பொங்கலுக்கு ரூ.5000.. முதலமைச்சர் ஸ்டாலின் நல்லதையே செய்வார்! அமைச்சர் ஐ.பெரியசாமி சொன்ன குட் நியூஸ்
திண்டுக்கல்: தைத்திருநாளில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 5000 ரூபாய் வழங்க வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ள நிலையில், மக்களுக்கு என்ன செய்ய வேண்டுமோ அதை தமிழக முதலமைச்சர் சரியாக செய்வார் எனவும், மக்களுக்கு எந்த விதமான குறைகளும் இல்லாமல் நல்லபடியாக பார்த்துக் கொள்வார் என தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் கல்நாட்டான்பட்டி, சீவல் சரக்கு நெசவாளர் காலனி, அம்பாத்துரை அமளி நகர், பிள்ளையார் நத்தம் மாதா நகர் ஆகிய பகுதிகளில் பகுதி நேர ரேஷன் கடைகளை ஊரகம் மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி திறந்து வைத்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், வரும் தைத்திருநாளில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 5000 ரூபாய் வழங்க வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.

பொங்கல் பரிசு ரூ.5000
அதற்கு பதிளித்த அவர்," இதுதொடர்பாக முதலமைச்சர் தான் முடிவெடுப்பார். மக்களுக்கு என்ன செய்ய வேண்டுமோ அதை தமிழக முதலமைச்சர் சரியாக செய்வார். மக்களுக்கு எந்த விதமான குறைகளும் இல்லாமல் நல்லபடியாக பார்த்துக் கொள்வார்." என்றார். தொடர்ந்து பேசிய அவர்," நேற்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி வருகின்ற 2026 தேர்தலில் 210 தொகுதிகளில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என்று கூறியுள்ளார். 210 தொகுதியிலும் இடம் இல்லை அவருக்கு 210 தொகுயிலும் அவர் போட்டியிட இடம் இல்லை அவருக்கு.
அமைச்சர் பெரியசாமி
அதிமுக போட்டியிட 210 தொகுதி எங்கு இருக்கிறது. தமிழகத்திலுள்ள 210 தொகுதியில் மீதம் 24 தொகுதி உள்ளது. 24 தொகுதியில் வேண்டுமானால் அவர்கள் பெற முடியும்.
கிராமப்புறங்களில் வளர்ச்சி திட்டங்கள் அனைத்துக்கும் முதலமைச்சர் அவர்கள் முழுக்க முழுக்க நிதி ஒதுக்கி அவற்றை மேம்படுத்தியுள்ளார். ஏழை மக்களுக்கு சுமார் 2 லட்சம் வீடுகள் வழங்கப்பட்டுள்ளது.
முக ஸ்டாலின் முடிவு
ஏற்கனவே 20 ஆண்டுகாலமாக பழுது நீக்கப்படாமல் இருந்த 20 லட்சம் 2000 கோடி நிதி ஒதுக்கி ஒரு லட்சத்து 25 ஆயிரம் வீடுகள் பழுது பார்க்கப்பட்டு உள்ளது. பழைய வீட்டிற்கு பதிலாக புதிதாக 2 லட்சம் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு லட்சம் வீடுகள் பழுது பார்க்கப்பட்டு உள்ளது. முதல்வர் சட்டமன்றத்தில் அறிவித்த அறிவிப்தான் நிறைவேற்றுகிறார்கள். வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறோம்.
மகளிர் உரிமைத் தொகை
எங்களது தலைவர் எந்தத் திட்டத்தை அறிவித்தாலும் நிரந்தரமான திட்டத்தை அறிவித்து அதை தொடர்ந்து செயல்படுத்துவார்கள். உதாரணம் மகளிர் உதவி தொகை திட்டம். முதலில் ஒரு கோடியே 16 லட்சம் பேருக்கு வழங்கினார்கள். விடுபட்ட போனவர்களுக்கும் மீண்டும் வழங்கப்படும் எனக் கூறினார். நாளை மாலை 25 லட்சம் பேருக்கு வழங்கும் திட்டம் துவங்கப்பட உள்ளது. இப்போது உதவி திட்டம் வழங்கப்படுபவர்களை சேர்த்தால் ஒரு கோடியே 40 லட்சம் பேருக்கு வழங்கப்பட உள்ளது. மகளிர் உரிமைத் தொகை தகுதியுள்ள அனைவருக்கும் நாளை மாலை வீடு தேடி பணம் வரும்" என்றார்.












Click it and Unblock the Notifications