200+ சீட்டு.. தமிழகத்தில் தளபதியின் 'விசில் புரட்சி'.! ஓவர் கான்ஃபிடன்சில் பேசிய தவெக செங்கோட்டையன்!
திண்டுக்கல்: தமிழகம் பசுமைப் புரட்சி, வெண்மைப் புரட்சி, இனப் புரட்சி மற்றும் சோசலிசப் புரட்சிகளைக் கண்டுள்ளது. தற்போது நான்காவதாகத் தவெக தலைவர் தளபதியின் 'விசில் புரட்சி' நடைபெறப் போகிறது. வரும் தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று அரியணையில் அமரும் என முன்னாள் அமைச்சரும் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகியுமான செங்கோட்டையன் கூறியுள்ளார்.
பரபரப்புகளும் விறுவிறுப்புகளுக்கும் பஞ்சமில்லாமல் 2026 தமிழக சட்டசபை தேர்தல் நிறைவடைந்திருக்கிறது. 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடந்த நிலையில், 62 வாக்கு எண்ணிக்கை மையங்களில் வாக்கு இயந்திரங்கள், கண்ட்ரோல் யூனிட்டுகள், விவிபாட் இயந்திரக்கள் ஆகியவை வைக்கப்பட்டுள்ளன.

வாக்கு எண்ணிக்கையை மிகுந்த ஆர்வத்துடன் எதிர்நோக்கி வரும் அரசியல் கட்சியினர் தற்போது தங்கள் பார்வையை கடவுள்கள் பக்கம் திருப்பியுள்ளனர். நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் திருச்செந்தூர் முருகனை தரிசனம் செய்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் பழனி முருகன் கோவிலிலும் ஏராளமான அரசியல்வாதிகள் குவிந்து வருகின்றனர். அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் மனைவி ,மகன் , முன்னாள் அதிமுக அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன் , பொள்ளாச்சி ஜெயராமன் , ஆர்.பி உதயகுமார் ஆகியோர் பழனி மலைக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய குவிந்து வருகின்றனர்.
அந்த வகையில், முன்னாள் அமைச்சரும் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகியுமான செங்கோட்டையன் பழனி மலைக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் நிருபர்களிடம் பேசியபோது, தவெக தலைவர் விஜய் திருச்செந்தூர் சென்று முருகப்பெருமானை வழிபட்டுள்ளார். தமிழகத்தை ஆளப்போகும் தலைவராக அவர் உருவெடுத்துள்ளார். அவருடைய தொலைநோக்குச் சிந்தனையை மக்கள் ஒருமனதாக ஏற்றுக்கொண்டுள்ளனர்.
தமிழகத்தை முன்னிறுத்தி அவர் முன்னெடுக்கும் இந்த அரசியல் பயணம் உலகளவில் கவனிக்கப்பட்டு வருகிறது. தேர்தல் முடிவுகள் குறித்துப் பேசிய அவர், *தமிழகம் ஏற்கனவே பசுமைப் புரட்சி, வெண்மைப் புரட்சி, இனப் புரட்சி மற்றும் சோசலிசப் புரட்சிகளைக் கண்டுள்ளது. தற்போது நான்காவதாகத் தவெக தலைவர் தளபதியின் 'விசில் புரட்சி' நடைபெறப் போகிறது.
வரும் தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று அரியணையில் அமரும். தவெக வாக்குகளை பிரித்தாலும், ஆட்சி அமைக்க முடியாது என்ற எதிர்கட்சிகள் விமர்சனங்கள் குறித்த கேள்விக்கு," யார் எத்தகைய கருத்துக்களைக் கூறினாலும் தவெக-வின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது; அது வெறும் 'அல்வா' பேச்சுகளாகவே முடியும் என்றார்.
-
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
விஜய் - ராகுல் சந்திப்பு நடக்காமல் போனதற்கான உண்மைக் காரணம் என்ன? அதிர்ச்சி தரும் பின்னணி -
முதல்வர் விஜய்.. பதவியேற்ற 20 நாட்களில் 6 பெரிய சறுக்கல்கள்.. சொதப்பல் மேல் சொதப்பல்! -
"டிவிகேவால் தான் கரு கலைந்ததா?".. இதோடு உங்க நாடகத்தை நிறுத்திக்கோங்க!" ஜூலிக்கு நடிகர் வார்னிங் -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
குழந்தைகளை பயன்படுத்தி வாக்கு கேட்டதாக வழக்கு.. விஜய்யின் தவெகவுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
திருச்செந்தூர் கோயிலில் அமைச்சரிடமே லஞ்சம்.. அர்ச்சகர் பூஜை செய்ய தடை.. 2 காவலாளிகள் சஸ்பெண்ட்! -
நள்ளிரவு சர்ப்ரைஸ் ரெய்டு விட்ட அமைச்சர்.. கோவை அரசு மருத்துவமனையில் ட்விஸ்ட் -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
எடப்பாடியை சந்திக்காத இரு துருவங்கள்! தவெக தலைமையுடன் சிவி சண்முகம், விஜயபாஸ்கர் ரகசிய ஆலோசனை?












Click it and Unblock the Notifications