வேடசந்தூர் சுவேதாவுக்கு பல ஆண் நண்பர்கள்? யோசிக்காமல் திண்டுக்கல் கணவர் செய்த காரியம்

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: தமிழகத்தில் குடும்ப பிரச்சினைகள் மற்றும் சந்தேகத்தால் கணவன் - மனைவி இடையே ஏற்படும் மோதல்கள் கொலை வரை சென்று முடியும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. அந்த வகையில், திண்டுக்கல் மாவட்டத்தில் நண்பர்கள் கூறிய தகவலை நம்பி, மனைவியை கணவரே அரிவாளால் கழுத்தை அறுத்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. என்ன நடந்தது?

Vedasandur Dindigul Tamil Nadu Crime 9

நண்பர்கள் பேச்சு

திண்டுக்கல் மாவட்டம் எரியோடு பாண்டியன் நகரைச் சேர்ந்தவர் அஜித்குமார் (28). டிரைவராக வேலை பார்த்து வரும் இவருக்கும் சுவேதா (24) என்பவருக்கும் திருமணமாகி ஓராண்டு ஆகிறது.

இந்நிலையில், தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு அஜித்குமார் தனது நண்பர்களுடன் மது அருந்திக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது நண்பர்கள் சிலர், அஜித்குமாரிடம் அவரது மனைவி சுவேதாவின் நடத்தை சரியில்லை என்று கூறியுள்ளனர். மேலும், அவர் மற்றவர்களுடன் தவறான தொடர்பில் இருப்பதாகவும் பேசியதாகத் தெரிகிறது.

கணவன் மனைவி தகராறு

நண்பர்கள் சொன்னதை அப்படியே நம்பிய அஜித்குமார், ஆத்திரத்துடன் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு மனைவி சுவேதாவிடம் இதுகுறித்து கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் தம்பதி இடையே தகராறு முற்றியிருக்கிறது.. ஏற்கனவே போதையில் இருந்த அஜித்குமார், உச்சக்கட்ட ஆவேசமாகி, வீட்டிலிருந்த அரிவாளை எடுத்து சுவேதாவின் கழுத்தை அறுத்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த சுவேதா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்து விட்டார்.

காவல் நிலையத்தில் சரண்

மனைவியைக் கொலை செய்த அஜித்குமார், நேராக காவல் நிலையத்துக்கு சென்று சரணடைந்துள்ளார். இதையடுத்து, எரியோடு காவல் ஆய்வாளர் வினோதா, அஜித்குமாரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

தண்ணி அடிக்கும்போது, நண்பர்கள் சொன்னதாக சொல்லப்படும் தகவலை நம்பி, மனைவியை என்ன ஏதென்றுகூட கேட்காமல், எதையும் முழுமையாக விசாரிக்காமல், கணவரே இப்படியொரு காரியத்தை செய்தது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே நாளில் இத்தனை கொலையா

ஏற்கனவே தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு கேள்விக்குறியாகி உள்ளதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன. நேற்றுகூட ஒரே நாளில் சென்னை முதல் தேனி வரை பல்வேறு மாவட்டங்களில் காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் உள்பட 10 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய போலீசாருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகியுள்ளதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

சென்னை வியாசர்பாடியில் முன்பகை காரணமாக தனுஷ் என்ற இளைஞர் கொலை செய்யப்பட்டார். திருவள்ளூரில் மேகலா என்ற இளம்பெண் கொல்லப்பட்டார். திருச்சியில் 3 பேர் கொலை செய்யப்பட்டனர். கடலூர், சிவகங்கை மாவட்டங்களில் குற்ற வழக்குகளில் தொடர்புடைய 3 பேர் கொல்லப்பட்டனர். பெரம்பலூரிலும் ஒருவர் கொலை செய்யப்பட்டார்.

போலீசுக்கே பாதுகாப்பு இல்லை

தேனி மாவட்டம் சாலையில் பட்டாசு வெடித்து ரீல்ஸ் எடுத்த இளைஞர்களைத் தட்டிக்கேட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் செந்தில்குமார், மதுபோதையில் இருந்த இளைஞர்களால் அடித்துக் கொல்லப்பட்டார்.

இப்படி தமிழகத்தில் அடுத்தடுத்து கொலை சம்பவங்கள் அரங்கேறி வரும் நிலையில், திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கணவரே அவரைக் கொலை செய்திருப்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நண்பர்கள் கூறிய தகவலை நம்பி மனைவியைக் கொலை செய்துவிட்டு கணவர் போலீஸ் ஸ்டேஷனில் சரணடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+