ஈகோ பிரச்சனை.. இவரை முதல்ல தூக்குங்க.. மூத்த வீரருக்கு எதிராக "பிரஷர்".. தமிழருக்கு அடிக்கும் லக்!
துபாய்: நேற்று பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த ஆசிய கோப்பை போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்ததை தொடர்ந்து இந்திய வீரர் ஒருவரை அணியில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன.
பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் நேற்று பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த ஆசிய கோப்பை 2022 சூப்பர் 4 ஆட்டத்தில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இந்திய அணிக்கு இது பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
நேற்று டாஸ் வென்று பாகிஸ்தான் பவுலிங் செய்தது. இதையடுத்து முதலில் இறங்கிய இந்திய அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்தது.
அதன்பின் இறங்கிய பாகிஸ்தான் அணி கடைசி ஓவரில் ஒரு பால் மீதம் இருக்கும் நிலையில் 5 விக்கெட் இழப்பிற்கு இலக்கை அடைந்து வெற்றிபெற்றது.

இந்திய அணி
நேற்று இந்திய அணியின் தோல்விக்கு அணியின் மோசமான பவுலிங் முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது. 181 ரன்கள் அடித்தும் இந்திய அணியால் அதை டிபன்ட் செய்ய முடியவில்லை. அதோடு இந்திய அணி நேற்று 6வது பவுலரை பயன்படுத்தவில்லை. இதுவும் அணிக்கு சிக்கலாக மாறியது. நேற்று ரோஹித் நினைத்து இருந்தால் மிடில் ஓவர்களில் தீபக் ஹுடாவை பவுலிங் செய்ய வைத்து இருக்கலாம். ஆனால் ரோஹித் அவருக்கும் ஓவர் தரவில்லை. இது மொத்தமாக இந்திய அணிக்கே சிக்கலாக மாறியது.

மூன்று போட்டி
அதேபோல் இந்த தொடரில் கடந்த மூன்று போட்டியிலும் சஹால் சரியாக பவுலிங் செய்யவில்லை. முதலில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இவர் மோசமாக பவுலிங் செய்தார். பாகிஸ்தானுக்கு எதிராக சாஹல் ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை. அதேபோல் ஹாங்காங் குட்டி அணி. ஆனால் அந்த அணிக்கு எதிராகவும் இவர் விக்கெட் எடுக்கவில்லை. இவரின் பவுலிங் அவ்வளவு பிரஷர் தரும் விதமாக இல்லை.

பவுலிங்
இன்னும் சொல்லப்போனால் இவரின் பவுலிங்கில் மிக எளிதாக எதிரணி வீரர்கள் ஆடுகிறார்கள். ஹாங்காங்கிற்கு எதிராக சாஹல் கொஞ்சம் ரன்னை கட்டுப்படுத்தினார். ஆனால் நேற்றெல்லாம் பாகிஸ்தானுக்கு எதிராக ஒரே ஒரு விக்கெட் எடுத்து 43 ரன்கள் கொடுத்தார். அந்த அளவிற்கு மோசமாக இவரின் பவுலிங் இருந்தது. இவர் சுத்தமாக நேற்று பாகிஸ்தான் வீரர்களுக்கு பிரஷர் கொடுக்கவே இல்லை.

சாஹல்
இந்த நிலையில்தான் சாஹலை அணியில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன. அணியில் அஸ்வின் இருக்கிறார். அவர் நன்றாக ஆடுவார். அவரை அணியில் சேர்க்க வேண்டும். அதோடு பேட்டிங்கும் செய்வார். மூத்த வீரர் என்பதால் பிரஷரில் இன்னும் சிறப்பாக பவுலிங் செய்வார்.

அஸ்வின்
இதனால் அஸ்வினை அணியில் எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன. முதலில் சாஹலை அணியில் இருந்து தூக்க வேண்டும் என்று கோரிக்கைகள் அதிக அளவில் வைக்கப்பட்டு வருகின்றன. அதே சமயம் அஸ்வின் மூத்த வீரர் என்பதால் ரோஹித் இவரை ஈகோ காரணமாக எடுக்கவில்லையோ என்ற கேள்வி எழுந்துள்ளது. சமயங்களில் அஸ்வின் மூத்த வீரர் என்பதால் சிலரின் பேச்சை கேட்க யோசிப்பார். அதனால் அஸ்வினை அணியில் ரோஹித் எடுக்கவில்லையோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications