AAY, PHH ரேசன் கார்டு வச்சுருக்கீங்களா? மொத்தமா போயிரும்.. உடனே ’இதை’ பண்ணுங்க! 5 நாள் தான் டைம்

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: ஏஏஒய்(AAY) மற்றும் பிஎச்ச்(PHH) பயனாளிகளின் குடும்ப அட்டைகளில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் தங்களது கைவிரல் ரேகையினை 31.03.2025 ஆம் தேதிக்குள் பதிவு செய்யப்பட வேண்டும் என சென்னை உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை இயக்குநர் கூறியுள்ள நிலையில், பொதுமக்கள் வரும் 31ஆம் தேதிக்குள் அதனை செய்ய வேண்டுமென திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," திண்டுக்கல் மாவட்டத்தில் பொதுவிநியோகத் திட்டத்தின்கீழ் செயல்படும் நியாய விலைக்கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் பெறும் ஏஏஒய்(AAY) மற்றும் பிஎச்ச்(PHH) குடும்ப அட்டைகளில் உள்ள அனைத்து பயனாளிகள் தங்களது கைவிரல் ரேகை பதிவினை e-KYC (electronic Know Your Customer) சம்மந்தப்பட்ட நியாய விலைக் கடையில் 31.03.2025-க்குள் பதிவு செய்திட வேண்டும் என சென்னை உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை இயக்குநர் அவர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Ration Card tamilnadu govt chennai

அதன்படி, ஏஏஒய்(AAY) மற்றும் பிஎச்ச்(PHH) பயனாளிகளின் குடும்ப அட்டைகளில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் தங்களது கைவிரல் ரேகையினை 31.03.2025 ஆம் தேதிக்குள் பதிவு செய்யப்பட வேண்டும். எனவே, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஏஏஒய்(AAY) மற்றும் பிஎச்ச்(PHH) பயனாளிகளின் குடும்ப அட்டைகளில் உள்ள அனைத்து உறுப்பினர்கள் அத்தியாவசியப் பொருட்கள் பெறும் நியாய விலைக்கடைகளில் கைவிரல் ரேகை பதிவு செய்திட வேண்டும்" என கூறப்பட்டுள்ளது.

ரேசன் கார்டுகள்: தமிழகத்தை பொறுத்தவரை தமிழ்நாடு அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் குடும்ப அட்டை எனப்படும் ரேஷன் கார்டுகள் மூலமாக வழங்கப்படுகிறது. மாதாமாதம் உணவுப்பொருட்கள், பொங்கல் பரிசு தொகை, மகளிர் உரிமை தொகை உள்ளிட்டவை ரேசன் கார்டுகள் மூலம் தான் வழங்கப்படுகிறது. தற்போது KYC எனப்படும் அடையாள சரிபார்ப்பு பணி பல மாதங்களாக நடைபெற்று வருகிறது. இதனால் நாடு முழுவதும் ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள் குடும்ப உறுப்பினர்களின் அடையாளங்களை சரிபார்த்து இருக்க வேண்டும்.

அடையாளம் சரிபார்ப்பு: தற்போது மக்கள் அவரவர் பொருட்கள் வாங்கும் ரேஷன் கடைகளிலேயே இந்த பணியானது நடைபெற்று வருகிறது. தற்போது இந்த கால அவகாசம் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. அந்த காலக்கெடுவுக்குள் ரேஷன் வாங்கும் நபர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களின் அடையாளங்களை சரிபார்க்க வேண்டும். அதற்கு பிறகும் சரி பார்க்கவில்லை என்றால் அந்த குறிப்பிட்ட குடும்ப அட்டைகளுக்கு உணவு பொருட்கள் வழங்குவதும் நலத்திட்ட உதவிகள் வழங்குவதும் நிறுத்தப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் குடும்பத்தில் ஒருவர் இருவர் அடையாளங்கள் சரிபார்க்கப்பட்டு பிறரது அடையாளங்கள் சரிபார்க்கப்படவில்லை என்றால் அவர்களது பெயர் நீக்கப்படவும் வாய்ப்பு உள்ளது.

ரேசன் கார்டு ரத்து: நாடு முழுவதும் தற்போது வரை சுமார் ஒன்பது லட்சம் பேர் தங்கள் அடையாள சரிபார்ப்பு பணியை மேற்கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இன்னும் ஒரு மாத கால அவகாசம் மட்டுமே இருக்கும் நிலையில் அவர்கள் அதனை செய்து முடிக்க அறிவுறுத்தப்படுகிறது. நாடு முழுவதும் பலர் உயிரிழந்த நிலையில் அவர்களது பெயர்களை நீக்காமல் அவர்களது பெயர்களிலேயே ரேஷன் பொருட்களை வாங்கி வருகின்றன. மேலும் இதன் காரணமாக பலருக்கு செல்ல வேண்டிய நலத்திட்ட உதவிகள் செல்லாமல் இருக்கிறது. அதன் காரணமாகத்தான் இது போன்ற பிரச்சனைகளை சரி செய்ய அடையாள சரிபார்ப்பு பணி நடைபெற்று வருகிறது என்கின்றனர் அதிகாரிகள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+