"காட்டேஜ்" இளைஞர் மீது.. 50 வயது பெண்ணுக்கு வந்த ஆசை.. ஒரே அட்டகாசம்.. கொடைக்கானல் கொடுமை
இளைஞரை தாக்கிய 4 பேருக்கு கொடைக்கானல் போலீசார் வலை விரித்துள்ளனர்
கொடைக்கானல்: 32 வயது இளைஞர் ஒருவருடன் 50 வயது பெண் குடும்பம் நடத்தி வந்துள்ளார்.. விளைவு கொலைவெறி தாக்குதலில் வந்து முடிந்துள்ளது...!
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலை கிராமம் கூக்கால்.. இங்கு தன்ராஜ் என்பவர் 5 வருடமாக தங்கி உள்ளார்.. இவர் உசிலம்பட்டியை சேர்ந்தவர்.. 32 வயதாகிறது..
கொடைக்கானலிலேயே சொந்தமாக ஒரு நிலம் வாங்கி, காட்டேஜ் நடத்தி வருகிறார்.. இதே கிராமத்தை சேர்ந்தவர் பாலம்மாள் என்பவர் இந்த காட்டேஜில் வேலை பார்த்து வந்துள்ளார்.

விதவை பெண்
பாலம்மாளுக்கு 50 வயதாகிறது.. கணவனை இறந்தவர்.. ஒரே ஒருமகள் இருக்கிறார்.. அவருக்கும் திருமணம் நடந்துவிட்டது.. அவர் மாமியார் வீட்டில் உள்ளார்.. அதனால் பாலம்மாள் தனியாக வீடு எடுத்து தங்கி உள்ளார்.. அப்போதுதான் காட்டேஜ் ஓனர் தன்ராஜுக்கும் பாலம்மாளுக்கும் பழக்கம் ஏற்பட்டது.. இருவரும் ஒரேவீட்டில் 3 வருடமாக வாழ்ந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது..

அறிவுரை
ஆனால், பாலம்மாளின் இந்த நடவடிக்கை அந்த ஊர் மக்களுக்கும், உறவினர்களுக்கும் பிடிக்கவில்லை. எனவே, பாலம்மாளிடம் பலமுறை அறிவுரை சொன்னார்கள்.. இளைஞனுக்கும் அடிக்கடி அறிவுரை சொல்லி உள்ளனர்.. சில முறை இந்த விவகாரத்தில் தகராறுகளும் நடந்துள்ளதாக தெரிகிறது.. இந்நிலையில், கூக்கால் கிராமத்தில் கடந்த வாரம் ஊர் திருவிழா நடந்துள்ளது.. அப்போது தன்ராஜ் அங்கே வந்துள்ளார்.. அந்த நேரம் பாலம்மாளின் தம்பி பூவேந்திரன், அவரது நண்பர்கள் உள்ளிட்ட 4 நபர்கள் குடிபோதையில் தன்ராஜை ஆபாச வார்த்தைகளால் திட்டி உள்ளனர்..

கொடூர தாக்குதல்
ஒருகட்டத்தில் போதை அதிகமாகி, தன்ராஜின் கை, கால்களை கயிற்றால் கட்டியும், கல்லால் தலை, உடல் பகுதிகளை கொடூரமாக தாக்கியும் உள்ளனர்... இதை பார்த்த பாலம்மாளும், அங்கிருந்த பொதுமக்களும், பதறியடித்து கொண்டு வந்து, தன்ராஜை மீட்டு கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.. அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து தேனி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்... தீவிரமான சிகிச்சை அளிக்கப்பட்டாலும் இளைஞன் இன்னும் சீரியஸ் கண்டிஷனில் இருக்கிறாராம்.

தலைமறைவு
இதனிடையே, தன்ராஜை 4 பேர் ஒன்றாக சேர்ந்து கொடூரமாக தாக்கும் வீடியோவானது சோஷியல் மீடியாவில் பரவ ஆரம்பித்துவிட்டது.. இந்த வீடியோவானது கொடைக்கானல் போலீசாரின் கவனத்துக்கும் எட்டியதையடுத்து, பூவேந்திரன், வரதராஜன், கார்த்திக், சின்ன தம்பி, உள்ளிட்ட 4 நபர்கள் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 5 வழக்குகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.. ஆனால், 4 பேரையும் காணவில்லை.. அவர்களை கொடைக்கானல் போலீசார் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications