பாத்ரூமுக்குள்.. எட்டிப்பார்த்த இளைஞர்.. கொந்தளித்த இளம்பெண்.. வெலவெலத்து போன கொடைக்கானல்..!
இளம்பெண்ணுக்கு பாலியல் டார்ச்சர் தந்த இளைஞர் கைதானார்
திண்டுக்கல்: இளம்பெண்ணை பாத்ரூம் வழியாக ஒரு இளைஞன் எட்டிப்பார்த்துவிட்டார்.. இதையடுத்து சம்பந்தப்பட்ட பெண்ணின் காலில் பொதுமக்கள் விழ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் ஒரு தனியார் ஹோட்டல் இயங்கி வருகிறது. இந்த ஹோட்டலுக்கு கேரளாவை சேர்ந்த குடும்பம் ஒன்று சாப்பிடுவதற்காக வந்துள்ளது..
இந்த குடும்பத்தை சேர்ந்த பெண் ஒருவர் ஹோட்டலில் இருந்த பாத்ரூமுக்கு சென்றுள்ளார். அவருக்கு 30 வயது இருக்கும்.

பாத்ரூம்
அப்போது, திடீரென ஒரு இளைஞர் பாத்ரூமின் பின்பக்க சுவற்றில் இருந்த ஜன்னல் வழியாக எட்டி பார்த்திருக்கிறார்.. இளைஞர் இப்படி பார்த்ததை அந்த பெண்ணும் பார்த்துவிட்டு அதிர்ச்சியானார்.. பிறகு, உடனடியாக சுதாரித்துக்கொண்ட பெண் உடனே வெளியே வந்து அந்த இளைஞரை மடக்கி பிடித்து, எதுக்காக பாத்ரூமில் எட்டி பார்த்தாய்? என்று கேட்டார்..

ஸாரி மேடம்
அதற்கு இளைஞர் பதில் எதுவும் சொல்லாமல் "ஸாரி மேடம்" என்று மட்டும் சொல்லி அங்கிருந்து நகர்ந்துள்ளார்.. ஆனாலும், ஆத்திரம் அடங்காத அந்த பெண், உடனடியாக அங்கிருந்த தன் குடும்பத்தாரிடம் விஷயத்தை சொன்னார்.. இதையடுத்து மொத்த குடும்பத்தினரும் இளைஞரை பிடித்து, துவைத்து எடுத்தனர்..

மன்னிப்பு
இதையடுத்து, பொதுமக்கள் அங்கு சூழ்ந்துகொண்டதுடன், சம்பந்தப்பட்ட பெண்ணின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க சொன்னார்கள்.. இளைஞரும் அந்த பெண்ணின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார்.. எனினும், பெண்ணும், அவரது குடும்பத்தினரும் தொடர்ந்து அவரை சரமாரியாக தாக்கினர்.. கொடைக்கானல் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது..

கைது
போலீசார் வரும்வரை அந்த இளைஞர் பெண்ணின் குடும்பம் தாக்கி கொண்டே இருந்தது.. விரைந்து வந்த போலீசார், இளைஞரை பிடித்து விசாரணையை துவக்கினர்.. அதில், அந்த இளைஞர் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த நம்ஜித் ராஜ் என்பதும் அதே ஹோட்டலில் அவர் வேலை பார்த்து வருவதும் தெரிய வந்தது. இறுதியில் பெண் தரப்பில் புகார் கொடுக்கவும், அந்த இளைஞனை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்துள்ளனர்.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications