திண்டுக்கல்லில் கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி! செங்கோட்டையனை அதிமுகவிலிருந்து நீக்காதது ஏன்?
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் கட்சி நிர்வாகிகளுடன் அதிமுக பொதுச் செயலாளர் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் செங்கோட்டையனை கட்சியை விட்டு நீக்காமல் பதவிகளை மட்டும் எடப்பாடி பழனிசாமி பறித்தது ஏன் என்பதை பார்க்கலாம்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை அதிமுக ராணுவக் கட்டுக்கோப்புடன் இருந்து வந்ததை அனைவரும் அறிவார்கள். ஆனால் அவர் மறைந்ததும் கட்சி இரு அணிகளாக பிளவுப்பட்டது. மீண்டும் ஓரணியில் இருந்தது.

ஜெயலலிதா மறைந்த பிறகு, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஒரு தேர்தலில் கூட சொல்லிக் கொள்ளும்படியான வெற்றியை பெறவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓபிஎஸ் போர்க் கொடி உயர்த்தினார். ஆனால் அவர் பொதுக் குழுவால் நீக்கப்பட்டுவிட்டார்.
சசிகலா
சசிகலா, டிடிவி தினகரன், ஓபிஎஸ் உள்ளிட்டோர் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என விரும்புகிறார்கள். தனித்தனியே செயல்பட்டால் அது கட்சியின் தேர்தல் வெற்றியை பாதிக்கும் என்பதுதான் அனைவரின் எண்ணமாக இருக்கிறது. இதைத்தான் அதிமுக மூத்த நிர்வாகிகள், எடப்பாடி பழனிசாமியிடம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளிப்படுத்தினராம்.
வெட்டவெளிச்சம்
இத்தனை நாளாக காதும் காதும் வைத்தது போல் நடந்த இந்த "ஒன்றிணைந்த அதிமுக"வுக்கான பேச்சுக்கள் நேற்று வெட்டவெளியில் நடந்தது. இதை முன்மொழிந்தவர் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன். செப்டம்பர் 5-ஆம் தேதி மனம் திறந்து பேசுவதாக அவர் அறிவித்திருந்தார்.
ஊழல் குற்றச்சாட்டு
அதன்படி அவர் நேற்று பேசுகையில், எம்ஜிஆர் மீது ஊழல் குற்றச்சாட்டை முன் வைத்த எஸ்.டி. சோமசுந்தரத்தையே வீடு போய் பார்த்து ஒன்றிணைந்து பணியாற்ற அழைத்தவர் புரட்சித் தலைவர். அது போல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது பலர் அவதூறு பரப்பிய நிலையிலும் அவர்களை கட்சியில் இணைந்து வழிநடத்தினார்.
கட்சியின் வெற்றி
எப்போது கட்சியின் வெற்றிக்கு தேவை, மூத்த நிர்வாகிகளின் அனுபவம். இதை அந்த மாபெரும் தலைவர்கள் உணர்ந்ததால்தான் கட்சி உடையாமல் இத்தனை ஆண்டுகளாக பார்த்துக் கொண்டனர்.
10 நாட்கள் அவகாசம்
எனவே அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் ஒன்றிணைக்கும் முயற்சியை எடுக்க எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாட்கள் அவகாசம் கொடுப்பதாக செங்கோட்டையன் தெரிவித்திருந்தார். ஒருவேளை எடப்பாடி பழனிசாமி, ஒரே மனநிலையுடன் இருக்கும் நண்பர்களுடன் இணைந்து ஆலோசனை நடத்துவேன் என தெரிவித்திருந்தார்.
செங்கோட்டையன் பேச்சு
இந்த நிலையில் செங்கோட்டையன் பேச்சுக்கு தேனியில் நடந்த பிரச்சாரத்தில் எடப்பாடி பழனிசாமி பதில் அளிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் அளிக்கவில்லை. இந்த நிலையில் திண்டுக்கல்லில் முகாமிட்டுள்ள எடப்பாடி பழனிசாமி, இன்று காலை நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன், கே.பி. முனுசாமி, காமராஜ் உள்ளிட்டோருடன் 2 மணி நேரமாக ஆலோசனை நடத்தினார்.
எடப்பாடி பழனிசாமி பேசியது என்ன
அப்போது எடப்பாடி பழனிசாமி, "அதிமுகவில் டிடிவி தினகரன், ஓபிஎஸ், சசிகலா உள்ளிட்டோரை சேர்க்க முடியாது. செங்கோட்டையன் சொல்வதை போல் செய்ய முடியாது. உள்கட்சி விவகாரத்தை வெளியில் பேசக் கூடாது என சொல்லியும் செங்கோட்டையன் செய்திருப்பது சரியல்ல" என தெரிவித்தாராம்.
நீக்காதது ஏன்
ஆனால் இந்த ஆலோசனை கூட்டத்தில் ஒருவர் கூட, செங்கோட்டையன் சொல்வது சரி என சொல்லவில்லை என தெரிகிறது. இதனால் செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்கும் முடிவுக்கு எடப்பாடி வந்ததாக சொல்லப்படுகிறது.
நடந்தது என்ன
பின்னர் செங்கோட்டையன் எம்ஜிஆர் காலத்து எம்எல்ஏ என்பதாலும் மேற்கு மண்டலத்தில் குறிப்பாக ஈரோடு மாவட்டத்தில் திமுக அமைச்சர் முத்துச்சாமியை விட இவருக்கு செல்வாக்கு அதிகம் இருக்கிறது என்பதாலும் அவரை கட்சி பொறுப்புகளில் இருந்து விடுவிக்க உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications