துபாய் கார் ரேஸ்.. ஒரு போட்டியில் இருந்து அஜித் குமார் விலகல்.. கடைசி நேரத்தில் எடுத்த முடிவு!
துபாய்: துபாய் 24H கார் பந்தய ரேஸில் இருந்து நடிகர் அஜித் குமார் கடைசி நேரத்தில் பின்வாங்கி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2 நாட்களுக்கு முன் நடந்த விபத்து காரணமாக ஒரு ரேஸில் இருந்து அஜித் குமார் கார் ஓட்டாமல் விலகியுள்ளதாகவும், Porsche GT4 போட்டியில் அஜித் குமார் ஓட்டுநர்களில் ஒருவராக பங்கேற்கிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித் குமார் துபாயில் நடக்கவுள்ள 24 ஹார்ஸ் எண்டூரன்ஸ் ரேஸில் பங்கேற்க தயாராகி வந்தார். உலகம் முழுவதும் பல்வேறு சுற்றுக்காக நடக்கவுள்ள இந்த ரேஸ்-க்காக நடிப்பில் இருந்து சில காலம் விலக உள்ளதாக அறிவித்தார். இதன்பின் தினமும் அஜித் குமார் பயிற்சி செய்யும் வீடியோக்களும், புகைப்படங்களும் வெளியாகி ட்ரெண்டாகியது.

இதனிடையே பயிற்சியின் போது அஜித் ஓட்டிய கார் விபத்தில் சிக்கியது. அதிர்ஷ்டவசமாக அஜித் குமாருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. இதன்பின்னரும் அஜித் குமார் பயிற்சியில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்தார். 24 ஹார்ஸ் ரேஸிங் என்பது ஒரு நிமிடம் கூட இடைவெளி இல்லாமல் காரினை ஓட்ட வேண்டும். இதில் கேப்டனின் பங்கு மிக முக்கியமானது.
அஜித் குமார் ரேஸிங் டீமில் அஜித் தான் கேப்டன். இதனால் அஜித் பெரும்பாலான நேரங்களை களத்திலேயே செலவிட வேண்டிய சூழல் இருந்தது. இந்த நிலையில் துபாய் ரேஸில் இருந்து கடைசி நேரத்தில் அஜித் குமார் விலகி இருப்பதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. துபாய் ரேஸில் அவர் கார் ஓட்டப்போவதில்லை என்றும் அஜித் குமார் அணி சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.
24H ஐரோப்பா சாம்பியன்ஷிப் தொடரின் முதல் சுற்றுப் போட்டி தொடங்கிய நிலையில், கடைசி நேரத்தில் அஜித் குமார் போட்டியில் இருந்து விலகி இருக்கிறார். இதுதொடர்பாக அஜித் குமார் ரேஸிங் நிர்வாகம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கடந்த 2 நாட்களாக அஜித் குமார் ரேஸிங் குழுவில் முக்கிய உறுப்பினர்கள் அஜித் குமாரின் விபத்து தொடர்பாக ஆலோசித்து வந்தனர். மிக நீண்ட தொடரான 24 ஹார்ஸ் எண்டூரன்ஸ் ரேஸில் அதிகளவிலான சவால்கள் இருப்பதை மனதில் வைத்து ஒரு முடிவு எடுக்கப்பட்டது.
அஜித் குமாருக்கு அணியின் வெற்றியும், நலனும் முக்கியமானது. இதனால் விபத்து காரணமாக கடைசி நேரத்தில் Porsche 992 Cup போட்டியில் கார் ஓட்டுவதில் இருந்து அஜித் குமார் விலகும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதில் உரிமையாளராக மட்டுமே அஜித் குமார் செயல்படுவார். அதேபோல் Porsche GT4 போட்டியில் அஜித் குமார் ஓட்டுநர்களில் ஒருவராக பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அஜித் குமார் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
-
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா?












Click it and Unblock the Notifications