அண்ணல் காந்தியடிகள் போற்றிய ஆண் தாய் உமர் நூல் வெளியீட்டு விழா
துபாய்: கம்பன் மீரான் எழுதிய அண்ணல் காந்தியடிகள் போற்றிய ஆண் தாய் உமர் என்கிற நூல் வெளியீட்டு விழா இணைய வழியாக நடத்தப்பட்டது. இந்த நூலை இஸ்லாமிய இலக்கியக் கழகம் வெளியிட்டுள்ளது.
இஸ்லாமிய இலக்கியக் கழகம் சார்பில். கம்பம் மீரான் எழுதிய 'அண்ணல் காந்தியடிகள் போற்றிய ஆண் தாய் உமர்' என்ற நூல் எழுதியுள்ளார். இதன் இணையவழி அறிமுக நிகழ்ச்சி ஜூம் தளத்தில் இன்று காலை 11.30 மணிக்கு தொடங்கி, மதியம் 1 மணி வரை நடைபெற்றது. இதற்கு காப்பியக்கோ டாக்டர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன் தலைமை தாங்கினார். இஸ்லாமிய இலக்கியக் கழகம் (அமீரகம்) ஒருங்கிணைப்பாளர், முஹிப்புல் உலமா ஏ. முஹம்மது மஃரூப் முன்னிலை வகித்தார்.

இந்த நிகழ்ச்சியில் திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவரும், தீயணைப்புத் துறையின் முன்னாள் கூடுதல் இயக்குநருமான ஜனாப். மு. ஷாகுல் ஹமீது, சுதந்திர போராட்ட வீரர் கக்கன் பேத்தியும், தீயணைப்புத் துறை முன்னாள் கூடுதல் இயக்குநருமான மீனாட்சி விஜயகுமார், பரமக்குடியைச் சேர்ந்த கவிஞர் கே.ஏ. ஹிதாயத்துல்லா ( கவிஞர் இதயா), மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி உதவிப் பேராசிரியர், முனைவர் சே.முனியசாமி, பரமக்குடி அன்னை ஆயிஷா அறக்கட்டளை தலைவர் ஏ.எஸ்.இப்ராஹிம் ஆகியோர் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.
நூலாசிரியரான கம்பம் மீரான் ஏற்புரையாற்றினார். இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் மற்றொரு ஒருங்கிணைப்பாளர் முதுவை ஹிதாயத் தொகுப்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சி அமீரக நேரப்படி காலை 10-11.30 மணி வரை நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications