கருவறைக்குள் சென்றாரா சேகர் பாபு.. பிராயச்சித்தம் கேட்கிறாரே வானதி.. ஆனால் வேறு சொல்கிறாரே சுகிசிவம்
திண்டுக்கல்: பழனி தண்டாயுதபானி கோவில் குடமுழுக்கு நடப்பதற்கு முதல் நாள் அமைச்சர் சேகர் பாபு மற்றும் சில அதிகாரிகள் கோவில் கருவறைக்குள் சென்றதாகவும், இது ஆகம விதிமீறல் என்றும் இதற்குப் பரிகாரமாக கோவிலுக்கு பிராயச்சித்த கும்பாபிஷேகம் செய்யவேண்டும் என பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் குரல் எழுப்பி இருந்தார். ஆனால் சொற்பொழிவாளர் சுகி சிவம், பழனி கோவிலுக்கு ஆகம விதி என்பதே கிடையாது என்றும் இது அரசியலாக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அமைந்துள்ளது தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில். இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் பழனி கோவிலில் 16 ஆண்டுகள் கழித்து கடந்த ஜனவரி 27 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
இந்த கும்பாபிஷேக நிகழ்வில் அந்த துறையின் அமைச்சர் சேகர் பாபு கலந்து கொண்டிருந்தார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் ட்விட்டரில் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டது

மன்னிப்பு கேட்கணும்
இதனிடையே பழனி தண்டாயுதபானி கோவில் குடமுழுக்குக்கு நடப்பதற்கு முதல் நாளில் அமைச்சர் சேகர் பாபு கருவறைக்குள் நுழைந்ததாக பேசி, பிராயச்சித்த கும்பாபிஷேகம் தேவை என்று திண்டுக்கல் மாவட்ட அர்ச்சகர் சங்க ஸ்தானிக தலைவர் கும்பேஸ்வர குருக்கள் பேசியதாக ஆடியோ வெளியாகி இருந்தது. இதை தொடர்ந்து இந்த விவகாரத்தில் ஆகம விதி மீறப்பட்டிருப்பதாக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் குற்றம்சாட்டினார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில், "பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவில் கருவறைக்குள் அத்துமீறி நுழைந்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர், அதிகாரிகள் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். தலைமை அர்ச்சகரின் வேண்டுகோளை ஏற்று பிராயசித்த கும்பாபிஷேகம் நடத்த வேண்டும்" என்று கூறியிருந்தார்.

பதிலடி
இதற்குப் பதிலளித்த அமைச்சர் சேகர் பாபு, "ஊடகங்களில் வர வேண்டும் என்பதற்காக விஷமத்தனமான செய்திகளை வெளியிடுவது தான் அவரது வாடிக்கையாக உள்ளது. தமிழ்நாட்டை தாண்டி இந்தியாவை தாண்டி உலகம் முழுவதும் உள்ளவர்கள் பழனி கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடத்தப்பட்டதை பாராட்டி வருகிறார்கள். அதில் கரும்புள்ளி ஏற்படுத்த வேண்டும் என அர்த்தமற்ற செய்தியை வெளியிட்டது மிகவும் வருத்தமளிக்கிறது." என்றார்.

சித்தர்கள் பிரதிஷ்டை
இந்த விவகாரம் தொடர்பாக பிரபல தமிழ் ஊடகமான பிபிசிக்கு எழுத்தாளர் மற்றும் சொற்பொழிவாளர் சுகி சிவம் அளித்த பதிலில் "பழனி முருகன் கோவில் குடமுழுக்கு ஆகம விதிப்படி நடைபெறவில்லை என்றும், ஆகம விதிகள் மீறப்பட்டுள்ளதாகவும் சிலர் சொல்றாங்க. பழனி கோவில் சித்தர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அங்கு வீற்றிருக்கும் முருகன் பெயர் சித்தர்நாதன். தண்டாயுதத்தை ஊன்றி நிற்கும் தண்டபாணி. கோவணம் கட்டியிருக்கும் துறவி. அவர் ஒரு சித்தர்.

ஆகம விதிகள் என்ன
ஒரு சித்தருக்கு ஆகம பிரதிஷ்டை கிடையாது. தனி மனிதன் ஒரு கோவிலைக்கட்டி பிரதிஷ்டை செய்திருந்தால், ஆகமம் செல்லுபடியாகும். சித்தர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்ட கோவிலுக்கு ஆகமம் செல்லுபடியாகாது என்று பேசியிருந்தேன். அதே கருத்தை தான் நான் மீண்டும் சொல்கிறேன். சித்தர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்ட கோவிலுக்கு ஆகம விதிகள் செல்லாது.

எந்த விதி மீறல்
பழனி கோவிலுக்கு ஆகம விதி என்பது கிடையாது. முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு பண்டாரங்களால் வழிபாடு செய்யப்பட்டு கோவிலில் அவர்களின் உரிமை பறிக்கப்பட்டுள்ளது. ஆகம விதி மீறப்பட்டதாக கூறுபவர்கள் எந்த ஆகமத்தில் எந்த விதி மீறப்பட்டுள்ளது என்பதை கூற வேண்டும். கடந்த காலங்களில் அமைச்சர்கள், அதிகாரிகள் கோவிலுக்குள் சென்றுள்ளனர். தற்போது இந்த விவகாரம் கட்சி அரசியலாக்கப்பட்டுள்ளது. இதில் முறையாக விவாதம் நடந்தால் பதிலளிக்கலாம். தனிநபர் பற்றி அல்லாமல் ஆகமம் சார்ந்து யாராவது கேள்விகள் எழுப்பினால் அதற்கு உரிய பதில் அளிக்கலாம்" இவ்வாறு சுகி சிவம் கூறினார்.
-
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்?












Click it and Unblock the Notifications