திண்டுக்கல் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

செய்யாத வேலைக்கு ‘கல்வெட்டு’..! அமைச்சரை வறுத்தெடுத்த நெட்டிசன்ஸ்! இப்போ எப்படி மாறிடிச்சு பாருங்க!

Google Oneindia Tamil News

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வெள்ளோடு அருகே பேருந்து நிறுத்தத்தை புதுப்பிக்காமல் அமைச்சர் சக்கரபாணியின் பெயருடன் கல்வெட்டு வைக்கப்பட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், அவசர அவசரமாக அதனை சரிசெய்ய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.

6 டீம்.. 5 வருசம்தான்.. காங்கிரஸில் 'பரபர'.. மாநாட்டில் எடுக்கப்படும் 10 முக்கிய முடிவுகள் என்னென்ன? 6 டீம்.. 5 வருசம்தான்.. காங்கிரஸில் 'பரபர'.. மாநாட்டில் எடுக்கப்படும் 10 முக்கிய முடிவுகள் என்னென்ன?

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள சிறுநாயக்கன்பட்டி கிராமத்தில் பேருந்து நிறுத்தம் மிகவும் சேதமடைந்து காணப்பட்டது, மக்களின் உயிருக்கு அச்சமளிக்கும் வகையில் இருந்ததால் அதனை சீரமைக்க வேண்டும் என அந்த அவ்வூர் மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

பாழடைந்த பேருந்து நிறுத்தம்

பாழடைந்த பேருந்து நிறுத்தம்

பல நாட்களாகியும் சீரமைக்கப்படாத நிலையில் இதுகுறித்து திண்டுக்கல் மாவட்டத்தின் முக்கிய அமைச்சர்களில் ஒருவராக இருக்கும் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற உறுப்பினரான அர.சக்கரபாணியிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து அவரது பரிந்துரையின் பெயரில் சிறு நாயக்கன்பட்டி பேருந்து நிறுத்தத்தை சீரமைக்க முடிவுசெய்யப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்து அமைச்சருக்கும் நன்றியும் தெரிவித்தனர.

உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி

உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி

ஆனால் பேருந்து நிறுத்தத்தை சீரமைக்க நிதி ஒதுக்கப்பட்ட நிலையில் நீண்ட நாட்களாக பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் இதுகுறித்து அப்பகுதி மக்கள் மீண்டும் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பல அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். இந்த நிலையில் தான் அந்த பேருந்து நிறுத்தத்தில் திடீரென வைக்கப்பட்டிருந்த கல்வெட்டால் அப்பகுதி மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். காரணம் ஆள் இல்லாத ஊருக்கு அட்ரஸ் போல சீரமைக்கப்படாத பேருந்து நிறுத்தத்தில் அமைச்சர் சக்கரபாணியின் பரிந்துரையின் பேரில் சீர் அமைக்கப்பட்டதாக புத்தம் புதிய கல்வெட்டு ஒன்று வைக்கப்பட்டிருந்தது.

வெடித்த சர்ச்சை

வெடித்த சர்ச்சை

பணிகள் மேற்கொள்ள மேலேயே திமுகவினரும் அதிகாரிகளும் பணத்தை சுருட்டி விட்டதாக அதிமுகவினர் புகார் தெரிவித்தனர். இது குறித்த புகைப்படங்களும் செய்திகளும் ஊடகங்கள் மற்றும் சமூக வலை தளங்களில் வெளியான நிலையில் நெட்டிசன்கள் பலரும் திமுகவினரை கடுமையாக விமர்சித்து வந்தனர். ஏற்கனவே பொங்கல் பரிசு தொகுப்பு ஊழல் நடைபெற்றதாக கூறி அமைச்சரின் பெயர் அடிபட்ட நிலையில் தற்போது கல்வெட்டு விவகாரம் பெரிதாக வெடித்தது.

திடீரென சீரமைப்பு

திடீரென சீரமைப்பு

இந்த நிலையில் கல்வெட்டு வைத்த பின்னர் அந்த நிலத்தை சீரமைக்கும் பணிகள் தொடங்கும் எனவும் உடனடியாக சீரமைக்கப்படும் என அமைச்சர் தரப்பினர் தெரிவித்தனர். இது பெரும் விவாதப் பொருளாக மாறிய அளவில் திடீரென பேருந்து நிறுத்தம் சீரமைக்கப்பட்டுள்ளது. அதோடு அந்த புகைப்படங்களையும் திமுகவினர் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரப்பி வருகின்றனர். ஆனால் சமூக வலைதளங்களில் புகார் எழுந்ததாலேயே திமுகவினரும் அதிகாரிகளும் அவசர அவசரமாக சீரமைத்துள்ளது போல கணக்கு காட்டியிருப்பதாக தற்போது மீண்டும் புகார் எழுந்துள்ளது.

English summary
As the incident where the bus stop near Ottansathram in Dindigul district was not renovated and the name of Minister Chakrabarty was inscribed was talked about on social media, photos of the urgent need to fix it are spreading on social media.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X