நல்லா சாப்டுட்டு இருந்தோம் கெடுத்து விட்டாங்க..பாதியாகக் குறைந்த அன்னதானம்! குமுறும் பழனி பக்தர்கள்!

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: தைப்பூச விழாவையொட்டி பழனி பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குபவர்கள் உணவு பாதுகாப்புத் துறையிடம் அனுமதி பெற வேண்டும் எனவும், அனுமதி இல்லாமல் உணவு வழங்கினால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என திண்டுக்கல் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இந்த நிலையில் 120க்கும் குறைவானவர்களே அன்னதானம் வழங்க வேண்டி விண்ணப்பம் செய்திருக்கும் நிலையில் அன்னதானம் வழங்குபவர்களின் எண்ணிக்கை பாதிக்கும் கீழாக குறைந்துள்ளது. இதனால் பழனி பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் கடும் அவதி அடைந்துள்ளதாக பாஜக புகார் கூறியுள்ளது.

அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அமைந்துள்ள அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருகை தருவர்.

palani murugan temple

இந்நிலையில் தற்போது தைப் பூச விழாவையொட்டி பழனிக்கு பாதயாத்திரை பக்தர்கள் வருகை தொடங்கியுள்ளது. இதனையடுத்து, மதுரை, சிவகாசி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்கள் கம்பம், வத்தலகுண்டு, நத்தம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் செம்பட்டி வழியாக பாதயாத்திரையாக சென்று கொண்டு உள்ளனர்.

இதேபோல், நத்தம் வழியாக, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டையைச் சேர்ந்த பக்தர்கள் பழனிக்கு பாதயாத்திரையாக வருகின்றனர். மேலும், திண்டுக்கல், பொள்ளாச்சி, செம்பட்டி வழியாக பழனிக்கு பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்காக தர்மத்துப்பட்டி, கன்னிவாடி, ரெட்டியார்சத்திரம், ஒட்டன்சத்திரம், சத்திரப்பட்டி, ஆயக்குடி, கணவாய்பட்டி, கூம்பூர், ஊதியூர், குமரலிங்கம் உள்பட 14 இடங்களில் மின்சாரம், கழிப்பிடம், குளியலறை உள்ளிட்ட வசதிகளுடன் தங்கும்கூடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் செம்பட்டி, கன்னிவாடி, ரெட்டியார்சத்திரம், ஒட்டன்சத்திரம், தாராபுரம் உள்ளிட்ட பல வழிகளில் பக்தர்களுக்கு தொழிலதிபர்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள், அன்னதானம் வழங்கி வருகின்றனர். மேலும் இளநீர், பழங்கள், பிஸ்கட், டீ, காபி உள்ளிட்டவற்றையும் வழங்குவது வழக்கம். இதனால் செலவு இன்றி பக்தர்கள் நீண்ட நாட்கள் பாதயாத்திரை மேற்கொள்ள வசதியாக இருந்தது.

இந்நிலையில் பழனிக்கு பாதயாத்திரை செல்லும், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க வேண்டும் என்றால் உணவு பாதுகாப்பு துறை இடம் அனுமதி பெற வேண்டும் என்றும் இல்லையென்றால் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என கடந்த சில நாட்களுக்கு முன்பு திண்டுக்கல் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் அனுமதி வழங்குவதற்கும் கடும் கெடுபிடி காட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் பல ஆண்டுகளாக அன்னதானம் வழங்கி வந்தவர்கள் தற்போது அதனை நிறுத்தி உள்ளனர். நமக்கு கிடைத்த கிடைத்த தகவல் படி சுமார் 116 பேர் மட்டுமே அன்னதானம் வழங்குவதற்கு அனுமதி வேண்டி விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கோவை, திருச்சி, மதுரை, சிவகங்கை ஆகிய பகுதிகளில் இருந்து திண்டுக்கல் வழியாக பழனிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். முன்பெல்லாம் ஒரு இடத்தில் ஓர் ஆண்டு அன்னதானம் வழங்கினால் அடுத்த ஆண்டும் அதே இடத்தில் அன்னதானமும் பிற உணவுப் பொருட்களும் வழங்கப்படும்.

தற்போது உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளின் கெடுபிடி காரணமாக ஏற்கனவே வழங்கப்பட்ட இடங்களில் அன்னதானம் வழங்கப்படாததால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மேலும் நகர் பகுதியில் தவிர புறநகர் பகுதிகளில் உணவகங்களும் இல்லாததால் பக்தர்கள் பசியோடு பயணிக்க வேண்டிய நிலை இருக்கிறது. மேலும் தற்காலிக உணவகங்களில் தரமற்ற உணவு விற்கப்படுவதால் அவற்றை சாப்பிடவும் பக்தர்கள் அஞ்சுகின்றனர்.

இதுதொடர்பாக நம்மிடம் பேசிய பாஜக திண்டுக்கல் கிழக்கு மாவட்ட முன்னாள் தலைவரும், மாநகராட்சி வார்டு உறுப்பினருமான தனபால்," அன்னதானம் வழங்குவதற்கு கெடுபிடி காட்டப்படுவதோடு அனுமதி வாங்கவில்லை என்றால் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனக் கூறியிருக்கின்றனர். சில பொதுமக்கள் தங்கள் அன்றாட வருமானத்திலிருந்து 100 ரூபாய் கூட எடுத்து கூட பத்து பொட்டலங்கள் உணவுகளை வழங்கி வந்தனர். தற்போது அவர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டு இருக்கிறது.

மிகப்பெரிய தொழில் அதிபர்கள் அரசின் விதிமுறைக்கு ஏற்ப அனுமதி பெற்று அன்னதானம் வழங்கலாம். அதே நேரத்தில் சாதாரண ஏழைகள் தரமற்ற உணவுப் பொருட்களை நிச்சயம் வழங்க மாட்டார்கள். பக்திக்கும் முருகனுக்கும் பயந்து அவர்கள் அன்னதானம் வழங்குகிறார்கள். ஒருவேளை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் வந்தால் அவர்களுக்கு தான் அரசு சார்பில் வாகனம் வழங்கப்பட்டு இருக்கிறதே! எனவே தினமும் காலை முதல் மாலை வரை சாலையில் ரோந்து சென்று இதனை கண்காணிக்கலாம். தரமற்ற உணவு வழங்கினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம். அதற்காக பாதயாத்திரை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினாலே ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்பதை ஏற்க முடியாது

அரசு பள்ளிகளில் கூட தரமற்ற உணவு பரிமாறப்பட்டு மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் சம்பவங்கள் நடந்திருக்கிறது. தமிழகத்தின் பல்வேறு புகழ்பெற்ற உணவகங்களில் தரமற்ற உணவு வழங்கப்படுகிறது. எடை குறைவாக உணவு வழங்கப்படுகிறது. அதையெல்லாம் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுப்பதில்லை. ஆனால் வருடத்திற்கு ஒருமுறை முருக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க நினைக்கும் மக்களிடம் கெடுபிடி காட்டுவது ஏற்கத்தக்கது அல்ல" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+