Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பழனியில் கிடைத்த பொக்கிஷம்.. கருவோடு மரணித்த ஒரு கர்ப்பிணித் தாயின் ஏக்கம்! அதென்ன சுமைதாங்கி கல்

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே ஆயக்குடியில் 19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்று கண்டறியப்பட்டு இருக்கிறது. சுமைதாங்கி கல் எனப்படும் இந்தக் கல்வெட்டை ஆய்வாளர்கள் கண்டறிந்து அதனைப் பிரதி எடுத்திருக்கின்றனர். 1855ஆம் ஆண்டில் பெண் ஒருவர் கர்ப்பத்தோடு மரணித்த நிலையில், அவர் நினைவாக வழிப்போக்கர்களின் சுமையைத் தாங்கும் வகையில் இந்தக் கல் அமைக்கப்பட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது.

தென் மாவட்டங்களில் ஒன்றான திண்டுக்கல் வரலாற்று சிறப்புமிக்க மாவட்டங்களில் ஒன்று. திண்டுக்கல் மலைக்கோட்டை, ஒட்டன்சத்திரம் கோபால் நாயக்கர் மண்டபம், இடையகோட்டை ஜமீன் என பல வரலாற்றுப் பொக்கிஷங்கள் திண்டுக்கல் மாவட்டத்தில் புதைந்திருக்கின்றன.

மேலும் மிகப் பழமையான கல்வெட்டுகள், சிலைகளும் திண்டுக்கல் மாவட்டத்தில் பல இடங்களில் இருக்கின்றன. ஆனால் அவற்றின் அருமை தெரியாமல் துவைக்கும் கற்களாகக்கூட பொதுமக்கள் பயன்படுத்தி வருவது கவலை கொள்ளத்தக்கதாக இருக்கிறது.

Rare 19th Century Inscription

திண்டுக்கல் கல்வெட்டு

இதை அடுத்து தொல்லியல் துறையினர், பேராசிரியர்கள் திண்டுக்கல் பகுதியில் முகாமிட்டு கல்வெட்டுகள் குறித்து தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் பழனி அருகே ஆயக்குடியில் கி.பி.19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி கூறியதாவது," பழனி அரசு அருங்காட்சியகமும் மதுரை காமராசர் பல்கலைக்கழகமும் இணைந்து பழனி மாலை நேரக் கல்லூரியின் வரலாற்றுத் துறை மாணவ மாணவிகளுக்கு 4 நாள் தொல்லியல்-வரலாறு பயிற்சிப் பட்டறை ஒன்றை நடத்தியது.

அரிய கல்வெட்டு

இந்தப் பட்டறையின் கடைசி நாள் அன்று ஒரு கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்தக் கள ஆய்வில் பேராசிரியர் கன்னிமுத்து மற்றும் காப்பாட்சியர் சசிகலா வழிகாட்டுதலில் மாணவ மாணவிகள் ஒரு கல்வெட்டைக் கண்டறிந்தனர். இந்தக் கல்வெட்டு ஆயக்குடி வயல் வெளியில் ஒரு பாழடைந்த கிணற்றுக்கு அருகில் உள்ளது. கல்வெட்டு 15 வரிகளில் பொறிக்கப்பட்டுள்ளது. கலியுக சகாப்தம் 4955ஆம் ஆண்டு தை மாதம் 12 ஆம் தேதி அன்று சுமைதாங்கி அமைக்கப்பட்டதாக இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது.

சுமைதாங்கி கல்

இதற்கு இணையான ஆங்கிலத் தேதி 24-01-1855 ஆகும். ஆயக்குடியைச் சேர்ந்த பொன்னைய மணியக்காரர் மகன் விசுவநாத மணியக்காரருடைய மனைவி கோதையம்மாள் என்பவர், தெய்வலோகப் பிராப்தி அடைந்து (இறந்து) விட்டதால் அவர் நினைவாக இச்சுமைதாங்கி அமைக்கப்பட்டு கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. பண்டைய நாட்களில் கர்ப்பிணிப் பெண்கள் பிரசவத்துக்கு முன்போ, அல்லது பிரசவ காலத்தில் பிரசவிக்க முடியாமலோ இறந்து விட்டால் அவர்கள் நினைவாக இவ்வாறான சுமைதாங்கிகள் அமைக்கப்படுவது வழக்கமாய் இருந்துள்ளது.

சுமைதாங்கிகள்

சுமை தூக்கி நெடுந்தூரம் செல்லும் வழிப்போக்கர்கள், தங்கள் தலைச்சுமையை இறக்கி வைத்து இளைப்பாற இவ்வாறான சுமைதாங்கிகள் உதவும் என்பதால், பிள்ளைச் சுமையை இறக்கி வைக்க இயலாமல், கர்ப்பத்தில் இறந்து போனவர்களின் ஆன்மா அமைதி பெறும் என்பது அக்கால நம்பிக்கையாய் இருந்துள்ளது. தற்காலத்தில் தலைச்சுமை ஏற்றி நெடுந்தூரம் செல்லும் பழக்கம் இல்லாததால், இவ்வாறான சுமைதாங்கிகள் அமைக்கப்படுவது வழக்கொழிந்து போய்விட்டது.

ஆயக்குடி ஜமீன்

ஏற்கனவே சென்ற நூற்றாண்டில் பிரசவத்தில் இறந்து போன ஆயக்குடி ஜமீன்தாரின் மனைவி தெய்வானை அம்மாளுக்கு அமைக்கப்பட்ட சுமைதாங்கி கண்டறியப்பட்ட நிலையில், இது இப்பகுதியில் கிடைத்த இரண்டாவது அரியவகை சுமைதாங்கி ஆகும். இது ஒருபுறம் இருக்க பழனி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அரியவகை கல்வெட்டுகள், சிலைகள் இருக்கும் நிலையில் உரிய ஆய்வு நடத்தி அவற்றைப் பராமரிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர் அப்பகுதி மக்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+