பழனி தைப்பூசம் 2026 : பாத யாத்திரை பக்தர்களே.. ஜன 7 முதல் ஜன 4 வரை மிஸ் பண்ணிடாதீங்க
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தைப்பூச பக்தர்கள் நலனுக்கான சிறப்பு யாகம், பூஜைகள் வருகிற 7-ந்தேதி முதல் தொடங்குகிறது. அதன்படி 7-ந்தேதி பழனி முருகன் கோவில் ஆனந்தவிநாயகர் சன்னதியில் சிறப்பு யாகம் நடைபெறுகிறது. 8-ந்தேதி வீரதுர்க்கை அம்மன் கோவில், 9-ந்தேதி அழகுநாச்சி அம்மன் கோவில், 11-ந்தேதி வனதுர்க்கை அம்மன் கோவில், 13-ந்தேதி மகிஷாசூரமர்த்தினி அம்மன் கோவிலில் சிறப்பு யாகம், பூஜைகள் நடைபெற உள்ளது.
பழனி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். தைபூசம் அன்று தமிழ்நாடு முழுவதும் ஏராளமான ஆன்மீக பக்தர்கள் வந்து செல்வார்கள்..தமிழ்நாடு மட்டுமின்றி அண்டை மாநிலமான கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் புதுச்சேரியில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள்.

அதுமட்டுமின்றி, வௌிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்வார்கள். தைபூச திருவிழாவையொட்டி பாதயாத்திரையாகவும், காவடி எடுத்து வரும் பக்தர்கள் அதிகம் ஆகும். அதன்படி பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழா வருகிற 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
தைப்பூச விழாவை முன்னிட்டு தற்போதே மதுரை, கரூர், உடுமலை என பல்வேறு ஊர்களில் இருந்து பழனிக்கு பாதயாத்திரையாக பக்தர்கள் வர தொடங்கி உள்ளனர். தைப்பூச பாதயாத்திரை பக்தர்கள் பாதுகாப்புடனும், நலமுடனும் வந்து சாமி தரிசனம் செய்வதற்காக ஆண்டுதோறும் பழனி முருகன் கோவில் மற்றும் அதன் உபகோவில்களில் சிறப்பு யாகம், பூஜைகள் நடைபெறுவது வழக்கம் ஆகும்.
அந்தவகையில் இந்த ஆண்டும் தைப்பூச பக்தர்கள் நலனுக்கான சிறப்பு யாகம், பூஜைகள் வருகிற 7-ந்தேதி முதல் தொடங்குகிறது. அதன்படி 7-ந்தேதி பழனி முருகன் கோவில் ஆனந்தவிநாயகர் சன்னதியில் சிறப்பு யாகம் நடைபெறுகிறது. 8-ந்தேதி வீரதுர்க்கை அம்மன் கோவில், 9-ந்தேதி அழகுநாச்சி அம்மன் கோவில், 11-ந்தேதி வனதுர்க்கை அம்மன் கோவில், 13-ந்தேதி மகிஷாசூரமர்த்தினி அம்மன் கோவிலில் சிறப்பு யாகம், பூஜைகள் நடக்கிறது.
மேலும் 10, 12, 14 ஆகிய தேதிகளில் திசா ஹோமமும், 13-ந்தேதி கன்னிமார், கருப்பணசுவாமிக்கு பூஜை, பைரவ-பைரவி பலிபூஜையும் நடக்கிறது. 14-ந்தேதி இடும்பன் படையல் பூஜை நடைபெறுகிறது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications