Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உள்ளம் உருகுதையா.. பழனி கோவிலில் முருகனை தரிசித்த சூர்யா! ’சூர்யா 46’ ஸ்க்ரிப்டை வைத்து பூஜை!

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: ரெட்ரோ படத்தை தொடர்ந்து சூர்யா நடிக்கும் 46வது படத்தின் வேலைகள் தொடங்கி இருக்கிறது. இந்த நிலையில் பழனி முருகன் கோவிலில் சூர்யா 46 படத்தின் இயக்குனர் வெங்கி அட்லூரி, நடிகர் சூர்யா, அவரது சகோதரி பிருந்தா ஆகியோர் சுவாமி தரிசனம் செய்தனர். மேலும், படத்தின் ஸ்க்ரிப்டை வைத்து பூஜையும் நடைபெற்றது.

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வருபவர் சூர்யா. நேருக்கு நேர் படத்தில் தொடங்கி தற்போது ரெட்ரோ வரை அவரது திரைப் பயணம் ஏற்ற இறக்கமாக இருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன் சூரரைப் போற்று, ஜெய் பீம் உள்ளிட்ட வித்தியாசமான கதை களங்களை கொண்ட திரைப்படங்களை ஓடிடியில் வெற்றிகரமாக தந்து இருந்தார்.

ஆனாலும் நேரடியாக திரையில் வெளியான அவரது படங்கள் மிகக் கடுமையாக சொதப்பின. கடைசியாக அவர் நடிப்பில் தியேட்டர்களில் வெளியான சிங்கம் படத்தை தவிர அஞ்சான், என்ஜிகே, எதற்கு துணிந்தவன் என பல படங்கள் படுதோல்வியை சந்தித்தன.

Suriya Venky Atluri cinema

கடைசியாக வெளியான கங்குவா படமும் பலத்த விமர்சனங்களை பெற்றது. இந்த நிலையில் தனக்கென ஒரு வெற்றி தேவைப்பட்ட நிலையில், பீட்சா, இறைவி, ஜிகர்தண்டா போன்ற படங்களை இயக்கி புகழ்பெற்ற இயக்குனர் கார்த்திக் சுப்புராஜுடன் சூர்யா இணைகிறார் என்ற தகவலே கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டது.

மேலும் நாயகியாக பூஜா ஹெக்டே, ஜோஜூ, ஜார்ஜ், நாசர், பிரகாஷ்ராஜ், ஜெயராம், கருணாகரன் உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளங்கள் இந்த படத்தில் இணைந்தன. சந்தோஷ் நாராயணன் இசையில் வெளியான கனிமா பாடல் பெரிய வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் கடந்த மே ஒன்றாம் தேதி இந்த திரைப்படம் தியேட்டர்களில் வெளியானது. படம் நன்றாக இருக்கிறது என ஒரு தரப்பும் மொக்கையாக இருக்கிறது என மற்றொரு தரப்பும் கூறி வந்தன. படம் தோல்விதான் எனவும் சிலர் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் ஆர்.ஜே பாலாஜி இயக்கும் படத்தில் தற்போது சூர்யா நடித்து வருகிறார். அடுத்ததாக லக்கி பாஸ்கர் படத்தின் மூலம் புகழ்பெற்ற இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கும் சூர்யா 46 படத்திலும் நடிக்கிறார். இதில் சூர்யாவுடன், ராதிகா சரத்குமார், ரவீனா தாண்டன், மமீதா பைஜூ உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். அடுத்த ஆண்டு கோடை விடுமுறையை முன்னிட்டு இந்த படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த மே மாதம் 19 ஆம் தேதி இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. இந்த நிலையில் சூர்யா 46 படக்குழுவினர் புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். முருகனின் மூன்றாம் படை வீடான பழனிக்கு தமிழ்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்து கூட பக்தர்கள் வருகிறார்கள். மேலும் முக்கிய நாட்களில் வெளிமாநில முதலமைச்சர்கள், நடிகர்கள், பிரபலங்கள் சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்த நிலையில் சூரியா 46 படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கும் நிலையில் பழனி முருகன் கோவிலில் இயக்குனர் வெங்கி அட்லூரி, நடிகர் சூர்யா, அவரது சகோதரி பிருந்தா ஆகியோர் சுவாமி தரிசனம் செய்தனர்.

Suriya Venky Atluri cinema

ரோப்கார் மூலம் பழனி மலை கோயிலுக்கு சென்ற அவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு பூஜை அளிக்கப்பட்டது. தொடர்ந்து எட்டு மணிக்கு நடைபெற்ற கால பூஜையில் வேடன் அலங்காரத்தில் இருந்த முருகப்பெருமானை சூர்யா உள்ளிட்ட படக்குழுவினர் தரிசித்தனர். தொடர்ந்து படத்தின் ஸ்கிரிப்டையும் வைத்து பூஜை செய்யப்பட்டது.

பின்னர் போகர் சமாதியில் வழிபட்டு வெளியே வந்த அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதங்கள், சாமி படங்கள் வழங்கப்பட்டது. தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் சூழ்ந்து கொண்டு சூர்யாவுடன் புகைபடங்கள் எடுத்து கொண்டனர். பின்னர் கோவில் ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள் என அனைவரிடமும் சேர்ந்து புகைப்படம் எடுத்தனர். பின்னர் ரோப் கார் வழியாக கீழே இறங்கிய அவர் புறப்பட்டுச் சென்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+