உச்சகட்டத்தில் பழனி நில மோசடி வழக்கு! 4 பேரை தட்டித் தூக்கிய சிபிசிஐடி! ஆக.12 வரை நீதிமன்ற காவல்!
திண்டுக்கல்: பழனி நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேரையும் 15 நீதிமன்ற காவலில் வைக்க திண்டுக்கல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 1ல் நீதிபதி பாக்கியராஜ் முன்னிலையில் பழனி மட நில மோசடி விவகாரத்தில் கைது செய்யப்பட்ட முருகதாஸ், வெள்ளதுரை, சேதுபதி மற்றும் அன்வர்தீன் ஆகிய நான்கு பேரையும் சிபிசிஐடி போலீசார் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, நான்கு பேரையும் ஆகஸ்ட் 12ஆம் தேதி நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.
பழனி அடிவாரம் சன்னதி வீதியில் அமைந்துள்ள அருள்மிகு தண்டபாணி சுவாமிகள் மடத்திற்கு சொந்தமான சுமார் 100 கோடி மதிப்பிலான நிலம் நீதிமன்ற உத்தரவை மீறி போலி ஆவணங்கள் மூலம் இரண்டு கோடிக்கு மோசடி பதிவு செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இவ் வழக்கு தொடர்பாக பழனி கோயில் நிலங்கள் பிரிவு கண்காணிப்பாளர் முருகானந்தம் அளித்த புகாரின் பேரில் பழனி அடிவாரம் காவல் நிலையத்தில் சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், டிரஸ்ட் பிரமுகர் முருகதாஸ், நிலத்தை வாங்கிய மடத்துக்குளத்தைச் சேர்ந்த வெள்ளத்துரை, பழனி புதூரச் சேர்ந்த சேதுபதி என நான்கு பேர் மீது கூட்டுச்சதி மோசடி உள்ளிட்டு ஐந்து பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு கடந்த 15ம் தேதி சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது இதனை எடுத்து கடந்த 15 தினங்களுக்கு மேலாக சி பி சி ஐ டி எஸ் பி சாஜிதா டிஎஸ்பி அஜய் தங்கம் தலைமையில் 30க்கும் மேற்பட்ட போலீசார் திண்டுக்கல் மற்றும் பழனியில் தீவிர விசாரணையில் மேற்கொண்டு வந்தனர். இவ்வழக்கு தொடர்பாக கோயில் முன்னாள் இணை ஆணையர் மாரிமுத்து ஓய்வு பெற்ற தாசில்தார் மாரியப்பன் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அதிகாரி சின்னச்சாமி அறநிலைத்துறை ஆய்வாளர் சிவனேசன் உட்பட 15க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால ஜாமின் வழங்கியது. மேலும் 27ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 3ம் தேதி வரை திண்டுக்கல்லில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவு தெரிவித்துள்ளது. இதனையடுத்து கடந்த 2 நாட்களாக சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜரானார் அவரிடம் எஸ் பி சாஜிதா டி எஸ் பி அஜய் தங்கம் ஆகியோர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பழனி தண்டபாணி மடத்துக்குச் சொந்தமான நில மோசடி வழக்கு தொடர்பாக, 1880-ஆம் ஆண்டின் நில உரிமையாளர் எனக் கூறப்படும் குப்புசாமி மணியகாரரின் ஒரிஜினல் வாரிசுதாரர்கள் திண்டுக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் நேற்று 28.07.26 மாலை நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். இவ்வழக்கு தொடர்பாக, குப்புசாமி மணியகாரரின் வாரிசுதாரர்களான சுந்தரி, அவரது மகன் விஷ்ணு சுதர்சன் மற்றும் மகள் ஜெயலட்சுமி ஆகியோர் சிபிசிஐடி போலீசாரின் உத்தரவின் பேரில் ஆஜராகினர்.
அப்போது, தங்களது வசமிருந்த நிலம் தொடர்பான அசல் பத்திரம் உள்ளிட்ட ஆவணங்களை அவர்கள் அதிகாரிகளிடம் சமர்ப்பித்தனர். இதனைத் தொடர்ந்து, சிபிசிஐடி எஸ்பி ஷாஜிதா அவர்களிடம் விசாரணை மேற்கொண்டார். இதனிடையே போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை விற்பனை செய்த விழுப்புரம் மாவட்டம், சாலாமேடு, காமராஜர் நகர் 2-வது குறுக்கு தெருவைச் சேர்ந்த தண்டபாணி அய்யா என்பவரின் மகன் முருகதாஸ், நிலத்தை வாங்கிய திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் தாலுகா, பப்பன்குளம் பகுதியைச் சேர்ந்த காளிமுத்து என்பவரின் மகன் வெள்ளைத்துரை, பழனி ஆயக்குடி, புதூரையைச் சேர்ந்த துரைசாமி மகன் சேதுபதி, மோசடிக்கு உடந்தையாக இருந்த வழக்கறிஞர் பழனி கவுண்டன்குளம் பகுதியைச் சேர்ந்த அன்வர்தீன், ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது BNS பிரிவுகள் 318(4), 336(3), 340(2), 49 மற்றும் 61(2) ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும் நான்கு நபர்களிடம் விசாரணை முடிவடைந்து திண்டுக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் இருந்து திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அழைக்க சென்றனர். திண்டுக்கல் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 1ல் நீதிபதி பாக்கியராஜ் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, நான்கு பேருக்கும் ஆகஸ்ட் 12ஆம் தேதி நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.


Click it and Unblock the Notifications
