பாரம்பரிய உணவுப்பொருட்கள்...விவசாயிகளிடம் இருந்து நேரடி கொள்முதல் அஃரோடெக் அசத்தல்!
இயற்கை விவசாயம், தற்சார்பு வாழ்வியல், மதிப்புக்கூட்டு விற்பனை திட்டங்களை நம் விவசாயிகளுக்காக செய்துவருகிறது
சென்னை: ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளிடமிருந்து நேரடி கொள்முதல் செய்து நுகர்வோரிடம் சேர்த்த அஃரோடெக் அசத்தல். இந்நிறுவனம் சில்லறை வணிகத்தில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறார்கள்.

எந்த வேளாண் பொருளையும் உற்பத்தி செய்துவிடும் ஆற்றல் விவசாயிகளுக்கு உண்டு.ஆனால், விளைவித்த பொருள்களைச் சந்தைப்படுத்துவதுதான் பெரும் சவால். இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அஃரோடெக் ஒருங்கிணைந்த விவசாய உற்பத்தியாளர் நிறுவனம் இணைந்து, விவசாயிகள் விளைவிக்கும் பொருள்களை மதிப்பு கூட்டுதல் வியாபாரத்தின் அடிப்படையில் அவர்களிடமிருந்துபெற்று நுகர்வோருக்கு நேரடியாக எளிய முறையில் "உழவன்" என்ற பெயரில் மகளிர்குழுக்கள் மூலமாக பேக்கிங் செய்து தரமாக வினியோகம் செய்து தரப்படுகிறது.

இயற்கை விவசாயம், தற்சார்பு வாழ்வியல், மதிப்புக்கூட்டு விற்பனை திட்டங்களை நம் விவசாயிகளுக்காக செய்துவருகிறது. விவசாயிகள் விளைவித்த நெல், உளுந்து, துவரம் பருப்பு, கேழ்வரகு, கம்பு, மாப்பிள்ளைச் சம்பா, தூயமல்லி, சீரகச்சம்பா அரிசி வகைகள் என பல பொருள்களை நேரடி கொள்முதல் செய்கிறது. இந்நிறுவனம். "அஃரோடெக் ஒருங்கிணைந்த விவசாய உற்பத்தியாளர் நிறுவனம்" என்ற உழவர் நிறுவனம் மூலமாக எட்டு ஆயிரத்திற்கும் மேலான பெண் விவசாயிகள் ஆடு வளர்ப்பு மற்றும் கோழி வளர்ப்பு திட்டத்தில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். மேலும் இந்நிறுவனம் சில்லறை வணிகத்தில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறார்கள்.

வெளிச் சந்தையில் வியாபாரிகள் கொள்முதல் செய்யும் விலையைவிட, நியாயமான விலைக்கு விவசாயிகளிடமிருந்தே விளைபொருள்களை வாங்கி, விற்பனை செய்துவருகின்றது. அரசு கொள்முதல் நிலையங்களில் மதிப்பு கூட்டுதல் வியாபாரத்தின் அடிப்படையில் பொருட்களை வாங்கிக் கொண்டாலும் நாட்கணக்கில் காத்திருக்கின்றனர் நம் விவசாயிகள். ஆனால் ஆக்ரோடெக்டில் விவசாயிகளுக்கு மதிப்பு கூட்டுதல் வியாபாரத்தின் அடிப்படையில் சரியான விலை கொடுத்து கொள்முதல் செய்கிறது.

"இந்தநிறுவனம் எங்களுக்கு எல்லா வகையிலும் உதவியாக இருக்கிறது நாங்கள் விளைவிக்கின்ற பொருட்களை இடைத்தரகர்கள் இன்றி எவ்வித அலைச்சல் இல்லாமல் உரிய விலையில் வாங்கிக்கொள்வது எங்களுக்கு மிகவும் ஊக்கமாக இருக்கிறது" என்பதாக நிறுவனத்தில் உறுப்பினராக இருக்கும் விவசாயிகள் நெகிழ்கின்றனர். இந்த திட்டத்தின் மூலமாக சுய உதவிகுழுக்களுக்கு வருமானம் ஈட்டும் வகையில் வியாபார வாய்ப்பையும் தருகிறது. இந்தியாவிலேயே முதன்முறையாக சுய உதவி குழுக்கள் மூலமாக மளிகை பொருட்களை விநியோகம் செய்யும் முதல் நிறுவனமாக அஃரோடெக் திகழ்கிறது.

இந்தப் பொருட்களை கிராமப்புற மக்கள் வீட்டிற்கே சென்று டோர் டெலிவரி (Door Delivery Concept) மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது. வீட்டிற்குத்தேவையான மாதாந்திர மளிகை பொருட்களை அவர்கள் வீட்டிற்கே டெலிவரி செய்து, மேலும் இந்தத் திட்டத்தை கிராமப்புற பெண்களின் வசதிக்கேற்ப எளிய தவணை முறையை அஃரோடெக் அறிமுகப்படுத்தி வெற்றிகரமாக 4500 மேற்கொண்ட வாடிக்கையாளரை கொண்டிருக்கிறது. உற்பத்திசெய்பவரும் நுகர்வோரும் எவ்வித இடைத்தரகர்கள் இன்றி பெறுவதினால் உற்பத்தி செய்பவருக்கு அவர்கள் உற்பத்தி செய்ததற்கான விலையும் நுகர்வோருக்கு சரியான விலையும் கிடைப்பதை அக்ரோடெக் மார்ட்டின் (AGROTECH MART) சிறப்பாகும்.
மேலும் அஃரோடெக் மார்ட் இதுவரை தமிழ்நாட்டில் 18 கிளைகளுடன் வெற்றிகரமாக செயல்பட்டு வருகின்றது. இதனை மேலும் விரிவாக்கம் செய்யும் வகையில் தமிழகம் முழுவதும் 50 கிளைகளை செயல்படுத்தப்படவுள்ளது.

இம்மாதிரியான திட்டத்தில் பங்குதாரர்கள் , முதலீட்டாளர்களை இந்நிறுவனம் வரவேற்கின்றது இத்திட்டத்தில் நீங்களும் இணைந்து செயல்படுவதினால் அதிகலாபம் பெற்றுபயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு கீழ்க்கண்ட எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.
தொடர்புக்கு 9884299871 Mail ID : [email protected]
"வேளாண் விவசாயிகளை காப்போம்...."
"உள்நாட்டு உற்பத்தியாளரை ஆதரிப்போம்...."












Click it and Unblock the Notifications