மணப்பாறை அரசு மருத்துவமனையில் நடந்த அதிசயம்.. இந்தியாவே பார்த்து வியக்குதே.. இதுதான் தமிழ்நாடு!
திண்டுக்கல்: மணப்பாறை மருத்துவமனையில் நடந்த ஆபரேஷன் ஒன்று தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது. மக்கள் பலரும் இதை பற்றிய செய்திகளை பகிர்ந்து தமிழ்நாட்டை பாராட்டி வருகின்றனர்.
தமிழ்நாடு எப்போதும் மருத்துவ துறையில் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடிதான். தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை பெரும்பாலும் இந்தியாவின் சுகாதார தலைநகரம் என்று அழைக்கப்படுகிறது. 19 ஆம் நூற்றாண்டிற்கு முன்பே சென்னை இந்தியாவின் மருத்துவ தலைநகரமாக மாறியது, ஏனெனில் நாடு முழுவதிலும் இருந்து நோயாளிகளின் நிலையான வருகையை அப்போதில் இருந்தே சென்னை எதிர்கொண்டு வந்துள்ளது. 1835 ஆம் ஆண்டில், மெட்ராஸ் மருத்துவக் கல்லூரிதான் மாநிலத்தில் மருத்துவப் படிப்புக்கான முதல் நிறுவனமாகும்.

ஒவ்வொரு வருடமும் தண்டு வெளிநாடுகளில் இருந்து 45 முதல் 50 சதவீத சுகாதார சுற்றுலாப் பயணிகளையும் உள்நாட்டில் 40 சதவீதத்தையும் ஈர்க்கிறது. இந்தியாவில் மூன்றாவது அதிக எண்ணிக்கையிலான மருத்துவக் கல்லூரிகளுடன், தமிழ்நாடு நாட்டிலேயே மிகவும் மேம்பட்ட சுகாதார வசதிகளைக் கொண்டுள்ளது.
கொரோனா காலத்திலும் கூட தமிழ்நாட்டின் சுகாதாரம் மிக சிறப்பாக இருந்தது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு பொது சுகாதாரத்தில் தனக்கென ஒரு முத்திரையை பதித்துள்ளது. மேலும் மலிவு விலையில், குறிப்பாக கிராமப்புற மக்களுக்கு தரமான சுகாதார சேவைகளை வழங்குவதால் தமிழ்நாடு மிகவும் பிரபலமாக உள்ளது. சுகாதாரத் துறையில் குறிப்பிடத்தக்க சீர்திருத்தங்கள் காரணமாக சென்னை மட்டுமின்றி தமிழ்நாடு முழுக்கவே கிராமப்புற சுகாதார உள்கட்டமைப்பு சிறப்பான நிலையை அடைந்தது.
தமிழ்நாட்டின் மருத்துவ கட்டமைப்பு வசதிக்கு மிக சிறந்த எடுத்துக்காட்டு சென்னைக்கு தினம் தினம் வரக்கூடிய பயணிகள்தான். தமிழ்நாட்டில் மருத்துவ துறை, மருத்துவ சேவை, மருத்துவத்தில் புதிய கண்டுபிடிப்புகள், மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கை என்று அனைத்திலுமே நம்பர் 1 இடத்தில் உள்ளது.
மணப்பாறை: இந்த நிலையில்தான் மணப்பாறை மருத்துவமனையில் நடந்த ஆபரேஷன் ஒன்று தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது.
மணப்பாறை அருகே இருக்கும் புதுப்பொத்தி கிராமத்தை சேர்ந்தவர் ரவி செல்வ குமார். இவருக்கு அடிக்கடி முதுகுவலி ஏற்பட்டு இருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன் முதுகுவலி திடீரென மோசமாகி உள்ளது. அடித்து போட்டது போல முதுகு வலி அவரை பின்னி எடுத்து உள்ளது.
இதையடுத்து மணப்பாறை மருத்துவமனைக்கு சென்றவருக்கு ஸ்கேன் எடுக்கப்பட்டு உள்ளது. அங்கே ஸ்கேன் செய்து பார்த்ததில் அதிர்ச்சி ரிப்போர்ட் ஒன்று வந்துள்ளது. அதன்படி அவருக்கு தண்டு வடப்பகுதியில் கட்டி இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவருக்கு மணப்பாறை யில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மருத்துவர்கள் தொடர் சிகிச்சை வழங்கி வந்தனர்.
அவருக்குக்கு ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார். இதையடுத்து ஜான் மருத்துவர்கள் விசுவநாதன், மலை துறை, அணிபிரபா ஆகியோர் அடங்கிய குழுவினர் இவருக்கு மிக கடினமான தண்டுவட ஆபரேஷனை மேற்கொண்டனர். மிக சிக்கலான ஆபரேஷனை மேற்கொண்டு அவரின் கட்டியை தண்டுவடத்தில் இருந்து நீக்கினர். 2.30 மணி நேரம் ஆபரேஷன் செய்து, 300 கிராம் கட்டியை நீக்கி உள்ளனர்.
அரசு மருத்துவமனையில் இலவசமாக இந்த ஆபரேஷன் செய்யப்பட்டதை பலரும் பாராட்டி வருகின்றனர். இது மிகவும் ரிஸ்க்கியான ஆபரேஷன் ஆகும். தண்டுவடத்தில் எளிதாக ஆபரேஷன் செய்ய முடியாது. இதை பகிர்ந்துள்ள பிரபல மருத்துவர் ப்ரூனோ, இந்தியாவில் பல மாநிலங்களில் முதுகு தண்டு அறுவை சிகிச்சை செய்யும் அரசு மருத்துவமனைகளே கிடையாது என்று உங்களுக்கு தெரியுமா ?
இந்தியாவில் பல மாநிலங்களில் முதுகு தண்டு அறுவை சிகிச்சை செய்யும் அரசு மருத்துவமனைகளே கிடையாது என்று உங்களுக்கு தெரியுமா ?
— 𝕲𝖚𝖗𝖚 𝕭𝖗𝖚𝖓𝖔 🇮🇳 (@spinesurgeon) July 24, 2023
சில மாநிலங்களில் கூட மருத்துவகல்லூரிகளில் மட்டுமே இந்த அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகின்றன என்று உங்களுக்கு தெரியுமா ?
இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில்… pic.twitter.com/zMSto85Qfa
சில மாநிலங்களில் கூட மருத்துவகல்லூரிகளில் மட்டுமே இந்த அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகின்றன என்று உங்களுக்கு தெரியுமா ?
இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் உள்ள மக்கள் இது போன்ற அறுவை சிகிச்சைகளுக்காக புதுதில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரிக்கோ அல்லது வேலூரில் உள்ள சி.எம்.சி மருத்துவகல்லூரிக்கோ அல்லது சென்னையில் அப்பலோ மருத்துவமனைக்கோ ஆயிரம் மைல் கடந்து வருகிறார்கள் என்று உங்களுக்கு தெரியுமா ?
பிற மாநிலங்களில் மாநில தலைநகரில் கூட செய்ய முடியாத அறுவை சிகிச்சைகளை தமிழகத்தில் அனைத்து மாவட்ட தலை நகரங்களிலும், ஏன் சில மாவட்டங்களில் ஒன்றிற்கு மேற்பட்ட இடங்களில் தாலுகா அளவில் கூட செய்யும் அளவு தமிழக அரசு உள்கட்டமைப்பை வலுப்படுத்தியுள்ளது உங்களுக்கு தெரியுமா ? இது போன்ற அறுவை சிகிச்சை செய்யும் அளவு திறமையான, ஆர்வமுள்ள மக்கள் நலன் பேனும் மருத்துவர்கள் தமிழக அரசு மருத்துவமனையில் பணிபுரிகிறார்கள் என்று உங்களுக்கு தெரியுமா ?, என்று பாராட்டி உள்ளார்.












Click it and Unblock the Notifications