ஷாக்! காதலர்களை கட்டிப்போட்டு காதலிகள் பலாத்காரம் செய்த கொடூரர்கள்.. தமிழ்நாட்டில் நடந்தது!

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் காதலர்களைக் கட்டிப் போட்டு அவர்கள் கண் முன்னாலேயே 4 இளைஞர்கள் காதலிகளைப் பலாத்காரம் செய்த கொடூரம் அரங்கேறி உள்ளது.

இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்தே வருகிறது. பாலியல் வழக்குகளில் தண்டனைகளைக் கடுமையாக்கப்பட வேண்டும் என்று பலரும் வலியுறுத்தும் நிலையில், இதுபோன்ற கொடூரங்கள் தொடர்ந்தே வருகிறது. அப்படியொரு ஷாக் சம்பவம் தான் இப்போது திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்துள்ளது.

Shocking Four men tied up lovers and raped girls in Dindigul district

ஷாக் சம்பவம்: திண்டுக்கல் அடுத்துள்ள கிராமத்தில் வசிக்கும் ஒரு தம்பதிக்கு 3 மகள்கள் உள்ளனர். அவர்களில் 19 வயதான மூத்த பெண்ணுக்குத் திருணமாகிவிட்டது. இருப்பினும், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த பெண் பெற்றோருடன் வசித்து வருகிறார். இதற்கிடையே அந்த பெண்ணுக்கும் அவரது 17 வயதான சகோதரிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த பழக்கம் அப்படியே நாளடைவில் காதலாக மாறி இருக்கிறது. இதற்கிடையே இவர்கள் 4 பேரும் கடந்த 30ஆம் தேதி இடையக்கோட்டையில் நடந்த ஒரு கோயில் திருவிழாவுக்குச் சென்றுள்ளனர். கோயில் திருவிழா முடிந்தவுடன் வீடு திரும்பிக் கொண்டு இருந்தார்கள். அப்போது அவர்கள் வழியில் உள்ள ஒரு உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு சாலையோரம் நின்று கொண்டு இருந்துள்ளனர்.

கடத்தல்: அப்போது அங்கே மூன்று இளைஞர்கள் பைக்கில் வந்துள்ளனர். அந்த சிறுமிகளிடம் எதற்காக இங்கே வந்தீர்கள்.. யாருடன் வந்துள்ளீர்கள் எனக் கேட்டுள்ளனர். அப்போது பில் கொடுத்துவிட்டு காதலர்களும் வெளியே வரவே தங்களுடன் தான் அவர்கள் வந்ததாகக் காதலர்கள் கூறியிருக்கிறார்கள். பிறகு அவர்களிடமும் சில கேள்விகளைக் கேட்டுள்ளனர்.

பிறகு திடீரென பைக்கில் வந்த 3 பேரும் வேறு ஒருவருக்கு போன் போட்டுள்ளார். இதையடுத்து பைக்கில் வந்தவர்கள் அவர்கள் 4 பேரையும் வேறு ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். காதலர்கள் இரண்டு பேரை ஒரு பைக்கில் தனியாகவும் மற்ற இரண்டு சிறுமிகளை வேறு ஒரு பைக்கிலும் அழைத்து தாமரைக்குளம் பகுதிக்குச் சென்றுள்ளனர்.

பலாத்காரம்: அங்கே சென்றவுடன் காதலர்கள் இருவரையும் கட்டிப்போட்டுள்ளனர். போனில் பேசிய அந்த ஆசாமியும் அங்கே சென்றுள்ளார். பிறகு அந்த 4 கொடூரர்களும் 2 சிறுமிகளைப் பலாத்காரம் செய்துள்ளனர். இரவு முழுக்க 4 இளைஞர்களும் சிறுமிகளைப் பலாத்காரம் செய்துள்ளனர். அதிகாலையில் அவர்களை அங்கேயே விட்டுவிட்டுத் தப்பி ஓடி விட்டனர். காலையில் 4 பேரும் வீட்டிற்கு வந்துள்ளனர்.

தங்களுக்கு நேர்ந்த கொடூரம் குறித்து அவர்கள் சாணார்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்..போலீசார் நடத்திய விசாரணையில் முதலில் பைக்கில் வந்த இளைஞர்கள் மீனாட்சி நாயக்கன்பட்டியை சேர்ந்த சரண் குமார் (21), முத்தழகுபட்டியை சேர்ந்த வினோத்குமார் (26), முருகபவனத்தை சேர்ந்த சூரிய பிரகாஷ் (22) என்பது தெரிய வந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.

கைது: இவர்கள் போனில் பேசிய ஆசாமி சுள்ளான் பிரசன்ன குமார் (25) என்பதும் தெரிய வந்தது. இவன் மீது ஏற்கனவே பல கொலை, கொள்ளை, வழிப்பறி, அடிதடி வழக்குகளும் இருப்பது தெரிய வந்தது. பிரன்ன குமாரை தேடும் பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், கைது செய்யப்பட்ட மற்ற 3 பேரும் திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களிடம் இருந்து பயங்கர ஆயுதங்களும் செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+