தமிழகத்தின் தனியார் பால் நிறுவனங்களின் தன்னிலை விளக்கம்.. பால் விலையை உயர்த்த விஜய்க்கு கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: தமிழகத்தின் தனியார் பால் நிறுவனங்களின் தன்னிலை விளக்கம் என்ற பெயரில் இன்று நாளிதழில் முதல்வர் விஜய்க்கு கோரிக்கை வைத்து சில முக்கியமான விஷயங்களை பால் உற்பத்தி நிறுவனங்கள் பகிர்ந்துள்ளன. அதில் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், பால் விலையை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்கள். பால் விலையை உயர்த்தாவிட்டால், தனியார்த்துறையின் தொழிலை முடக்கும் என்று தெரிவித்துள்ளனர்.

குஜராத் மாநிலத்தில் அமுல் நிறுவனம் உற்பத்தியாளர்களுக்கோ, நுகர்வோருக்கோ எந்த ஒரு மானியமும் கொடுப்பதில்லை. மற்றும் அவர்கள் தனது லாபத்தில் கூட்டுறவு விதிகளுக்கு உட்பட்டு லாபப் பங்கு அளித்து வருகிறார்கள். அது போன்று தமிழகத்திலும் கூட்டுறவு விதிகளுக்கு உட்பட்டு லாபத்தின் பங்கீட்டு தொகையை உற்பத்தியாளர்களுக்கு வழங்கலாம் என்றும் தனியார் பால் நிறுவனங்கள் கோரிக்கை வைத்துள்ளன.

Tamil Nadu Dairies Association Pressure to Hike Aavin Milk Prices Request to Vijay

தமிழகத்தின் தனியார் பால் நிறுவனங்களின் தன்னிலை விளக்கம் என்ற பெயரில் தமிழ்நாடு டைரீஸ் அசோசியேஷன் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறுகையில், "கால்நடைத்துறை சம்பந்தப்பட்ட பால் உற்பத்தி, கோழி வளர்ப்பு மற்றும் முட்டை விற்பனை போன்ற தொழில்கள் விவசாயத்தில் 45 பங்கு தமிழகத்தில் உள்ளது. பால் உற்பத்தி மற்றும் விற்பனையில் கூட்டுறவுத்துறை 25 சதவீதமாகவும், தனியார் 75 சதவீதமாகவும் உள்ளனர்.

வளர்ந்த மாநிலங்களின் கால்நடைத் துறையில் தமிழகம் முன்னணியில் இருக்க, கோழி முட்டை மற்றும் பால் உற்பத்தியில் தமிழக தொழில் அதிபர்கள் முக்கிய பணியாற்றியுள்ளார்கள். கடந்த சில வருடங்களில் முந்தைய அரசு பால் விற்பனை விலையில் நுகர்வோருக்கு ரூபாய் 3/- மானியமாகவும் மற்றும் ரூபாய் 3/- பால் உற்பத்தியாளர்களுக்கு மானியமாக கொடுத்தது. ஆக மொத்த மானியம் லிட்டருக்கு ரூபாய் 6/- ஆகும். தனியார்த்துறைக்கு எந்த மானியமும் இல்லை.

இன்றைய அரசு மீண்டும் நுகர்வோருக்கு விலையை கூட்டாமல் மீண்டும் பால் உற்பத்தியாளர்களுக்கு ரூபாய் 5/- மானியமாக கூட்டி வழங்கி உள்ளது. அதனால் கூட்டுறவு துறைக்கு கொடுக்கப்படும் ரூபாய் 11/- மானியம் தனியார்த்துறையின் தொழிலை முடக்க உள்ளது. தமிழகம் பசும்பால் கொள்முதல் விலையில் அண்டை மாநிலங்களுடன் ஒப்பிடும் போது மானியத்துடன் சேர்த்து இன்றைய தேதியில் அதிக விலை கொடுக்கிறது. பால் உற்பத்தியாளர்களுக்கு கிடைக்கும் இச்சலுகை வரவேற்கத்தக்கது.

எனினும் இதனால் தமிழக பால்வளத்துறை வளர்ச்சியில் கடந்த 30 வருடங்களாக பெரும் பங்கு வகித்துவரும் தனியார் பால் நிறுவனங்களும், அவர்களிடம் வணிகம் செய்யும் பால் உற்பத்தியாளர்களும் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். பால் விற்பனை விலையில் கூட்டுறவுத்துறையில் கொடுக்கப்படும் மானியம் மற்றும் கூட்டுறவுத்துறைக்கு உள்ள சலுகைகளும் தனியார் பால் கொள்முதல் விலையை கூட்டுகின்றன. பால் கொள்முதல் விலையை கூட்டி தனியார் நிறுவனங்கள் எவ்வித மானியமும் கிடைக்காத நிலையில் நுகர்வோரிடம் அதிக விலை கேட்க வேண்டி உள்ளது. மேலும் கொள்முதல் விலை, விற்பனை விலையை ஈடுகட்ட முடியாமல் போய்விட்டது.

இந்த ஏற்றத்தாழ்வின் விளைவாக பால் விலை குறைவாக உள்ள வெளி மாநிலங்களில் கொள்முதல் செய்து தமிழகத்தில் விற்பனைக்கு கொண்டு வரும் பிற மாநில நிறுவனங்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாகவும், தமிழகத்தின் தனியார் பால் நிறுவனங்களுக்கு வேதனையாகவும் மற்றும் சோதனையாகவும் அமைந்துள்ளது. மேலும் வெளி மாநில பால் உற்பத்தியாளர்கள் நாளுக்கு நாள் பயனடைந்து வருகின்றனர்.

எனவே இதனை தடுக்க தவறினால் தமிழகம் பிற அண்டை மாநிலங்களில் இருந்துவரும் பாலினால் ஈர்க்கப்பட்டு தமிழகத்தில் 75 சதவீதம் பால் வளத்துறையை தக்க வைத்துள்ள தனியார் நிறுவனங்கள் மூடும் நிலைக்கு தள்ளப்படும். எனவே இன்றைய தேதியில் நாங்கள் பால் கொள்முதல் விலையை அதிகப்படுத்தியும் மற்றும் நுகர்வோரிடம் இந்த அதிகப்படுத்திய விலையை கேட்க வேண்டிய நிலை உருவாகி உள்ளது.

Tamil Nadu Dairies Association Pressure to Hike Aavin Milk Prices Request to Vijay

தமிழக அரசும் முதல்வரும் இந்த பிரச்சனைகளை மனதில் கொண்டு தமிழக பால்வளத்துறையை காப்பாற்ற நுகர்வோர் மானியத்தை நிறுத்திவிட்டு நுகர்வோருக்கு விற்பனை விலையாகக் கூட்டி ஆதரவளிக்க வேண்டும். தமிழக பால் உற்பத்தியாளர்கள், அண்டை மாநில உற்பத்தியாளர்களோடு போட்டியிட தனியார் துறை தடுமாறும் நிலையில் தொழில் முடக்கம் ஏற்படும். பல விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழக்க வாய்ப்பு உருவாகிறது.

ஒரு பக்கம் மானியத்துடன் கூடிய கூட்டுறவு துறையும், அடுத்ததாக அண்டை மாநிலம் விற்பனை செய்யும் பால் நிறுவனங்களுக்கும் இடையில் தமிழக பால் நிறுவனங்கள் சிக்கி நசுக்கப்படுவர். குஜராத் மாநிலத்தில் அமுல் நிறுவனம் உற்பத்தியாளர்களுக்கோ, நுகர்வோருக்கோ எந்த ஒரு மானியமும் கொடுப்பதில்லை. மற்றும் அவர்கள் தனது லாபத்தில் கூட்டுறவு விதிகளுக்கு உட்பட்டு லாபப் பங்கு அளித்து வருகிறார்கள். அது போன்று தமிழகத்திலும் கூட்டுறவு விதிகளுக்கு உட்பட்டு லாபத்தின் பங்கீட்டு தொகையை உற்பத்தியாளர்களுக்கு வழங்கலாம்.

மாண்புமிகு முதல்வருக்கு தமிழக பால் நிறுவனங்களின் கோரிக்கை

தமிழக முதலமைச்சர் அவர்கள் தனியார் நிறுவனங்களின் சேவையை மனதில் கொண்டு நுகர்வோருக்கு விற்பனை விலையை கூட்டுறவு துறையின் கொள்முதல் விலைக்கு ஏற்ப நஷ்டம் இல்லாமல் கூட்டி உரிய நடவடிக்கை எடுத்து தமிழகத்தில் தனியாருக்கு பால் வழங்கும் உற்பத்தியாளர்களையும் மற்றும் தமிழகத்தின் தனியார் பால் நிறுவனங்களையும் பாதுகாக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்" என தமிழ்நாடு டைரீஸ் அசோசியேஷன் கூறியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+