பழனி முருகன் கோவிலில் இன்று முதல் ரோப் கார் சேவை இயங்காது.. கோயில் நிர்வாகம் அறிவிப்பு! என்ன காரணம்?
திண்டுக்கல்: பழனி முருகன் கோவிலில் இன்று முதல் ஒரு மாதத்திற்கு ரோப் கார் சேவை இயங்காது என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலின் ரோப் கார் சேவை வருடாந்திர பராமரிப்பு பணி காரணமாக இன்று (ஆகஸ்ட் 19) முதல் ஒரு மாத காலத்திற்கு பக்தர்கள் பயன்பாட்டிற்கு இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பக்தர்கள் மின் இழுவை ரயில் அல்லது படிப்பாதையை பயன்படுத்தலாம்.

முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி மலைக்கு ஏராளமான பக்தர்கள் தினசரி வருகை புரிந்து, சாமி தரிசனம் செய்வது வழக்கம். மலையில் இருக்கும் தண்டாயுதமாணி சுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்கள் அடிவாரத்தில் இருந்து படிப்பாதை, யானைப் பாதை ஆகியவை பிரதான வழியாக உள்ளது.
அத்துடன் மின் இழுவை ரயில் மற்றும் ரோப் கார் சேவைகளும் இயக்கப்பட்டு வருகிறது. தினசரி காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை ரோப் கார் இயக்கப்படும். அதில் பக்தர்கள் பயணித்து மலைக் கோவிலுக்குச் செல்லலாம். ரோப் கார் தினமும் பிற்பகலில் ஒரு மணி நேரமும் மாதத்தில் ஒருநாளும் பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்படும்.
பக்தர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது ரோப் கார் சேவை. ரோப் காரில் பயணிப்பதற்கு டிக்கெட் வாங்கும் இடத்தில் எப்போதும் நல்ல கூட்டம் இருக்கும். இந்நிலையில் 1 மாத காலத்திற்கு ரோப் கார் சேவை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், "பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலின் கம்பிவட ஊர்தி சேவை (ரோப் கார்) வருடாந்திர பராமரிப்பு பணி காரணமாக நாளை 19.08.2023 முதல் ஒரு மாத காலத்திற்கு பக்தர்கள் பயன்பாட்டிற்கு இயங்காது.
பக்தர்கள் மலைக்கோயிலுக்கு செல்ல மின்இழுவை இரயில், படிப்பாதை மற்றும் யானைப்பாதை ஆகிய வழிகளை பயன்படுத்தி திருக்கோயில் நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு நல்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
கடவுள் முன் அனைவரும் சமம் எனும்போது விஐபி தரிசனம் ஏன்? தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications