எங்களை பகைக்க வேண்டும்.. CM விஜய் மீது வெறுப்பு வந்துரும்! சொத்து கணக்கை காட்ட ஆசிரியர்கள் எதிர்ப்பு

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: சொத்து மதிப்பு தாக்கல் செய்ய வேண்டும் என கூறுவது அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் மத்தியில் அரசின் மீது பெரும் வெறுப்பை ஏற்படுத்தும் எனவும், அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் சொத்து மதிப்பு தாக்கல் செய்ய வேண்டும் என்ற விவகாரத்தில் அரசு எடுக்கக்கூடிய நடவடிக்கை பொருத்து போராட்டம் நடத்தப்படும் என எச்சரித்துள்ளனர் அரசு பள்ளி ஆசிரியர்கள். மேலும், தமிழகத்தை அதிகாரிகள் தான் ஆண்டு கொண்டிருக் கிறார்கள், இதில் எந்த சந்தேகமும் இல்லை என அகில இந்திய ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் அகில இந்திய செயலாளர் அண்ணாமலை.

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி வட்டார தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் அகில இந்திய ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் அகில இந்திய செயலாளர் அண்ணாமலை கலந்து கொண்டு ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு பொன்னாடை போர்த்தியும் நினைவு பரிசு வழங்கியும் கௌரவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில்," ஊழல் இல்லாத அரசினை நாங்கள் நடத்திக் காட்டுவோம் என ஜோசப் விஜய் உறுதி அளித்தார். ஊழல் என்பது ரத்தப் புற்று நோய் கல்வித்துறையை பொருத்தவரை ஊழல் இல்லாமல் நடைபெற்று வருகிறது. மற்ற துறைகளில் ஊழல் அச்சப்பட வைத்துள்ளது.

Teachers Vijay Government Employees

சொத்து கணக்கு

தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் ஆகியோரின் சொத்து மதிப்பினை அக்டோர் 31-ஆம் தேதிக்குள் முறைப்படி பதிவிட வேண்டும் என கூறியுள்ளார்.ஒவ்வொரு வருடமும் வருமான வரி தாக்கல் செய்து வருகிறோம். அதில் சின்னத் தொகை கூட ஏமாற்ற முடியாது. இந்த அறிவிப்பு அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தவா? அல்லது முதலமைச்சர் சம்மதத்துடன் வெளிவந்ததா? என்பது எனக்கு தெரியாது.

அதிகாரிகள் ஆட்சி

ஆட்சிகள் மாறுகிறது ஆனால் அதிகாரிகள் மாறுவது இல்லை. தமிழ்நாடு முழுவதும் அதிருப்தியை உண்டாக்கி ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் ஒட்டுமொத்த எல்லாரும் தரப்பும் அதிருப்தி அடைய வைக்க வேண்டிய அவசியம் இல்லை. 31ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என எப்படி கூறினீர்கள். ஒட்டுமொத்தமாக இந்த அரசின் மீது விரோதத்தை ஏற்படுத்த வேண்டும் என்று அதிகாரிகள் செய்ததாக தான் நினைக்கிறோம். இப்பிரச்சனை தமிழக முதல்வரின் கவனத்திற்கு உடனடியாக கொண்டு செல்லப்பட வேண்டும்.

முதல்வர் விஜய்

நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தலில் இரண்டு தொகுதிகளிலும் தபால் ஓட்டுகள் விஜய் கட்சிக்கு சாதகமாக விழவில்லை. மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டார். அதிகாரிகள் சம்பந்தமில்லாமல் அரசின் மீது வெறுப்பினை ஏற்படுத்த வேண்டும் என திட்டமிட்டு செய்கிறார்கள். அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் சொத்து மதிப்பை அக்டோபர் 31க்குள் தெரியப்படுத்த வேண்டும் என்றால் அதற்கான விளக்கத்தை தெரியப்படுத்த வேண்டும். எந்த விவரமும் சொல்லாமல் 31ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றால் எப்படி முடியும்.

அரசு ஊழியர்கள்

ஆகையால் உடனடியாக முதலமைச்சர் இதனை நிறுத்த வேண்டும் பின்னர் இதற்கான விளக்கத்தை அளிக்க வேண்டும். அரசின் மீது ஆண்ட கட்சிகளின் விமர்சனம் கடுமையாக உள்ளது. அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் விரோதிக்க வேண்டாம். ஜெயலலிதா ஆட்சி காலத்தில் தான் பழைய ஓய்வு திட்டத்தை ரத்து செய்துவிட்டு புதிய ஓய்வு திட்டத்தை கொண்டு வந்தார்கள். அதன் பின் நடைபெற்று பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதியையும் அதிமுக இழந்தார்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+