Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நிஜ உரிமைக்குரல்! பிரதீப்பின் நடத்தை பற்றி பேசிய "மாயாவிற்கு" எதிராக.. பெண்ணே கொடுத்த "மீ டூ" புகார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் பிரதீப்பிற்கு எதிராக உரிமை குரல் எழுப்பி ரெட் கார்ட் கொடுத்த மாயாவிற்கு எதிராக பெண் ஒருவரே மீ டூ புகார் கொடுத்திருக்கிறார். ஆம்.. பெண்கள் பாதுகாப்பு பற்றி பேசிய மாயாவிற்கு எதிராக பெண் ஒருவரே மீ டூ புகார் அளித்தது மீண்டும் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.

நடந்து வரும் பிக் பாஸ் 7 சீசனில் நடிகர் பிரதீப் ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பப்பட்டது சர்ச்சையாகி உள்ளது. அவருக்கு எதிராக நடிகை மாயா உள்ளிட்டோர் உரிமை குரல் எழுப்பினார்கள். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி அவர் வெளியேற்றப்பட்டு உள்ளார்.

முதல்நாள் வரை பிரதீப் உடன் மாயா, பூர்ணிமா உள்ளிட்டோர் சகஜமாக பேசி வந்த நிலையில் வார இறுதியில் திடீரென இப்படி பாதுகாப்பு இல்லை என்று பேசியது சர்ச்சையாகி உள்ளது. அதோடு பிரதீப் மீது வைக்கப்படும் புகார்கள் பலவற்றிற்கு ஆதாரம் இல்லாதது, முன்னுக்கு பின் முரணான தகவல்கள் இருப்பதும் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.

Do you Maya who talked for women right against Pradeep in Bigg Boss was also an alleged Me too abuser?

கமல் விசாரிக்கவில்லை: கமல்ஹாசன் இதை சரியாக விசாரிக்காமல் முடிவு எடுத்துவிட்டார். அதோடு பிரதீப் பேசுவதற்கு கூட அனுமதிக்கவில்லை. இதில் கமல் தீர விசாரிக்கவில்லை என்றும் புகார்கள் வைக்கப்படுகின்றன.

முக்கியமாக தற்போது விஜே அர்ச்சனா போன்றோர் கேட்கும் கேள்விகளை பார்க்கும் போது.. மாயா கேங்க் திட்டமிட்டு பிரதீப்பிற்கு இருக்கும் புகழ் காரணமாக அவர் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை வைத்து அவரை வெளியே அனுப்பிவிட்டார்களோ என்றும் கேட்க தோன்றுகிறது. இதன் காரணமாகவே கடந்த 4 நாட்களாக பிரதீப் தேசிய அளவில் டிரெண்டாகி வருகிறார். சமூக வலைத்தளங்களில் அவரின் பெயர் உச்சத்தில் டிரெண்டாகி வருகிறது.

மாயா மீதான புகார்: பிரதீப்பிற்கு எதிராக உரிமை குரல் எழுப்பி ரெட் கார்ட் கொடுத்த மாயாவிற்கு எதிராக பெண் ஒருவரே மீ டூ புகார் கொடுத்திருக்கிறார். இது இப்போது கொடுக்கப்பட்ட புகார் அல்ல.. 2018ல் கொடுக்கப்பட்ட புகார். இதுதான் தற்போது விவாதம் ஆகி உள்ளது.

அந்த சமயத்தில் #Metoo இயக்கம் பிரச்சாரம் வேகமாக வளர்ந்து வந்த நிலையில், சென்னையைச் சேர்ந்த பெண் கலைஞர் ஒருவர், நடிகை மாயா எஸ் கிருஷ்ணன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.

Do you Maya who talked for women right against Pradeep in Bigg Boss was also an alleged Me too abuser?

சென்னையைச் சேர்ந்த நாடகக் கலைஞர் அனன்யா ராமபிரசாத் தனது ஃபேஸ்புக் பதிவில், "மாயா கிருஷ்ணன் மூலம் நான் பாலியல், மன மற்றும் உணர்ச்சி அழுத்தம், துஷ்பிரயோகம் மற்றும் மிகக் கொடூரமான கேஸ் லைட்டிங் எனப்படும் உணர்வு அழுத்தம் ஆகியவற்றுக்கு ஆளாகினேன், இவை அனைத்தும் என்னை துஷ்பிரயோகம் செய்த மாயா எஸ் கிருஷ்ணனின் எனக்கு நடத்தப்பட்டவை.

அவர் மூலம் நான் பாலியல், மன மற்றும் உணர்ச்சி அழுத்தத்திற்கு உள்ளானேன், என்று கூறி இருந்தார். இதற்கு அப்போது பதிலடி கொடுத்த மாயா.. இதை சட்ட ரீதியாக எதிர்கொள்வேன் என்றார். ஆனால் மாயா அப்போது இதில் வழக்கு எதுவும் தொடக்கவில்லை.. மாறாக அவர் தனது சோஷியல் மீடியா கணக்கை டீ ஆக்டிவேட் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+