அய்யோ பதறுதே.. நடுரோட்டில் மிருகத்தனமாக மோதிக்கொண்ட மாணவர்கள்.. திண்டுக்கல்லில் பரபரப்பு

திண்டுக்கல் அருகே நடுரோட்டில் சரமாரியாக மாணவர்கள் அடித்துக் கொண்ட காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே நடுரோட்டில் சரமாரியாக மாணவர்கள் அடித்துக் கொண்ட காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் பகுதியில் செயல்படும் கல்லூரி ஒன்றில் படிக்கும் மாணவர்களிடையே இன்று திடீரென மோதல் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் மோசமாக தாக்கி கொண்டனர். ஈவு இரக்கமின்றி தாக்குதல்கள் மாறி மாறி நடந்தது.

இந்த மோதல் காட்சிகளை பார்ப்போரை குலை நடுங்க வைத்தது. என்ன காரணத்திற்காக மோதிக்கொண்டார்கள் என்று விசாரித்த போது இருசக்கர வாகனம் நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறில் தனியார் கல்லூரி மாணவர்கள் மோதியது தெரியவந்தது.

மாணவர்கள்

மாணவர்கள்

அய்யலூர் பகுதியில் பேருந்து நிறுத்தத்தில் மாணவர்கள ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட வீடியோ காட்சி சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக அங்குள்ள மக்கள் கூறுகையில், திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் பகுதியில் இயங்கும் தனியார் கல்லூரி மாணவர்களுக்குள் வாகனத்தை நிறுத்துவது தொடர்பாக கல்லூரியில் இரு பிரிவாக தகராறு ஏற்பட்டுள்ளது. ஆனால் கல்லூரியில் இரு தரப்பினரும் சமாதானமாக சென்றுவிட்டார்கள்.

எப்படி

எப்படி

இந்நிலையில் மாலையில் கல்லூரி முடிந்து வீடு திரும்பும் போது தகராறு ஏற்பட்டுள்ளது. கல்லூரியில் இருந்து பேருந்து நிறுத்தம் வரை ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை இரண்டு தரப்பினரும் தகராறு செய்தவாரே சென்றுள்ளனர். அய்யலூர் பேருந்து நிறுத்தம் வந்த பின்னர் இரு தரப்பினரும் கடுமையாக தாக்கி கொண்டனர். இந்த சம்பவத்தில் இரு தரப்பினருக்கும் காயம் ஏற்பட்டது.

தீவிர விசாரணை

தீவிர விசாரணை

பின்னர் இருசக்கர வாகனத்தில் ஏறி அவர்கள் சென்றுவிட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக வடமலை போலீசாருக்கு சம்பவத்தை பார்த்தவர்கள் தகவல் தெரிவித்தனர். வடமலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிரச்சனையில் ஈடுபட்டவர்கள் குறித்து தீவிரமாக விசாரித்து வருகிறார்கள என்று அப்பகுதி மக்கள் கூறினர்.

மாணவர்கள்

மாணவர்கள்


படிக்கும் வயதில் மாணவர்கள் இதுபோன்ற மோசமாக தாக்கி கொள்வது அசம்பாவிதங்களை ஏற்படுத்துவதுடன், எதிர்காலத்தையும் கேள்விக்குறி ஆக்கிவிடும் என்றும் சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்- சின்ன சின்ன பிரச்சனைகளை ஊதி பெரிதாக்கி குழுவாக மோதிக்கொண்டு பெரிய வன்முறைக்கு கொண்டு செல்வது அவர்களது வாழ்க்கைய மட்டுமின்றி அவர்களுடன் படிக்கும் சக மாணவர்களின் வாழ்க்கையையும் கேள்விக்குறி ஆக்கிவிடும். கல்லூரி காலத்தில் கெத்துக்காக மோதிய பலர் இன்று வெட்டியாக சுற்றும் நிலை காணப்படுவதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+