22 வயதுதான்.. சிக்கன் சாப்பிட்ட இளைஞர்.. மூச்சுத்திணறி திடீர் பலி.. திண்டுக்கல்லில் பரிதாபம்

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: வீட்டில் சமைத்த சிக்கனை சாப்பிட்ட 22 வயது இளைஞர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் திண்டுக்கல்லில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீபகாலமாகவே, இளம் வயதினர் மாரடைப்பு உள்ளிட்ட காரணங்களால் உயிரிழப்பது அதிகரித்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க, உணவு சாப்பிட்டதும் உயிரிழக்கும் நிகழ்வுகளும் ஆங்காங்கே நடந்து வருகின்றன.

பிரியாணி சாப்பிட்ட இளைஞர் மரணம்; புரோட்டா சாப்பிட்ட கல்லூரி மாணவி உயிரிழப்பு போன்ற செய்திகளும் நம்மை பயமுறுத்துகின்றன. அதுபோன்ற ஒரு சம்பவம்தான் திண்டுக்கல்லில் நடைபெற்றிருக்கிறது.

கூலித்தொழிலாளி

கூலித்தொழிலாளி

திண்டுக்கல் மாவட்டம் கலிக்கம்பட்டியைச் சேர்ந்தவர் வசந்தகுமார் (22). கூலி வேலை பார்த்து வருகிறார். இதனிடையே, நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அவரது வீட்டில் சிக்கன், மீன் உணவுகளை சமைத்துள்ளனர். இந்நிலையில், காலை வேலை விஷயமாக வெளியே சென்றிருந்த வசந்தகுமார் கடும் பசியில் மதியம் வீடு திரும்பியுள்ளார். இதையடுத்து, சிக்கன் உணவை சாப்பிட்டிருக்கிறார் வசந்திகுமார்.

சிக்கன், பொறித்த மீன்கள்

சிக்கன், பொறித்த மீன்கள்

பசி அதிகமாக இருந்ததால் வழக்கத்தை விட கொஞ்சம் அதிகமாகவே அவர் சிக்கன் சாப்பிட்டதாக தெரிகிறது. பின்னர் அவர் படுத்து உறங்கிவிட்டார். இதனைத் தொடர்ந்து மாலை எழுந்த அவர், வீட்டில் இருந்த பொறித்த மீன்களை சாப்பிட்டிருக்கிறார். இதையடுத்து அவருக்கு திடீரென நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டு மூச்சுவிட முடியாமல் போயுள்ளது.

ஜீரணமாக குளிர்பானம்

ஜீரணமாக குளிர்பானம்

இதுகுறித்து தனது தந்தையிடம் கூறிய வசந்தகுமார், ஜீரணத்துக்காக குளிர்பானம் குடித்திருக்கிறார். பிறகு, சிறிது நடந்து சென்றுவிட்டு வருவதாக கூறி வசந்தகுமார் சென்றார். ஆனால், நீண்டநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது தந்தை வசந்தகுமாருக்கு போன் போட்டுள்ளார். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. பின்னர் அவரை தேடிச்சென்ற போது ஊருக்கு வெளியே மயங்கிய நிலையில் வசந்தகுமார் கிடந்துள்ளார்.

பரிதாபம்

பரிதாபம்

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர், ஆம்புலன்ஸுக்கு போன் செய்து வரவழைத்துள்ளனர். அப்போது அவரை பரிசோதித்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவலறிந்த சின்னாளபட்டி போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து அவரது உடலை பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சிக்கன் சாப்பிட்டு இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+