தாய்–மகளுடன் பக்கத்து வீட்டு சிறுமியும் நீரில் மூழ்கி பலியான பரிதாபம்
திண்டுக்கல்: குளத்தில் குளிப்பதற்காக தாய்-மகளுடன் சென்ற பக்கத்து வீட்டு சிறுமியும் நீரில் மூழ்கி உயிரிழந்த பரிதாப சம்பவம் திண்டுக்கல் அருகே நடந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே உள்ள காவேரி செட்டிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பரமசிவம். இவர் திண்டுக்கல் கூட்டுறவு மொசைட்டியில் சேல்ஸ்மேனாக வேலை செய்கிறார். இவரது மனைவி ராதா (வயது 38). இவர்களது மகள் பவ்யா ( வயது 12 ). ராதா, மகள் பவ்யாவை அழைத்துக் கொண்டு இன்று மேட்டுக்கடை அருகே உள்ள ஒரு குளத்தில் குளிப்பதற்காக சென்றுள்ளார்.

அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் தண்டபாணி என்பவரின் மகள் சரஸ்வதி (வயது13) என்பவரையும் உடன் அழைத்துச் சென்றுள்ளனர். சரஸ்வதி, அரசு பள்ளியில் 7 ம் வகுப்பு படித்து வருகிறார்.
குளத்தில் 3 பேரும் குளித்துக் கொண்டிருந்தபோது திடீரென ஆழம் தெரியாமல் மூவரும் தண்ணீரில் மூழ்கினர். ஆழம் அதிகமாக இருந்ததால் 3 பேரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இதை அந்த பகுதியில் சென்றவர்கள் பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் இணைந்து மூன்று பேர் உடலையும் மீட்டு திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து சாணார்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரே ஊரைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications