வணக்கம் தமிழ்நாடு- திண்டுக்கல் வரவேற்பால் அகமகிழ்ந்தேன்: பிரதமர் மோடி நெகிழ்ச்சியுடன் தமிழில் ட்வீட்
திண்டுக்கல்: தமிழகத்துக்கு இன்று வருகை தந்த பிரதமர் மோடிக்கு திண்டுக்கல்லில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. இந்த உற்சாக வரவேற்பால் அகமகிழ்ந்தேன் என பிரதமர் மோடி தமது ட்விட்டர் பக்கத்தில் தமிழில் பதிவிட்டுள்ளார்.
பிரதமர் மோடி இன்றும் நாளையும் தென்னிந்திய மாநிலங்களில் பயணம் மேற்கொண்டுள்ளார். கர்நாடகாவின் பெங்களூரில் 2-வது சர்வதேச முனையம், கெம்பே கவுடா சிலை திறப்பு, தென்னிந்தியாவின் முதலாவது வந்தே பாரத் ரயில் தொடக்கம் ஆகிய நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி பங்கேற்றார்.

திண்டுக்கல்லில் மோடி
இதன்பின்னர் பெங்களூரில் இருந்து மதுரைக்கு தனி விமானத்தில் பிரதமர் மோடி வருகை தந்தார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திண்டுக்கம் அம்பாத்துரை ஹெலிகாப்டர் தளத்தை வந்தடைந்தார் பிரதமர் மோடி. அம்பாத்துரை ஹெலிகாப்டர் தளத்தில் பிரதமர் மோடியை முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்டோர் வரவேற்றனர்.

உற்சாக வரவேற்பு
இதனைத் தொடர்ந்து அம்பாத்துரையில் இருந்து சாலை மார்க்கமாக காந்தி கிராமம், காந்தி கிராம கிராமிய பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழா அரங்கை சென்றடைந்தார் பிரதமர் மோடி. காந்தி கிராமம் செல்லும் வழியில் சாலையின் இருபக்கமும் திரண்டிருந்த பாஜகவினர் பிரதமர் மோடிக்கு பூமழை தூவி வாழ்த்தி உற்சாக வரவேற்பளித்தனர்.

பட்டமளிப்பு விழாவில் மோடி
காந்தி கிராம கிராமிய பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, இசைஞானி இளையராஜாவுக்கு சிறப்பு டாக்டர் பட்டம் வழங்கினார். அதேபோல் உமையாள்புரம் சிவராமனுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கினார் பிரதமர் மோடி. இந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மீண்டும் மாற்ற மத்திய அரசு ஒத்துழைக்க வேண்டும் என்றார். அத்துடன் பிரதமர் மோடியை ஒன்றிய அரசின் பிரதமர் என்றே முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டார்.

நெகிழ்ந்த மோடி தமிழில் ட்வீட்
இதனைத் தொடர்ந்து மோசமான வானிலை காரணமாக பிரதமர் மோடி சாலை மார்க்கமாக மதுரை சென்றடைந்தார். இதற்காக முன்னரே மதுரை- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது. திண்டுக்கல் நிகழ்ச்சிகளில் பங்கேற்றது தொடர்பாக பிரதமர் மோடி தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பிரதமர் மோடி தமது ட்விட்டர்பக்கத்தில் தமிழில், வணக்கம் தமிழ்நாடு! திண்டுக்கல்லில் அளிக்கப்பட்ட மிகச்சிறப்பான வரவேற்பால் அகமகிழ்ந்தேன் என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டிருக்கிறார். இதில் பிரதமர் மோடிக்கு அளிக்க வரவேற்பு படங்களும் பகிரப்பட்டுள்ளன
-
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications