மாடு கூட மதிக்க மாட்டேங்குது.. அஞ்சு ரூபாய்க்கு கூட வாங்க ஆளில்லை சார்..தவிப்பில் ஆழ்த்திய தக்காளி!

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: கடந்த ஆண்டு நவம்பர் டிசம்பர் காலகட்டத்தில் 150 ரூபாய் வரை விற்பனையான தக்காளி விலை தற்போது அதள பாதாளத்திற்கு சரிந்து இருக்கிறது. ஒரு கிலோ மூன்று ரூபாய் முதல் ஐந்து ரூபாய் வரை விற்கப்பட்டாலும் வாங்குவதற்கு ஆள் இல்லை. பறிப்பு கூலிக்கு கூட கட்டாததால் விவசாயிகள் அவற்றை செடியிலேயே விட்டு கால்நடைகளுக்கு தீவனம் ஆக்கி வருகின்றனர். மாதக்கணக்கில் பராமரித்த தக்காளிப் பழங்கள் அழுகிப்போய் கிடப்பதை கண்டு கண்ணீர் வடிக்கின்றனர் விவசாயிகள்.

ஒரு சீசனில் ஒரு காய்கறியின் விலை சரிவை சந்திப்பதும் மற்றொரு காய்கறியின் விலை அதிகரிப்பதும் வழக்கம் தான். மழைக் காலங்களில் தக்காளியின் விலை ஆனது மிகக் கடுமையாக அதிகரிக்கும். மழை காரணமாக தக்காளி செடியிலேயே அழுகி விடுவதால் மார்கெட்டுக்கு மிகக் குறைந்த அளவே தக்காளியின் வரத்து இருக்கும்.

இதனால் தக்காளியின் விலை அதிகரிப்பது வழக்கம். குறிப்பாக, அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் தக்காளியின் விலை வெகுவாக அதிகரிக்கும். கடந்த ஆண்டுகளில் 150 ரூபாய் வரை கூட தக்காளி மொத்த மார்க்கெட்டுகளில் விற்பனையானது.

dindigul Vegetable Farmers

வெளிச்சந்தைகளில் 170 ரூபாய் வரை விற்பனையானது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது பனி மற்றும் மழையின் தாக்கம் குறைந்து இருக்கும் நிலையில் வெயில் அதிகரித்து இருக்கிறது. அதே நேரத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாததால் தக்காளி விளைச்சல் வெகுவாக அதிகரித்திருக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை தர்மபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் அதிக அளவில் தக்காளி உற்பத்தி செய்யப்படுகிறது.

திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர், ஒட்டன்சத்திரம், சென்னை கோயம்பேடு ஆகிய மொத்த மார்க்கெட்டுகளுக்கு விற்கப்படுகிறது. அங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் மொத்தம் மற்றும் சில்லறை விற்பனை கடைகளுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது. தற்போது அதிக அளவில் தக்காளி விளைச்சல் இருப்பதால் மார்க்கெட்டுக்கு வரத்து அதிகரித்து இருக்கிறது. இதனால் விலை மிகக் கடுமையாக சரிந்திருக்கிறது.

குறிப்பாக திண்டுக்கல் ஒட்டன்சத்திரம், அய்யலூர் உள்ளிட்ட பல பகுதிகளில் தக்காளியை வாங்க ஆள் இல்லாததாலும், அதை சந்தைக்கு கொண்டு செல்வதற்காக ஆகும் செலவுக்குக் கூட தக்காளி விலை கட்டுபடியாகாது என்பதாலும் உழவர்கள் தக்காளியை சாலைகளிலும், கால்வாய்களிலும் கொட்டி வருகின்றனர். மேலும், தக்காளி விலையை நிலைப்படுத்த தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

ஒரு கிலோ தக்காளி உற்பத்தி செய்ய குறைந்தது ரூ.10 செலவாகிறது. தக்காளி அறுவடை, போக்குவரத்து செலவு ஆகியவற்றுடன் லாபமும் சேர்த்து குறைந்தது ஒரு கிலோ தக்காளி ரூ.20க்கு கொள்முதல் செய்யப்பட்டால் தான் விவசாயிகளுக்கு ஓரளவு லாபம் கிடைக்கும். ஆனால், தக்காளி நல்ல விளைச்சல் ஈட்டும் போது கிலோ ரூ.3க்கு கூட வாங்கப்படுவதில்லை. தக்காளியின் விலை வெகுவாக சரிந்துள்ளதால் அதனை பறிக்க வரும் கூலித் தொழிலாளர்களுக்கு கூட சம்பளம் கொடுக்க முடியாததால் அவற்றை சில விவசாயிகள் செடியிலேயே விட்டு கால்நடைகளுக்கு தீவனமாக்கி வருகின்றனர். சிலரோ அதனை பறித்து குப்பையில் கொட்டி வருகின்றனர்.

அதிக அளவில் தக்காளி மாடுகளுக்கு கொட்டப்படுவதால் அவற்றை தீவனமாக கூட கால்நடைகள் எடுத்துக் கொள்வதில்லை. இதனால் வயல்வெளிகளில் தக்காளி குப்பை போல கொட்டப்பட்டு அழுகி கிடக்கிறது. ஆயிர கணக்கில் செலவு செய்து வாரக் கணக்கில் காப்பாற்றிய செடிகள் காய்ந்து போய் தக்காளிப் பழங்கள் அழுகிப் போய் கிடப்பதால் வேதனையில் கண்ணீர் வடிக்கின்றனர் விவசாயிகள். இது தொடர்பாக தமிழக அரசு ஊழிய நடவடிக்கை எடுக்க வேண்டும், திமுக தேர்தல் வாக்குறுதியில் சொன்னதைப் போல காய்கறிகளுக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும், குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+