பழனி கோவில் பஞ்சாமிர்தம் விலையை உயர்த்த முடிவு? விஷ்வ ஹிந்து பரிஷத் எதிர்ப்பு
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி கோவிலில் பஞ்சாமிர்தம், தங்கரதம் இழுப்பதற்கான கட்டணம் உயர்த்தப்படுவதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் அதனை உடனே கைவிட வேண்டும் என விஷ்வ ஹிந்து பரிஷத் மாநில தலைவர் ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலின் மிக முக்கிய அடையாளமே 'பஞ்சாமிர்தம்' தான். முருகப் பெருமானின் பிரசாதமான இது கோயிலிலேயே தயாரிக்கப்படுகிறது. திருப்பதி எப்படி லட்டுக்கு புகழ் பெற்றதோ, பழனி என்றால் பஞ்சாமிருதம் தான்..

இந்தியாவிலேயே ஒரு கோவில் பிரசாதத்திற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டது என்றால் அது பழனி பஞ்சாமிர்தத்திற்குத்தான். அதாவது, பழனி மண்ணில், அங்குள்ள பாரம்பரிய முறைப்படி தயாரிக்கப்படும் பஞ்சாமிர்தத்திற்கு ஈடு இணை உலகத்தில் எங்குமே இல்லை என்பதற்கான அதிகாரப்பூர்வ அங்கீகாரம் இது!
பழனி பஞ்சாமிர்தம் அவ்வளவு எளிதாக கெட்டுப் போகாது. இதற்குக் காரணம், இதைத் தயாரிக்கும்போது ஒரு சொட்டுத் தண்ணீர் கூட சேர்க்கப்படுவதில்லை. முற்றிலும் இயற்கை பொருட்களின் கலவை என்பதால், இது இயற்கையான முறையிலேயே பதப்படுத்தப்பட்டு நீண்ட நாட்களுக்குச் சுவை மாறாமல் இருக்கிறது. இந்நிலையில் பழனி கோவிலில் தயாரிக்கப்படும் பஞ்சாமிர்தம் விலை உயர்த்தப்படுவது. தங்கத்தேர் கட்டணம் அதிகரிப்புக்கு பக்தர்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம் என பழனி கோவில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் திண்டுக்கல் வந்த விஷ்வ ஹிந்து பரிஷத் மாநில தலைவர் ராமகிருஷ்ணன் நிருபர்களுக்கு அளிதத பேட்டியில் கூறுகையில், "தமிழ் கடவுள் முருகனின் மூன்றாம் வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு கோடிக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாகவும், வாகனங்கள் மூலமும் வந்து சாமிதரிசனம் செய்கின்றனர். ஆறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் பிரசித்தி பெற்ற பஞ்சாமிர்தம் மற்றும் தங்க ரதம் இழுப்பதற்கான கட்டணம் உயர்த்தப்படுவது குறித்து மக்களிடையே கருத்து கேட்கப்படுகிறது. வருமானம் அதிகம் உள்ள பழனி மலைக்கோவிலில் பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் சுமையை ஏற்றும் வகையில் இந்த கட்டண உயர்வு அமையும்.
தங்கரதம் இழுப்பதற்கான கட்டணம் 2000 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது 2500 ஆக உயர்த்தவும், 40 ரூபாய்க்கு விற்கப்படும் % கிலோ பஞ்சாமிர்தம் 45 முதல் 50 ரூபாய் வரை விலை உயர்ந்த கருத்து கேட்கப்பட்டு வருகிறது. இதற்கு விசுவ ஹிந்து பரிஷத் கண்டனத்தை ஹிந்து பரிஷத் கண்ட தெரிவித்துக் கொள்கிறது. கண்டிப்பாக இதன் கூடாது. மக்கள் தலையில் விலையை உயர்த்தப்படக் சுமையை ஏற்றக் கூடாது. பல கோடி ரூபாய் வருமானம், கட்டண வரும் மலைக்கோவிலில், இதுபோன்ற உயர்வுபெரிதும் பக்தர்களை பாதிக்கும். எனவே இந்த கட்டண உயர்வை கைவிட வேண்டும்" இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications