திண்டுக்கல் குடிகாரர்களுக்கு ஷாக் செய்தி.. 2 நாட்கள் மூடப்படும் டாஸ்மாக்! வெளியான திடீர் அறிவிப்பு!

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழாவை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட எல்லையோரத்தில் அமைந்துள்ள, அரசு மதுபானக் கடைகள், அத்துடன் இணைந்த மதுபானக் கூடங்கள் மற்றும் தனியார் மனமகிழ் மன்றத்தில் அமைந்துள்ள மதுபானக் கூடம் ஆகியவற்றை 29ஆம் தேதி (இன்று) மாலை 6 மணி முதல் 30ஆம் தேதி மாலை 5.00 மணி வரை மூட உத்தரவிட்டுள்ளார் மாவட்ட ஆட்சியர் சரவணன்.

தமிழக அரசின் மதுவிலக்கு ஆயத் தீர்வு துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் டாஸ்மாக் நிறுவனம் செயல்பட்டு வருகிறது இதன் மூலம் தமிழகம் முழுவதும் சுமார் 2000க்கும் மேற்பட்ட மதுபான கடைகளும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்களும் செயல்பட்டு வருகிறது.

டாஸ்மாக் நிறுவனத்தின் மூலம் சில்லறை விற்பனை வாயிலாக ஒரு நாளைக்கு சராசரியாக 100 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் கிடைக்கும் நிலையில் வார விடுமுறை மற்றும் தீபாவளி போன்ற விசேஷ நாட்களில் பல மடங்கு விற்பனை அதிகரிக்கும்.

TASMAC Shops Closed in Dindigul

டாஸ்மாக்

குறிப்பாக புத்தாண்டு தீபாவளி பொங்கல் போன்ற நாட்களில் டாஸ்மாக் மது விற்பனை மிக அதிக அளவில் இருக்கும். குறிப்பாக தீபாவளி சந்தர்ப்பத்தில் 3 அல்லது 4 நாட்களிலேயே தமிழ்நாட்டில் ரூ.750 கோடிக்கும் அதிகமான விற்பனை நடக்கும். புத்தாண்டு, பொங்கல் சமயங்களிலும் டாஸ்மாக் விற்பனை சாதனை எண்ணிக்கையை கடக்கும். தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் 180 மில்லி, 360 மில்லி, 720 மில்லி அளவுகளில் மதுபானங்கள் விற்கப்படுகிறது.

மதுக்கடை மூடல்

இதுதவிர தனியார் மதுபான பார்கள், நட்சத்திர ஓட்டல்களில் செயல்படும் பார்கள், பப்புகள் என தனியாக உள்ளன. இந்த மதுக்கடைகள் எல்லாம் வருடத்தில் சில முக்கியமான நாட்கள் மூடப்படுவது வழக்கம். அதாவது ஜனவரி 15, ஜனவரி 26, மே 1, வள்ளலார் தினம், சுதந்திர தினம், அக்டோபர் 2, மே 1 தொழிலாளர் தினம் என குறிப்பிட்ட நாட்கள் மூடப்படும். இது தவிர குறிப்பிட்ட சில தினங்களில் டாஸ்மாக் உள்ளிட்ட அனைத்து மதுபானக்கடைகளை மூட சூழ்நிலைக்கேற்ப மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிடுவார்கள்.

தேவர் குருபூஜை

இந்நிலையில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜையையொட்டி திண்டுக்கல் எல்லை பகுதிகளில், டாஸ்மாக், மதுபான சில்லறை விற்பனை கடைகள், பார்கள், கிளப் சார்ந்த பார்கள் செயல்பட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதேபோல் சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள மதுக் கடைகளை மூட அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

மாவட்ட ஆட்சியர் உத்தரவு

இதுதொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில்," இராமநாதபுரம், பசும்பொன்னில் நாளை முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் குருபூஜை தினம் அனுசரிக்கப்பட இருப்பதால், பொது அமைதி மற்றும் சட்டம் மற்றும் ஒழுங்கிணைப் பாதுகாக்கும் பொருட்டும், குருபூஜை நிகழ்வு அமைதியாக நடைபெறும் பொருட்டும்,
திண்டுக்கல் மாவட்ட எல்லையோரத்தில் அமைந்துள்ள கொடைரோடு, பள்ளப்பட்டி சிப்காட் கடை, கிருஷ்ணாபுரம் (மட்டப்பாறை) கடை, விளாம்பட்டி, அணைப்பட்டி மற்றும் ரெங்கப்பநாயக்கன்பட்டி கடை, விருவீடு (சாந்திபுரம்) கடை ஆகிய அரசு மதுபானக் கடைகள், அத்துடன் இணைந்த மதுபானக் கூடங்கள் மற்றும் தனியார் மனமகிழ் மன்றத்தில் அமைந்துள்ள மதுபானக்கூடம் ஆகியவற்றை இன்று மாலை 6 மணி முதல் நாளை முழுவதும் விற்பனையின்றி தற்காலிகமாக மூடுவதற்கு திண்டுக்கல் ஆட்சியர் செ.சரவணன் உத்தரவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+