எப்படி வந்தது? யார் போட்டது?.. பழனியின் முக்கிய தெரு.. எல்லோர் வீட்டு வாசலிலும் கிடந்த "அந்த" பொருள்
பழனி: பழனியில் ஒரு தெருவில் இருக்கும் பெரும்பாலான வீடுகள் முன் எலும்பு கூடுகள் இருந்த காரணத்தால் மக்கள் பெரும் பதற்றத்திற்கு உள்ளாகி உள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இருக்கும் பகுதிதான் தேவாங்கர் தெரு. பழனி முருகன் கோவிலில் இருந்து இந்த தெரு சில கிலோ மீட்டர்கள் தூரம் இருக்கிறது.
இந்த பகுதியில் நூறுக்கும் அதிகமான வீடுகள் இருக்கிறது. அடுத்தடுத்து நெருக்கமாக இங்கு நிறைய வீடுகள் கட்டப்பட்டுள்ளது.

கோவில் எப்படி
பழனி கோவில் அடிவாரத்தில் கடை வைத்து இருக்கும் சிலரும் இங்கு வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் பழனியில் திகில் ஊட்டக்கூடிய சம்பவம் ஒன்று நடந்துள்ளது. தேவாங்கர் தெருவில் நேற்று காலை ஒருவர் வீட்டின் முன் மனித உடலின் மண்டை ஓடு இருந்துள்ளது. மை பூசப்பட்ட நிலையில் மண்டை ஓடு இருந்துள்ளது. இதை பார்த்ததும் அந்த வீட்டில் இருந்த நபர் அதிர்ச்சி அடைந்தார்.

விசாரணை செய்தார்
இது தொடர்பாக பக்கத்து வீடுகளில் விசாரிக்கலாம் என்று சென்ற போது பக்கத்து வீடுகளிலும் இதே பொருட்கள் கிடந்துள்ளது. ஆம் அருகருகே பல்வேறு வீடுகளில் எலும்பு கூடுகள் கிடந்துள்ளது . சிலர் வீட்டில் மண்டை ஓடுகளும் , சிலர் வீட்டில் கால் எலும்புகளும் கிடந்து இருக்கிறது.

மக்கள் அதிர்ச்சி
மக்கள் இதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள். பலரின் வீட்டு வாசலில் அமங்கலமாக இப்படி பொருட்கள் வைக்கப்பட்டு இருந்தது மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இதையடுத்து எல்லோரும் சேர்ந்து போலீசில் புகார் அளித்தனர்.போலீசார் இது தொடர்பாக விசாரணை செய்துள்ளனர். இதை பார்க்க பக்கத்து தெரு மக்களும் அங்கு கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மர்ம நபர்கள்
மர்ம நபர்கள், விஷமிகள் யாராவது இப்படி செய்து இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. மந்திரம், தந்திரம் தெரிந்த நபர்கள் இப்படி செய்து இருக்கலாம் . மக்களை அச்சுறுத்த வேண்டும். பயமுறுத்த வேண்டும் என்று இவர்கள் இப்படி செய்து இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
-
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications