தனி தவில் வாசிக்க ஆசைப்படும் சக்கரபாணி.. கொங்கில் வந்த எதிர்ப்பால் சிக்கல்! பழனியால் வந்த பஞ்சாயத்து
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து ஒட்டன்சத்திரம் பழனி உள்ளிட்ட சட்டமன்றத் தொகுதிகளை பிரித்து பழனி மாவட்டமாக உருவாக்க வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை முன்வைக்கப்படுகிறது. அதே நேரத்தில் உடுமலை, மடத்துக்குளம் ஆகியவற்றை பழனி மாவட்டத்துடன் இணைப்பதாக வெளியான தகவல் கொங்கு மண்டலத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில் மாவட்டத்தில் தனி ஆவர்த்தனம் செய்ய அமைச்சர் சக்கரபாணி திட்டமிட்டுள்ளதாகவும் அதன் காரணமாகவே பழனி மாவட்டத்தை புதிதாக உருவாக்க அவர் திட்டமிட்டுள்ளதாக கூறுகின்றனர். இதனால் திமுகவில் இருக்கும் சில அமைச்சர்களே கோபத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே பொள்ளாச்சியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்திருக்கிறது.
கடந்த சில நாட்களாகவே தமிழகத்தின் புதிய மாவட்டமாக பழனி உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் எனவும் சொல்லப்படுகிறது. தற்போதைய சூழலில் தமிழகத்தின் மிகப்பெரிய மாவட்டம் என்றால் அது திண்டுக்கல் தான்.

திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல், நத்தம், ஒட்டன்சத்திரம், வேடசந்தூர், பழனி, ஆத்தூர், நிலக்கோட்டை ஆகிய சட்டமன்ற தொகுதிகள் இருக்கிறது. பழனியை பொருத்தவரை விவசாயமே பிரதானமாக இருக்கிறது.
வேடசந்தூரில் மில் தொழிலும், பழனியில் பழனி கோவில், கொடைக்கானல் ஆகிய சுற்றுலா தலங்கள் இருப்பதால் அது மட்டுமே அதிக வருவாய் தரக்கூடிய தாலுகாக்களாக இருக்கிறது. ஆத்தூர், நத்தம் திண்டுக்கல்லை பொறுத்தவரை பெரிய அளவில் தொழில் நிறுவனங்கள் இல்லை. அங்கும் விவசாயம்தான் பிரதானம்.
இந்த நிலையில் பெரிய மாவட்டமாக இருக்கும் திண்டுக்கல்லை பிரித்து பழனியை தலைநகராகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாகவே இருக்கிறது. அதிமுக திமுக ஆகிய இரு கட்சிகளுமே தேர்தல் பிரச்சாரத்தில் பழனியை தனி மாவட்டமாக பிரிப்போம் என உறுதி அளித்திருந்தனர். பொள்ளாச்சியை தலைநகராகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்கப்படும் என அதிமுக கூறியிருந்தது. பழனியை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் உருவாக்கப்படும் என திமுகவும் கூறி இருந்தது.
இந்த நிலையில் பழனி, மடத்துக்குளம், உடுமலைப்பேட்டை, ஒட்டன்சத்திரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளை கொண்டு பழனி மாவட்டம் உருவாக்க அமைச்சர் சக்கரபாணி முயற்சி செய்து வருகிறார் என்கின்றனர் திமுகவினர். பின்னணியில் அவரது அதிகார ஆசை இருப்பதாகவே சொல்லப்படுகிறது. திண்டுக்கல் மாவட்ட திமுகவைப் பொறுத்தவரை எத்தனை பகுதிகளாக பிரிக்கப்பட்டாலும் அதில் ஐ.பெரியசாமி தான் ஆதிக்கம் செலுத்துகிறார்.
கலைஞர் இருக்கும் போதும் சரி ஸ்டாலின் இருக்கும் போதும் சரி ஐபி பெரியசாமிக்கு எப்போதுமே மரியாதை உண்டு. காரணம், கட்சியினர் மத்தியில் செல்வாக்கு மட்டுமல்லாது தலைமையிடமும் செல்வாக்கு கொண்டவர். அவர் தற்போது துணை பொது செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கும் நிலையில் பழனி மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு ஐபி செந்தில்குமாரும், சக்கரபாணியும் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டனர்.
ஆனால் ஐ.பெரியசாமியை மீறி அமைச்சராக இருந்தாலும் சக்கரபாணியால் அரசியல் செய்ய முடியவில்லை. இதனால் பழனியை தனி மாவட்டமாக உருவாக்கி அந்த மாவட்டத்தின் அமைச்சராக அதிகாரம் செலுத்தலாம் என்பது சக்கரபாணியில் திட்டம் என்கின்றனர் திமுக உடன்பிறப்புகள். ஆனால் மடத்துக்குளம் உடுமலை ஆகிய கொங்கு பகுதிகளை தென் மாவட்ட வாழ்வியல் கொண்ட பழனியோடு இணைப்பது அப்பகுதி மக்களை வெகுவாக கவரவில்லை. இதனால் இதற்கு எதிர்ப்பு எழுந்து வருகிறது.
இதற்கிடையே மக்களவைத் தேர்தலில் பொள்ளாச்சி பகுதியில் ஈஸ்வரசாமியை ஜெயிக்க வைத்த சக்கரபாணி, 2021-ல் அதிமுக வெற்றி பெற்ற மடத்துக்குளம் உடுமலை தொகுதிகளில் 2026ல் திமுக வேட்பாளர்களை வெற்றி பெற வைத்து காட்டுகிறேன் என தலைமையிடம் பேசி இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கு திமுகவின் இரு அமைச்சர்களுமே விரும்பவில்லை.
காரணம் திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் தொகுதிகளை பழனியோடு சேர்ப்பதற்கு அமைச்சரான மு.பெ. சாமிநாதன் விரும்பவில்லை. அதேபோல் பழனி, கொடைக்கானல், ஒட்டன்சத்திரம் ஆகிய முக்கியத்துவம் மிகுந்த பகுதிகளை விட்டுத் தர ஐ.பெரியசாமியும் விரும்பவில்லை என கூறப்படுகிறது. ஆனால் மடத்துக்குளம் உடுமலை பகுதிகளில் சக்கரபாணிக்கு திமுகவில் திடீர் ஆதரவாளர்கள் உருவாகி மாவட்டத்தை பிரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகிறார்களாம்.
இந்த நிலையில் பொள்ளாச்சியை தலைநகராக கொண்டு மடத்துக்குளம் உடுமலை ஆகிய பகுதிகளை இணைத்து புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என அதிமுக கூறி வருகிறது. இதற்காக பொள்ளாச்சி ஜெயராமன் கடிதமும் அளித்திருக்கிறார். இப்படியாக பழனி மாவட்டத்தை சுற்றி பல்வேறு அரசியல் போட்டிகளும் உள்ளடி வேலைகளும் நடைபெற்று வருகிறது. எனவே பழனியை பிரிப்பதாக இருந்தால் ஒட்டன்சத்திரம் பழனி வேடசந்தூர் ஆகிய பகுதிகளை கொண்டு புதிய மாவட்டம் அமைக்கலாம் என்கின்றனர் திண்டுக்கல் வாசிகள்.
-
தொகுதி மறுவரையறை.. திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை -
ராகுல் காந்தி கடும் அதிருப்தி.. திமுக அழைத்தும் செவிசாய்க்காத காங்கிரஸ் மேலிடம்.. என்ன நடந்தது? -
850ஆக உயர்த்தப்படும் மக்களவை இடங்களின் எண்ணிக்கை! மத்திய அரசு சொன்ன மேட்டர்! எதிர்க்கட்சிகள் ஷாக் -
மீண்டும் திமுக தான்.. விஜய்யின் தவெகவால் ஸ்டாலினுக்கு ‘ஜாக்பாட்’.. அதிமுகவிற்கு ஷாக்! டேட்டா பாருங்க -
இயக்குநர் மோகன் ஜி வீட்டுக்கு! ரூ 8000 கூப்பனுடன் வந்த 4 பெண்கள்! ரேஷன் கார்டு கேட்டு அடம்! -
ரூ.8,000 கூப்பன்.. திமுகவிற்கு வார்னிங் கொடுத்த தமிழக தேர்தல் அதிகாரி -
தொகுதி மறுவரையறை! சண்டை செய்யும் திமுக.. வேடிக்கை பார்க்கும் அதிமுக! என்னதான் பிரச்சனை? -
ரூ.5000 + ரூ.8000.. ஸ்டாலின் கையில் எடுத்த பிரம்மாஸ்திரம்.. பெண்களை தேடி வரப்போகும் பணம்! -
அவசரமாக தொகுதி மறுவரையறை.. தமிழ்நாடே ஸ்தம்பிக்கும்.. பழைய திமுகவை பார்ப்பீங்க.. ஸ்டாலின் எச்சரிக்கை! -
8,000 ரூபாய் கூப்பன்.. என்ன வாங்கலாம்? இப்போது இந்த 'டிஸ்கஷன்'தான் ஓடுகிறது! ஸ்டாலின் சொன்ன மெசேஜ்! -
விஜயின் தவெக சரியில்லை... தமிழ்நாடு பிஷப் கவுன்சில் திமுக கூட்டணிக்கு ஆதரவு.. அதிமுக மீது ‘அட்டாக்' -
ஏமாற்றும் ராகுல்.. ஸ்டாலினுடன் கைகோர்க்கும் கெஜ்ரிவால்.. திமுகவுக்கு ஆதரவாக 2 நாள் பிரசாரம்












Click it and Unblock the Notifications