியல் பாடப்பிரிவை எடுத்து படித்த ஆர்.லட்சுமிகாந்த் என்பவர் 597 மதிப்பெண்களை பெற்றுள்ளார். ராணிப்பேட்டையைச் சேர்ந்த ஜாஸ்மீன் என்பவரும் அறிவியல் பாடப்பிரிவு எடுத்து 597 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். தருமபுரியை சேர்ந்த ரக்ஷனா என்பவரும் 597 மதிப்பெண்களை பெற்றுள்ளார்.
பிளஸ் 2 தேர்வில் தஞ்சை பாபநாசத்தை சேர்ந்த மாணவி ஆராதியா அச்சமடைந்து நேற்று தற்கொலை செய்து கொண்டார். இன்று அவர் பெற்ற மதிப்பெண்கள் 413 ஆகும். அவசரப்பட்டு இப்படி செய்துவிட்டாயே என மாணவியின் பெற்றோர் கதறுகிறார்கள்.
அதே போல் ராமநாதபுர மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த முகேஷ் என்ற மாணவன் ஏப்ரல் 8ஆம் தேதி நடந்த ஒரு சாலை விபத்தில் சிக்கி உயிரிழநதார். அவர் 600-க்கு 483 மதிப்பெண்களை பெற்றுள்ளார். இத்தனை மார்க் வாங்கிய மகன் தங்களுடன் இல்லையே என பெற்றோர் கண்ணீர் விடுகிறார்கள்.
இந்த தேர்வு முடிவுகளை tnresults.nic.in or dge.tn.gov.in. ஆகிய வெப்சைட்டுகளில் செக் செய்ய வேண்டும். அதில் "TN HSE +2 Result 2025" அல்லது "TN SSLC Result 2025" என்பதை கிளிக் செய்ய வேண்டும். அப்போது ஒரு பேஜ் ஓபனாகும், அதில் தேர்வு எண்ணையும் உங்கள் பிறந்த தேதியையும் கொடுக்க வேண்டும். பிறகு உங்கள் தேர்வு முடிவுகள் மதிப்பெண்களுடன் வெளியாகும்.












Click it and Unblock the Notifications