சுற்றுலாவாசிகளுக்கு மகிழ்ச்சி தகவல்... கொடைக்கானலுக்கு வருகிறது ஹெலிகாப்டர் சேவை.. ஆய்வு நிறைவு..!

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: தமிழகத்தின் முக்கிய சுற்றுலாதலங்களில் ஒன்றான கொடைக்கானலில் ஹெலிபேட் அமைப்பது தொடர்பான ஆய்வு நடைபெற்று முடிந்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு தென் மாவட்டங்கள் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

shortly Helicopter service to Kodaikanal

வரும் காலத்தில் கொடைக்கானலுக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் சுற்றுலாவை ஊக்குவிக்கவும் சுற்றுலா துறை சார்பில் பல்வேறு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அதில் ஒன்றாக கொடைக்கானலுக்கு ஹெலிகாப்டர் சேவை தொடங்குவது குறித்து ஆய்வு தற்போது நடைபெற்று முடிந்துள்ளது. கொடைக்கானல் சின்னப்பள்ளத்தில் ஹெலிகாப்டர் வந்திறங்குவதற்கு வசதியாக ஹெலிபேட் அமைப்பது பற்றி திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் ஆய்வு நடத்தியிருக்கிறது.

இந்த ஆய்வறிக்கையை மாவட்ட நிர்வாகம் அரசுக்கு அனுப்பிய பின்னர் அது தொடர்பான தகவலை சுற்றுலாத்துறை முறையாக வெளியிடும் எதிர்பார்க்கப்படுகிறது. சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் கொடைக்கானலுக்கு ஹெலிகாப்டர் சேவை தொடங்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

வரும் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது சுற்றுலாத்துறை மீதான மானியக்கோரிக்கையில் கொடைக்கானலுக்கு ஹெலிகாப்டர் சேவை தொடர்பான அறிவிப்புகள் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+