முடங்கிய துபாய்.. பிளான் Bஐ கையில் எடுக்கும் இந்திய விமான நிறுவனங்கள்.. நிலைமையை சமாளிக்க முடியுமா?
டெல்லி: மத்திய கிழக்கு மோதல் காரணமாகத் துபாய் விமான நிலையம் மொத்தமாக முடங்கியுள்ளது. இந்திய நகரங்களில் இருந்து துபாய் செல்லும் விமானச் சேவை நிறுத்தப்பட்டுள்ள சூழலில், இந்தியப் பயணிகள் இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே சில மாற்று வழிகளையும் இந்திய விமான நிறுவனங்கள் ஆய்வு செய்து வருகின்றன.
மத்திய கிழக்கில் வெடித்துள்ள மோதல் 3வது வாரத்தில் நுழைந்துள்ளது. இஸ்ரேல் மீது தாக்குதலை நடத்தும் ஈரான், அத்தோடு நிற்காமல் மற்ற வளைகுடா நாடுகள் மீதும் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. குறிப்பாக ஐக்கிய அமீரகத்தின் முக்கிய நகரான துபாய் மீது ஈரான் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

துபாய் ஏர்போர்ட்
வரிசையாக பல்வேறு டிரோன்களை அனுப்பித் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இதன் காரணமாகத் துபாய் விமானச் சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.. இதையடுத்து மற்ற அமீரக நகரங்களான ஷார்ஜா, அபுதாபி, ராஸ் அல் கைமா போன்ற பிற விமான நிலையங்களுக்கு சில நிறுவனங்கள் சேவைகளை மாற்றி இயக்கி வருகின்றன.
ஏர் இந்தியா
ஏர் இந்தியா குழுமம் மத்திய கிழக்கு முழுவதும் இப்போது 44 விமானங்களை இயங்குகிறது. துபாய்க்கான விமானச் சேவைகள் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில், மற்ற அமீரக நகரங்களான அபுதாபி, ஷார்ஜா, ராஸ் அல் கைமா விமான நிலையங்களுக்கு ஏர் இந்தியா விமானங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன. டெல்லி, கொச்சி, கோழிக்கோடு, கண்ணூர், மங்களூரு, மும்பை உள்ளிட்ட நகரங்களிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அபுதாபி, ராஸ் அல் கைமா, ஷார்ஜா இடங்களுக்குத் தற்காலிக விமானங்களை இயக்குகிறது. நேற்று செவ்வாய்க்கிழமை துபாய்க்கு நேரடியாக ஒரு விமானத்தைக் கூட ஏர் இந்தியா இயக்கவில்லை எனச் சொல்லப்படுகிறது.
ஏர் இந்தியா விமானம் டெல்லி, மும்பையிலிருந்து சவுதியின் ஜெட்டாவிற்கு விமானச் சேவையை வழங்கும். கோழிக்கோடு- ஜெட்டா வழித்தடத்தில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானச் சேவை வழக்கம் போலத் தொடரும். ஓமன் நாட்டில் மஸ்கட்டிலிருந்து டெல்லி, கொச்சி, கோழிக்கோடு, மும்பை, திருச்சி உள்ளிட்ட நகரங்களுக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் இயக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.. டெல்லி, மும்பையிலிருந்து சவுதி அரேபியாவின் ஜெட்டாவிற்கு ஏர் இந்தியாவின் திட்டமிட்ட சேவைகள் தொடரும். ரியாத்திற்கு டெல்லி, கோழிக்கோட்டிலிருந்து தற்காலிக விமானங்கள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற விமான நிறுவனங்கள்
ஏர் இந்தியா மட்டுமின்றி மற்ற இந்திய விமான நிறுவனங்களும் துபாய் வழித்தடங்களில் சிரமங்களை எதிர்கொண்டுள்ளன. துபாய் விமான நிலையத்தில் தரையிறங்கும் அனுமதியைத் துபாய் விமான நிலைய அதிகாரிகள் மறு அறிவிப்பு வரை நிறுத்தி வைத்துள்ளதாக இண்டிகோ தெரிவித்துள்ளது. எனவே, கடைசிக் கட்ட அறிவிப்புகளைப் பார்த்துவிட்டு விமான நிலையத்திற்கு வருமாறு பயணிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்படுகிறது. ஸ்பைஸ்ஜெட் நிறுவனமும் துபாய் விமானச் சேவைகள் பாதிக்கப்படலாம் என்றும் கடைசிக்கட்ட மாற்றங்கள் ஏற்படலாம் என்றும் தெரிவித்துள்ளது. இது தொடர்பாகப் பயணிகளுக்கு எஸ்எம்எஸ், மின்னஞ்சல் மூலம் தகவல் அனுப்பப்படுகிறது.
ரத்து செய்யப்பட்ட ரூட்களில் முன்பதிவு செய்தவர்கள், கூடுதல் கட்டணமின்றி வேறு தேதிக்குப் பயணிக்கலாம் அல்லது முழு பணத்தையும் திரும்பப் பெறலாம் என விமான நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
ஐக்கிய அமீரகம்
ஐக்கிய அமீரகம் என்பது வளைகுடா பகுதியில் அமைந்துள்ள ஒரு கூட்டாட்சி நாடு. இது ஏழு சுயாட்சி அரசுகள், அதாவது எமிரேட்டுகளை கொண்ட நாடு. 1971இல் ஏழு எமிரேட்டுகளும் ஒன்றுபட்டு இந்நாடு உருவானது. இதன் தலைநகராக அபுதாபி உள்ள நிலையில், பொருளாதார மையமாகத் துபாய் இருக்கிறது. இது தவிர சார்ஜா, அஜ்மான் , ஃபுஜைரா , ராஸ் அல் கைமா, உமுல் குவைன் நகரங்கள் உள்ளன. இப்போது போர் பதற்றம் காரணமாகத் துபாயைத் தவிர்த்துவிட்டு மற்ற அமீரக நகரங்களில் விமான சேவை இயக்கப்படுகிறது.
-
"இதுதான் ஜப்பான்.." போருக்கு நடுவே தைரியமாக எடுத்த முடிவு.. உலக நாடுகள் கூட திணறுதே! -
இந்தியாவில் ஊரடங்கு? "அப்படியொரு திட்டம் பரிசீலனையில் கூட இல்லை!" மத்திய அரசு திட்டவட்டம் -
"நீங்க சொல்வதை எல்லாம் கேட்க முடியாது.." கண்டிஷன் போட்ட அமெரிக்கா.. திட்டவட்டமாக நிராகரித்த ஈரான்! -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications