ஏமன் கிளர்ச்சியாளர்களின் அடிமடியிலேயே கை வைத்த டிரம்ப்.. அமெரிக்க தாக்குதலில் 74 பேர் பலி
துபாய் : ஏமனின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களால் கைப்பற்றப்பட்ட எண்ணெய் துறைமுகத்தை குறிவைத்து அமெரிக்க விமானப்படை நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 74 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் 171 பேர் காயமடைந்தனர். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கிளர்ச்சியாளர்களை குறிவைத்து நடத்திய மிகப்பெரிய தாக்குதலாக இது பார்க்கப்படுகிறது.
இஸ்ரேலுக்கு எதிராக போரிட்டு வரும் பாலஸ்தினத்தின் ஹமாஸ் படையினருக்கு, அண்டை நாடான ஏமனில் இருந்து செயல்படும் ஹவுதி பயங்கரவாத அமைப்பு ஆதரவு அளித்துள்ளது. ஆதரவுடன் மட்டுமின்றி செங்கடல் உள்ளிட்ட கடல் பகுதிகளில், அமெரிக்காவின் சரக்கு கப்பல்கள் உள்ளிட்டவற்றின் மீது ஹவுதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் அமெரிக்கா கடும் கோபத்தில் இருந்து வருகிறது.

இந்நிலையில் ஏமனில் உள்ள ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க போவதாக டொனால்டு டிரம்ப் கடந்த மார்ச் 15ம் தேதி அறிவித்திருந்தார். இதன்படியே ஏமனின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களால் கைப்பற்றப்பட்ட எண்ணெய் துறைமுகத்தை குறிவைத்து அமெரிக்க விமானப்படை நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 74 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் 171 பேர் காயமடைந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதேநேரம் அமெரிக்க ராணுவத்தின் மத்திய கமாண்டோ படை இப்படி நடத்திய தாக்குதல் குறித்தோ அல்லது அதன் குறிப்பிட்ட இலக்குகள் மற்றும் எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என்பது குறித்த எந்த தகவலையும் உடனடியாக வெளியிடவில்லை.
இதற்கிடையில், ஏமனின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுமே தாக்கப்பட்ட பகுதி தொடர்பான தகவல்களை வெளியிடுவது இல்லை என்று கூறப்படுகிறது. ஏமனின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள், அமெரிக்க ராணுவத்திற்கு சொந்தமானவற்றை தாக்கும் போதும், தாக்கிய பின்னரும் எந்த தகவல்களையும் வெளியிடுவது இல்லை..
எனினும் தற்போது அமெரிக்கா, ஏமனின் ராஸ் இசா எண்ணெய் துறைமுகத்தின் மீது நடத்திய மிகப்பெரிய வான்வெளி தாக்குதல் மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. அடுத்ததாக ஏமன் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா ஆரம்பித்திருப்பது உலக அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் கிராஃபிக் காட்சிகளை ஹவுத்திகள் உடனடியாக வெளியிட்டிருக்கிறார்கள்.
இதனிடையே ஊடகம் ஒன்றுக்கு கருத்துதெரிவித்த அமெரிக்க ராணுவம். "ஈரான் ஆதரவு பெற்ற ஹவுத்தி பயங்கரவாதிகளுக்கு எரிபொருள் வழங்கும் இந்த தளத்தை அகற்றவும், 10 ஆண்டுகளுக்கும் மேலாக முழு பிராந்தியத்தையும் அச்சுறுத்தும் ஹவுத்தி முயற்சிகளுக்கு நிதியளித்த சட்டவிரோத வருவாயை அவர்களுக்குப் பறிக்கவும் அமெரிக்கப் படைகள் நடவடிக்கை எடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
"இந்தத் தாக்குதல் ஏமன் மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் நோக்கம் கொண்டதல்ல என்றும் அவர்கள் ஹவுத்தி அடிமைத்தனத்தின் தூக்கி எறிந்துவிட்டு அமைதியாக வாழ விரும்புகிறார்கள் என்றும் அமெரிக்கா கூறியுள்ளது. அதேநேரம் அங்கு ஏற்பட்ட எந்தவொரு உயிரிழப்பு குறித்தும் ஒப்புக்கொள்ளவில்லை.. பொதுமக்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுவது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது. தற்போது பாலத்தீனத்தை தொடர்ந்து ஏமனும் போரில் சிக்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்க தாக்குதல் நடத்திய ராஸ் இசா துறைமுகம், ஏமனின் செங்கடலில் உள்ள ஹோடைடா கவர்னரேட்டில் அமைந்திருக்கிறது. ஏமனின் தற்போது கிளர்ச்சியாளர்கள் தான் ஆண்டு வருகிறார்கள். ஹவுத்திகள் எண்ணெயைக் கொண்டுவர ராஸ் இசா துறைமுகத்தை பயன்படுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.
-
நெதன்யாகுவை திட்டியது உண்மைதான்.. லெபனான் விவகாரத்தில் நடந்தது என்ன? ஓபனாக பேசிய டிரம்ப்! -
73 ஏவுகணை தாக்குதல்.. 656 ட்ரோன்.. சைரன் சத்தம்.. பெண்கள், குழந்தை கதறல்.. உக்ரைனை துவம்சம் செய்த ரஷ்யா! -
இந்தியா மீது 12.5% கூடுதல் வரி விதிக்கும் டிரம்ப்.. பூதாகரமாக வெடிக்கும் Section 301 பிரச்சனை! -
அமெரிக்காவின் புதிய வரி.. இந்தியாவுக்கு சுத்தி சுத்தி ஏகப்பட்ட 'அடி'.. திருப்பூர் மட்டும் எஸ்கேப்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்?












Click it and Unblock the Notifications